भक्ति दरबार
English

சகலகலாவல்லி மாலை

Sakalakala Valli Malai

स्तोत्र · तमिल · सरस्वती · कुमरगुरुपरर्

  1. வெண்டாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத், தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து, உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம், கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

    Ventaamaraikku andri nin padham thaanga en vellai ullath, thandaamaraikkuth thagaadhu kolo sagam ezhum aliththu, undaan uranga ozhiththaan piththaaga undaakkum vannam, kandaan suvaikol karumbe sakala kalaavalliye.

    क्या मेरे भोले हृदय का शीतल कमल आपके चरणों को धारण करने योग्य नहीं, जैसे सफ़ेद कमल है? हे उन ब्रह्मा द्वारा चखे गए मीठे गन्ने, जो सृष्टि रचते रहते हैं जबकि सातों लोकों के पालक और उन्हें निगलने वाले विष्णु सोते हैं और संहारक शिव पागल-से घूमते हैं! हे सकलकलावल्ली, सारी कलाओं की स्वामिनी!

  2. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும், பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயாசனத்திற், கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற், காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.

    Naadum porutsuvai sorsuvai thoydhara naarkaviyum, paadum paniyir paniththarulvaai pangayaasanaththir, koodum pasumpor kodiye kanadhanak kundrum aimbaar, kaadum sumakkum karumbe sakala kalaavalliye.

    मुझे लोगों द्वारा खोजे जाने वाले अर्थ और शब्दों की मिठास में डूबी चारों प्रकार की कविता गाने की सेवा में लगाइए। हे कमल पर विराजी सुनहरी लता! हे भरे वक्ष और पाँच लटों वाले बालों के वन को धारण करने वाले गन्ने! हे सकलकलावल्ली!

  3. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுது ஆர்ந்து உன் அருட்கடலிற், குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ உளங்கொண்டு தெள்ளித், தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு, களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

    Alikkum sezhundhamizhth thellamudhu aarndhu un arutkadalir, kulikkum padikku endru koodum kolo ulangondu thellith, thelikkum panuvar pulavor kavimazhai sindhak kandu, kalikkum kalaaba mayile sakala kalaavalliye.

    मैं कब आपकी दी हुई समृद्ध तमिल का निर्मल अमृत पीकर आपकी कृपा के सागर में नहा पाऊँगा? हे उस मोरनी, जो कवियों को, जो मन लगाकर अपने पद छानते हैं, कविता की वर्षा बरसाते देखकर आनंदित होती है! हे सकलकलावल्ली!

  4. தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய், வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வட நூற்கடலும், தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று, காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

    Thookkum panuvar thuraithoyndha kalviyum sorsuvai thoi, vaakkum perugap paniththarulvaai vada noorkadalum, thekkum sezhundhamizhch chelvamum thondar sennaavinindru, kaakkum karunaik kadale sakala kalaavalliye.

    मुझे गंभीर पदों की अनेक विधाओं में डूबी विद्या और शब्दों की मिठास से भरी वाणी का आशीर्वाद दीजिए। हे करुणा के सागर, जो अपने भक्तों की जीभ पर संस्कृत विद्या के सागर और तमिल की समृद्ध संपदा दोनों की रक्षा करती हैं! हे सकलकलावल्ली!

  5. பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என், நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந்தாட் கமலத், தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக், கஞ்சத் தவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.

    Panjap pidhantharu seyya porpaadha pangerugam en, nenjath thadaththu alaraadhadhu enne nedundhaat kamalath, thanjath thuvasam uyarththon sennaavum agamum vellaik, kanjath thavisu oththu irundhaai sakala kalaavalliye.

    रुई-से कोमल आपके लाल सुनहरे चरणों का कमल मेरे हृदय के तालाब में क्यों नहीं खिलता? आप हंस-ध्वज वाले ब्रह्मा की जीभ और हृदय में ऐसे रहती हैं मानो लंबी डंडी वाले सफ़ेद कमल के आसन पर हों। हे सकलकलावल्ली!

  6. பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொற் பனுவலும் யான், எண்ணும் பொழுது எளிது எய்த நல்காய் எழுதாமறையும், விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர், கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.

    Pannum baradhamum kalviyum theenjor panuvalum yaan, ennum pozhudhu elidhu eydha nalgaai ezhudhaamaraiyum, vinnum buviyum punalum kanalum vengaalum anbar, kannum karuththum niraindhaai sakala kalaavalliye.

    ऐसा वर दीजिए कि जब भी मैं सोचूँ, संगीत, नृत्य, विद्या और मीठे शब्दों वाले पद मुझे सहज मिल जाएँ। आप बिना लिखे वेदों, आकाश, धरती, जल, अग्नि और प्रचंड वायु में, और अपने भक्तों की आँखों और मन में भरी हैं। हे सकलकलावल्ली!

  7. பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால், கூட்டும்படி நின் கடைக்கண் நல்காய் உளங்கொண்டு தொண்டர், தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம், காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

    Paattum porulum porulaal porundhum payanum enpaal, koottumpadi nin kadaikkan nalgaai ulangondu thondar, theettum kalaiththamizhth theempaal amudham thelikkum vannam, kaattum vellodhimap pede sakala kalaavalliye.

    मुझ पर अपनी कृपा-दृष्टि डालिए ताकि गीत, अर्थ, और अर्थ से मिलने वाला फल, सब मुझमें इकट्ठा हों। हे सफ़ेद हंसिनी, जो भक्तों द्वारा प्रेम से लिखी कलात्मक तमिल के मीठे दूध-अमृत को छानना सिखाती हैं! हे सकलकलावल्ली!

  8. சொல்விற்பனமும் அவதானமும் கவி சொல்ல வல்ல, நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய் நளினாசனம் சேர், செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும், கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

    Solvirpanamum avadhaanamum kavi solla valla, nalviththaiyum thandhu adimaikolvaai nalinaasanam ser, selvikku aridhu endru orukaalamum sidhaiyaamai nalgum, kalvip perunjelvap pere sakala kalaavalliye.

    मुझे शब्दों की कुशलता, अवधान की कला, और कविता रच सकने वाली अच्छी विद्या दीजिए, और मुझे अपना दास बना लीजिए। हे विद्या के महान धन, जो कभी नष्ट नहीं होता, और जो कमल पर विराजी लक्ष्मी के लिए भी दुर्लभ है! हे सकलकलावल्ली!

  9. சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம் என்ன, நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை, நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்ன நாண நடை, கற்கும் பதாம்புயத்தாயே சகல கலாவல்லியே.

    Sorkum porutkum uyiraam meygnaanaththin thotram enna, nirkindra ninnai ninaippavar yaar nilandhoi puzhaikkai, narkunjaraththin pidiyodu arasanna naana nadai, karkum padhaambuyaththaaye sakala kalaavalliye.

    आपका सही ध्यान कौन कर सकता है, जो सच्चे ज्ञान का प्रकट रूप, शब्द और अर्थ का प्राण बनकर स्थित हैं? हे कमल-चरणों वाली माँ, जिनसे धरती छूती सूँड़ वाली सुंदर हथिनी और राजहंस अपनी सुंदर चाल सीखते हैं और लजा जाते हैं! हे सकलकलावल्ली!

  10. மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என், பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம், விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போற், கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.

    Mankanda venkudaik keezhaaga merpatta mannarum en, pankanda alavir paniyach cheyvaai padaippon mudhalaam, vinkanda deivam palkodi undenum vilambil unpol, kankanda deivam ulatho sakala kalaavalliye.

    सफ़ेद छत्रों के नीचे धरती पर राज करने वाले बड़े राजाओं को भी मेरे गीत सुनते ही झुका दीजिए। स्वर्ग में सृष्टिकर्ता ब्रह्मा से लेकर करोड़ों देवता हों, पर सच कहें तो क्या आपके जैसा कोई देवता है जिसे हम अपनी आँखों से देख सकें? हे सकलकलावल्ली!