அபிராமி அம்மைப் பதிகம்
Abhirami Pathigam
தூயதமிழ்ப் பாமாலை சூட்டுதற்கு மும்மதநால், வாயைங் கரன்றாள் வழுத்துவாம் நேயர்நிதம், எண்ணும் புகழ்க்கடவூர் எங்கள் அபிராமவல்லி, நண்ணும் பொற்பாதத்தில் நன்கு.
Thooya thamizhp paamaalai soottudharku mummadha naal, vaaiyaingaran thaal vazhuththuvaam neyar nidham, ennum pugazhk kadavoor engal abiraamavalli, nannum porpaadhaththil nangu.
प्रसिद्ध कडवूर की हमारी अभिरामवल्ली, जिनका भक्त रोज़ ध्यान करते हैं, उनके सुनहरे चरणों में शुद्ध तमिल पदों की माला चढ़ाने के लिए, पहले लटकती सूँड़ और पाँच हाथों वाले गणेश के चरणों की स्तुति करें।
கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவா ராத நட்பும், கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும், சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாத சந்தா னமும், தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும், தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும், துய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய், அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Kalaiyaadha kalviyum kuraiyaadha vayadhum or kabadu vaaraadha natpum, kandraadha valamaiyum kundraadha ilamaiyum kazhupini illaadha udalum, saliyaadha manamum anbagalaadha manaiviyum thavaraadha sandhaanamum, thaazhaadha keerththiyum maaraadha vaarththaiyum thadaigal vaaraadha kodaiyum, tholaiyaadha nidhiyamum konaadha kolum oru thunbamillaadha vaazhvum, thuyya nin paadhaththil anbum udhavip periya thondarodu koottu kandaai, alaiyaazhi arithuyilum maayanadhu thangaiye aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
मुझे कभी न मिटने वाली विद्या, लंबी आयु, छल से मुक्त मित्रता, स्थायी समृद्धि, न ढलने वाली जवानी, रोग से मुक्त शरीर, स्थिर मन, प्रेम करने वाली पत्नी, अच्छी संतान, न घटने वाला यश, न बदलने वाला वचन, बिना रुकावट का दान, न ख़त्म होने वाला धन, न्यायपूर्ण शासन, दुःख रहित जीवन और आपके पावन चरणों में प्रेम दीजिए, और अपने महान भक्तों के साथ जोड़िए। हे लहराते सागर पर योगनिद्रा में सोने वाले विष्णु की बहन, प्राचीन कडवूर के जीवन, अमुदीसर के बाएँ अंग से कभी अलग न होने वाली, तोता थामे कृपालु अभिरामी!
காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும், கர்ணகுண் டலமும்மதி முகமண்டலம்நுதல் கத்தூரி யிட்ட பொட்டும், கூரணிந் திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய கொவ்வையின் கனிய தரமும், குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும், வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணிநூ புரப்பா தமும், வந்தெனது முன்னின்று மந்தகா சமுமாக வல்வினையை மாற்று வாயே, ஆரமணி வானிலுறை தாரகைகள் போலநிறை ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Kaaralaga pandhiyum pandhiyin alangalum kariya puruvach chilaigalum, karna kundalamum madhi mugamandalam nudhal kaththoori itta pottum, kooranindhidu vizhiyum amudha mozhiyunj chiriya kovvaiyin kani adharamum, kumizhanaiya naasiyum kundhanigar dhandhamum kodu sodaana kalamum, vaaranindhirumaandha vanamulaiyum megalaiyum mani noopurap paadhamum, vandhenadhu munnindru mandhagaasamumaaga valvinaiyai maatruvaaye, aaramani vaanilurai thaaragaigal pola nirai aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
अपने काले बालों की लड़ियों और मालाओं, धनुष-सी काली भौंहों, कुंडलों, चाँद-से मुख, माथे के कस्तूरी तिलक, पैनी आँखों, अमृत-सी वाणी, छोटे कोव्वै फल-से होंठों, कुमिऴ कली-सी नाक, चमेली-से दाँतों, तीन रेखाओं वाली गर्दन, सजे वक्ष, करधनी और रत्नजड़ित पायलों के साथ मेरे सामने आकर खड़ी होइए, और मंद मुस्कान से मेरे भारी कर्म बदल दीजिए। हे आकाश के तारों-सी चमकती प्राचीन कडवूर की जीवन, अमुदीसर के साथ रहने वाली कृपालु अभिरामी!
மகரவார் குழைமேல் அடர்ந்துகுமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து, மைக்கயலை வென்றநின் செங்கமல விழியருள் வரம்பெற்ற பேர்க ளன்றோ, செகம்முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற் சிங்கா தனத்தி லுற்றுச், செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு, புகர்முகத்து ஐராவதப் பாக ராகிநிறை புத்தேளிர் வந்து போற்றிப், போகதே வேந்திரன் எனப்புகழவிண்ணிலே புலோமசை யொடும்சு கிப்பர், அகரமுத லாகிவளர் ஆனந்த ரூபியே ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Magaravaar kuzhaimel adarndhu kumizh meedhinil maraindhu vaalaith thurandhu, maikkayalai vendra nin sengamala vizhiyarul varampetra pergal andro, segam muzhudhum otraith thanikkudai kaviththu mer singaadhanaththil utruch, chengolum manuneedhi muraimaiyum petru migu thigiri ulagaandu pinbu, pugarmugaththu airaavadhap paagaraagi nirai puththelir vandhu potrip, boga dhevendhiran enap pugazha vinnile pulomasaiyodum sugippar, agara mudhalaagi valar aanandha roobiye aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
जिन्हें आपकी लाल कमल-सी आँखों की कृपा मिलती है, जो मकर-कुंडलों तक फैली हैं और तलवार और काली मछली को भी हराती हैं, वे ऊँचे सिंहासन से एक छत्र के नीचे सारी धरती पर राजदंड और मनु के न्याय से राज करते हैं; और फिर ऐरावत पर सवार होकर, देवताओं द्वारा इंद्र कहकर सराहे जाते हुए, स्वर्ग में शची के साथ सुख भोगते हैं। हे आदि अक्षर ‘अ’ से बढ़ने वाली आनंद-रूपा, प्राचीन कडवूर की जीवन, कृपालु अभिरामी!
மறிகடல்கள் ஏழையுந் திகிரிஇரு நான்கையும் மாதிரக் கரியெட் டையும், மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையு மோர், பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத் தையும், பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற் புலியாடை உடையா னையும், முறைமுறைக ளாய்ஈன்ற முதியவளாய்ப் பழைமை முறைமை தெரியாத நின்னை, மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்று அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய், அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Marikadalgal ezhaiyum thigiri iru naangaiyum maadhirak kari ettaiyum, maanaagam aanadhaiyum maameru enbadhaiyum maakoormam aanadhaiyum or, poriyaravu thaangivaru buvanam eerezhaiyum puththelir koottaththaiyum, poomagalaiyum thigiri maayavanaiyum araiyir puliyaadai udaiyaanaiyum, muraimuraigalaai eendra mudhiyavalaaip pazhaimai muraimai theriyaadha ninnai, moovulagilullavargal vaalai endru ariyaamal mozhigindradhedhu solvaai, arivu nirai vizhumiyardham aanandha vaariye aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
आपने क्रम से सात सागरों, आठ पर्वतों, आठ दिग्गजों, महानाग, मेरु पर्वत, महाकूर्म, नाग पर टिके चौदह लोकों, देवताओं के समूह, लक्ष्मी, चक्रधारी विष्णु और कमर पर बाघंबर पहनने वाले शिव को जन्म दिया। बताइए, तीनों लोकों के लोग यह जाने बिना कि आप सबसे प्राचीन हैं, आपको बाला, छोटी कन्या, क्यों कहते हैं? हे ज्ञानियों के आनंद-सागर, कृपालु अभिरामी!
வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர அருள்மழை பொழிந்தும் இன்ப, வாரிதியிலே நின்ன தன்பெனுஞ்சிறகினால் வருந்தா மலேய ணைத்துக், கோடாமல் வளர்சிற்றெறும்புமுதல்குஞ்சரக் கூட்டமுத லான சீவ, கோடிகள் தமக்கெல்லாம் புசிக்கும் புசிப்பினைக் குறையாம லேகொ டுத்து, நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும், நின்மலி அகிலங்களுக்கு அன்னை என்றோதும் நீலியென்று ஓது வாரோ, ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ் ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Vaadaamal uyirenum payir thazhaiththongivara arulmazhai pozhindhum inba, vaaridhiyile ninnadhanbenum siraginaal varundhaamale anaiththuk, kodaamal valar sitrerumbu mudhal kunjarak koottam mudhalaana jeeva, kodigal thamakkellaam pusikkum pusippinaik kuraiyaamale koduththu, needaazhi ulagangal yaavaiyum neyamaai ninnudhara pandhi pookkum, ninmali agilangalukku annai endrodhum ninnai neeli endru odhuvaaro, aadaaya naanmaraiyin velviyaal ongupugazh aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
आप कृपा की वर्षा करती हैं ताकि जीवन की फ़सल न मुरझाए बल्कि लहलहाए; अपने प्रेम के पंखों से आप सभी प्राणियों को आनंद-सागर में बिना कष्ट के सँभालती हैं; छोटी चींटी से हाथियों के झुंड तक करोड़ों जीवों को बिना कमी भोजन देती हैं; और विशाल सागर से घिरे सारे लोक प्रेम से आपके भीतर पंक्तियों में खिलते हैं। क्या कोई सारे लोकों की माता आपको निर्दयी कहेगा? हे चारों वेदों के यज्ञों से प्रसिद्ध प्राचीन कडवूर की जीवन, कृपालु अभिरामी!
பல்குஞ் சரந்தொட் டெறும்புகடை யானதொரு பல்லுயிர்க் குங்கல் லிடைப், பட்டதே ரைக்கும் அன் றுற்பவித் திடுகருப் பையுறு சீவ னுக்கும், மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தி னுக்கும், மற்றுமொரு மூவர்க்கும் யார்க்கும் அவரவர் மனச்சலிப் பில்லா மலே, நல்குந் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு நவநிதி உனக்கி ருந்தும், நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந் நகைப்புனக் கேஅல்ல வோ, அல்கலந் தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Palkunjaran thottu erumbu kadaiyaanadhoru palluyirkkung kallidaip, patta theraikkum andru urpaviththidu karuppaiyuru jeevanukkum, malgunj charaasarap porulukkum imaiyaadha vaanavar kuzhaaththinukkum, matrumoru moovarkkum yaarkkum avaravar manach chalippillaamale, nalgum thozhirperumai undaayirundhu migu navanidhi unakkirundhum, naanoruvan varumaiyir siriyanaanaal an nagaippu unakke allavo, algalandhumbar naadu alavedukkum solai aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
आपमें हाथी से चींटी तक हर जीव, पत्थर में फँसे मेंढक, गर्भ में अभी बने जीव, सभी चर-अचर चीज़ों, न झपकने वाली आँखों वाले देवताओं और तीनों महादेवों का बिना थके भरण-पोषण करने की महानता है; और आपके पास नौ निधियाँ हैं। अगर अकेला मैं गरीबी में छोटा रह जाऊँ, तो क्या हँसी आप पर ही नहीं होगी? हे स्वर्ग छूते उपवनों वाले प्राचीन कडवूर की जीवन, कृपालु अभिरामी!
நீடுல கங்களுக்கு ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய், நியமமுடன் முப்பத்திரண்டறம்வளர்க்கின்ற நீமனை வியாய்இ ருந்தும், வீடுவீ டுகள்தோறும் ஓடிப் புகுந்துகால் வேசற்று இலச்சை யும்போய், வெண்துகில் அரைக்கணிய விதியற்று நிர்வாண வேடமுங் கொண்டு கைக்கோர், ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்று உன்மத்த னாகி அம்மா, உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந்தேங்கி உழல்கின்ற தேது சொல்வாய், ஆடுகொடி மாடமிசை மாதர்விளை யாடிவரும் ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Needulagangalukku aadhaaramaai nindru niththamaai muththi vadivaai, niyamamudan muppaththirandaram valarkkindra nee manaiviyaai irundhum, veeduveedugal thorum odip pugundhu kaal vesatru ilachchaiyum poi, ventugil araikkaniya vidhiyatru nirvaana vedamung kondu kaikkor, odendhi naadengum ullandhalarndhu nindru unmaththanaagi ammaa, un kanavan engengum aiyam pugundhu engi uzhalgindradhedhu solvaai, aadukodi maadamisai maadhar vilaiyaadivarum aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
आप विशाल लोकों का आधार हैं, नित्य हैं, मुक्ति का स्वरूप हैं, और बत्तीस धर्मों को पोषती हैं। फिर भी आप जैसी पत्नी के होते हुए, बताइए माँ, आपके पति घर-घर क्यों दौड़ते फिरते हैं, थके पैरों से, लाज छोड़कर, कमर पर सफ़ेद कपड़ा तक नहीं, नग्न, हाथ में भिक्षापात्र लिए, पागल की तरह देश भर में भटककर हर जगह भीख माँगते हैं? हे लहराते ध्वजों वाले महलों पर स्त्रियों के खेलने वाले प्राचीन कडवूर की जीवन, कृपालु अभिरामी!
ஞானந் தழைத்துன் சொரூபத்தைஅறிகின்ற நல்லோர் இடத்தி னிற்போய், நடுவினில் இருந்துவந் தடிமையும்பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு, ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம் இல்லா மலேது ரத்தி, இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்சு இருளற விளக்கேற் றியே, வானந்த மானவிழி அன்னமே உன்னைஎன் அகத்தா மரைப்போ திலே, வைத்துவே றேகவலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர், ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண் ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Gnaanam thazhaiththun sorooobaththai arigindra nallor idaththinir poi, naduvinil irundhu vandhadimaiyum poondavar navitrum upadhesam utkondu, eenandhanaith thalli enadhu naanenum maanam illaamale thuraththi, indhiriya vaayilgalai irugap pudhaiththu nenju irular vilakketriye, vaanandhamaana vizhi annamey unnai en agaththaamaraip podhile, vaiththu vere kavalaiyatru melutra paravasamaagi azhiyaadhador, aanandha vaaridhiyil aazhgindradhu endru kaan aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
मैं कब उन भले लोगों के बीच जाऊँगा जिनका ज्ञान खिल उठा है और जो आपका सच्चा स्वरूप जानते हैं, उनके बीच दास बनकर बैठूँगा और उनका उपदेश ग्रहण करूँगा; नीचता को धकेलकर, ‘मैं’ और ‘मेरा’ का अहं भगाकर, इंद्रियों के द्वार कसकर बंद करके, दीप जलाकर हृदय का अँधेरा मिटाऊँगा; और आपको, हे आकाश-सी विशाल आँखों वाली हंसिनी, अपने हृदय-कमल में बिठाकर, हर दूसरी चिंता छोड़, आपमें मग्न होकर अमर आनंद-सागर में डूबूँगा? बताइए, कृपालु अभिरामी!
சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற தாயா கினாலெ னக்குத், தாயல்ல வோ யான்உன் மைந்த னன்றோ எனது சஞ்சலம் தீர்த்து நின்றன், முலைசுரந் தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன் முந்தானை யால்து டைத்து, மொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளநிலா முறுவல்இன் புற்றரு கில்யான், குலவி விளையாடல்கொண்டருள்மழை பொழிந்து அங்கை கொட்டி வாவென்று அழைத்துக், குஞ்சரமு கன்கந்தனுக்கு இளையன் என்றெனைக் கூறினால் ஈனம் உண்டோ, அலைகடலி லேதோன்றும் ஆராத அமுதமே ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Saladhi ulagaththir saraasarangalai eendra thaayaaginaal enakkuth, thaayallavo yaan un maindhanandro enadhu sanjalam theerththu nindran, mulaisurandhozhugu paalootti en mugaththai un mundhaanaiyaal thudaiththu, mozhigindra mazhalaikku ugandhu kondu ilanilaa muruval inbutru arugil yaan, kulavi vilaiyaadal kondu arulmazhai pozhindhu angai kotti vaa endru azhaiththuk, kunjaramugan kandhanukku ilaiyan endrenaik koorinaal eenam undo, alaikadalile thondrum aaraadha amudhame aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
अगर आप सागर से घिरे इस संसार के सभी चर-अचर प्राणियों को जन्म देने वाली माँ हैं, तो क्या आप मेरी भी माँ नहीं? क्या मैं आपका बेटा नहीं? मेरी परेशानी मिटाइए: अपना बहता दूध पिलाइए, अपने आँचल से मेरा मुँह पोंछिए, मेरी तोतली बोली पर रीझिए, नए चाँद-सी मुस्कुराइए, मुझे अपने पास खेलने दीजिए, कृपा बरसाइए, ताली बजाकर ‘आओ!’ बुलाइए। मुझे गजमुख गणेश और कंदन का छोटा भाई कहने में क्या लाज? हे लहराते सागर से निकले कभी न तृप्त करने वाले अमृत, कृपालु अभिरामी!
கைப்போது கொண்டுன் பதப்போதுதன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன், கண்போதி னாலுன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன், முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னிஉன் ஆல யத்தின், முன்போது வார்தமது பின்போத நினைகிலேன் மோசமே போய்உ ழன்றேன், மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு மைக்கடா மீதேறி யே, மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும், அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Kaippodhu kondun padhappodhu thannil kanappodhum archchikkilen, kanpodhinaal un mugappodhu thannai yaan kandu dharisanai purigilen, muppodhil orupodhum en manap podhile munni un aalayaththin, munpodhuvaar thamadhu pinpodha ninaigilen mosame poi uzhandren, maippodhagaththirku nigarenap podherumaik kadaa meedheriye, maagora kaalan varumpodhu thamiyen manangalangith thiyangum, appodhu vandhun arutpodhu thandharul aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
मैंने अपने हाथों के फूलों से आपके फूल-से चरणों की एक पल भी पूजा नहीं की, न अपनी आँखों के फूलों से आपके मुख-फूल के दर्शन किए; दिन के तीनों समय में एक बार भी मैंने अपने मन-फूल में आपके मंदिर जाने वालों के पीछे चलने की नहीं सोची। मैं छल में भटकता रहा। जब भयानक यम काले हाथी-से भैंसे पर चढ़कर आएगा और मेरा अकेला मन काँपकर बेसुध होगा, तब आकर मुझे अपनी कृपा का फूल दीजिए, कृपालु अभिरामी!
மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த, மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு வேதனை களுந்து ரத்த, பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த பசியென் பதுந் துரத்த, பாவந் துரத்த பதிமோகந் துரத்த பலகா ரியமுந் துரத்த, நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய், நாவறண் டோடிகால் தளர்ந்திடும் என்னை நமனுந் துரத்து வானோ, அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே ஆதிகட வூரின் வாழ்வே, அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே.
Migaiyun thuraththa vem piniyun thuraththa veguliyaanadhun thuraththa, midiyun thuraththa narai thiraiyum thuraththa migu vedhanaigalum thuraththa, pagaiyun thuraththa vanjanaiyun thuraththa pasiyenbadhun thuraththa, paavan thuraththa padhi mogan thuraththa pala kaariyamun thuraththa, nagaiyun thuraththa oozhvinaiyun thuraththa naalun thuraththa veguvaai, naavarandodi kaal thalarndhidum ennai namanun thuraththuvaano, agila ulagangatkum aadhaara deivame aadhi kadavoorin vaazhve, amudheesar orupaagam agalaadha sugapaani arulvaami abiraamiye.
अति, क्रूर रोग, क्रोध, गरीबी, सफ़ेद बाल और झुर्रियाँ, भारी पीड़ा, शत्रु, छल, भूख, पाप, घर का मोह, ढेरों काम, उपहास, पूर्व कर्म और बीतते दिन, सब मेरा पीछा करते हैं, और मैं सूखी जीभ और थके पैरों से भागता हूँ। क्या यम भी मेरा पीछा करेगा? हे सारे लोकों की आधार देवी, प्राचीन कडवूर की जीवन, कृपालु अभिरामी!
கங்கையொடு தும்பையும் அணிந்தவர் வியக்கும் கலாமதியை நிகர்வத னமும், கருணைபொழி விழிகளும் விண்முகில்கள் வெளிறெனக் காட்டிய கருங்கூந் தலும், சங்கையில் லாதொளிரும் மாங்கல்ய தாரணம் தங்குமணி மிடறு மிக்க, சதுர்பெருகு துங்கபா சாங்குசம் இலங்குகர தலமும்விரல் அணியும் அரவும், புங்கவர்க் கமுதருளு மந்தரகு சங்களும் பொலியும் நவமணி நூபுரம், பூண்டசெஞ் சேவடியை நாளும் புகழ்ந்துமே போற்றியென வாழ்த்த விடைமேல், மங்களம் மிகுந்தநின் பதியுடன் வந்தருள்செய் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Gangaiyodu thumbaiyum anindhavar viyakkum kalaamadhiyai nigar vadhanamum, karunai pozhi vizhigalum vinmugilgal veliraenak kaattiya karungoondhalum, sangaiyillaadholirum maangalya dhaaranam thangu mani midaru mikka, chadhur perugu thunga paasaangusam ilangu karathalamum viralaniyum aravum, pungavarkku amudharulum mandhara kuchangalum poliyum navamani noopuram, poonda senjevadiyai naalum pugazhndhume potri ena vaazhththa vidaimel, mangalam migundha nin padhiyudan vandharulsey valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
गंगा और तुंबै फूल धारण करने वाले शिव को भी चकित करने वाला पूर्ण चंद्र-सा आपका मुख; करुणा बरसाती आँखें; बादलों को फीका कर देने वाले काले बाल; चमकते मंगलसूत्र वाली रत्न-सजी गर्दन; ऊँचे पाश और अंकुश थामे हाथ, अँगूठियाँ और नाग-आभूषण; देवताओं को अमृत देने वाले मंदराचल-से वक्ष; और नौ रत्नों की पायल पहने लाल चरण: ताकि मैं रोज़ इनकी स्तुति करके ‘जय हो!’ कह सकूँ, अपने मंगलमय पति के साथ बैल पर आकर कृपा कीजिए, हे उमा, अभिरामी, समृद्ध पावन कडवूर में बसने वाली, शिव के बाएँ अंग की देवी, शुभ आचरण और प्रसिद्ध नाम वाली, शिव स्वामी को आनंद देने वाली!
சந்திர சடாதரி முகுந்த சோதரி துங்க சலசலோ சனமா தவி, சம்ப்ரம பயோதரி சுமங்கலி சுலட்சணி சாற்றருங் கருணா கரி, அந்தரி வராகி சாம் பவி அமர தோதரி அமலை செக சால சூத்ரி, அகிலாத்ம காரணி வினோதசய நாரணி அகண்ட சின்மய பூரணி, சுந்தரி நிரந்தரி துரந்தரி வரைராச சுகுமாரி கௌமாரி உத், துங்ககல் யாணி புஷ் பாஸ்திரம் புயபாணி தொண்டர்கட் கருள்சர் வாணி, வந்தரி மலர்ப்பிரம ராதிதுதி வேதவொலி வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Chandhira sadaadhari mukundha sodhari thunga salasalochana maadhavi, sambrama payodhari sumangali sulakshani saatrarung karunaakari, andhari vaaraahi saambavi amara sodhari amalai jega jaala soothri, agilaathma kaarani vinodha saya naarani akhanda chinmaya poorani, sundhari nirandhari dhurandhari varairaaja sugumaari gaumaari uth, thunga kalyaani pushpaasthiram buyapaani thondargatkarul sarvaani, vandhari malarppirama raadhi thudhi vedha voli valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
आप जटाओं में चंद्रमा धारण करती हैं; मुकुंद की बहन, ऊँची कमल-नयना माधवी; पूर्ण वक्ष वाली, सदा सुहागिन, शुभ लक्षणों वाली, शब्दों से परे करुणा की खान; अंतरी, वाराही, शांभवी, देवताओं की बहन, संसार की माया की डोर थामने वाली निर्मला; सब आत्माओं का कारण, लीला से जीतने वाली नारायणी, अखंड चिन्मय पूर्णता; सुंदरी, नित्या, हर भार उठाने वाली, पर्वतराज की कोमल पुत्री, कौमारी, परम कल्याणी, हाथों में पुष्प-बाण धारण करने वाली, भक्तों पर कृपा करने वाली सर्वाणी। हे उमा, अभिरामी, पावन कडवूर में बसने वाली, जहाँ ब्रह्मा आदि की स्तुति और वेदों की ध्वनि बढ़ती है!
வாசமலர் மருஅளக பாரமும் தண்கிரண மதிமுகமும் அயில்விழிகளும், வள்ளநிகர் முலையுமான் நடையும்நகை மொழிகளும் வளமுடன் கண்டு மின்னார், பாசபந் தத்திடை மனங்கலங் கித்தினம் பலவழியும் எண்ணி யெண்ணிப், பழிபாவம் இன்னதென் றறியாமல் மாயப்ர பஞ்சவாழ் வுண்மை என்றே, ஆசைமே லிட்டுவீ ணாகநாய் போல்திரிந்து அலைவதல் லாமல் உன்றன், அம்புயப் போதெனுஞ் செம்பதம் துதியாத அசடன்மேற் கருணை வருமோ, மாசிலா தோங்கிய குணாகரி பவானிசீர் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Vaasamalar maru alaga baaramum thangirana madhimugamum ayilvizhigalum, vallanigar mulaiyum maan nadaiyum nagai mozhigalum valamudan kandu minnaar, paasabandhaththidai manangalangith thinam palavazhiyum enni ennip, pazhipaavam innadhendru ariyaamal maayap prapanja vaazhvunmai endre, aasaimelittu veenaaga naaipol thirindhu alaivadhallaamal undran, ambuyap podhenunj chempadham thudhiyaadha asadan mer karunai varumo, maasilaadhongiya gunaakari bavaani seer valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
बिजली-सी स्त्रियों के सुगंधित फूलों से सजे बाल, शीतल चाँद-से मुख, पैनी आँखें, भरे वक्ष, हिरण-सी चाल और मुस्कुराती बातें देखकर मेरा मन मोह के बंधनों में डगमगाता है; रोज़ मैं अनेक तरह से सोचता रहता हूँ, यह जाने बिना कि दोष और पाप क्या है, इस मायावी सांसारिक जीवन को सच मानकर, और खोखली कामना में कुत्ते की तरह भटकता हूँ। जो मूर्ख आपके लाल कमल-चरणों की कभी स्तुति नहीं करता, क्या उस पर करुणा आएगी? हे निर्मल गुणों से भरी भवानी, पावन कडवूर की उमा, अभिरामी!
நன்றென்று தீதென்று நவிலுமிவ் விரண்டினுள் நன்றதே உலகி லுள்ளோர், நாடுவார் ஆதலின் நானுமே அவ்விதம் நாடினேன் நாடி னாலும், இன்றென்று சொல்லாமல் நினதுதிருவுள்ளமது இரங்கி யருள்செய்கு வாயேல், ஏழையேன் உய்குவேன் மெய்யான மொழியதுன் இதயமறி யாத துண்டோ, குன்றமெல் லாம்உறைந்து என்றும்அன் பர்க்கருள் குமார தேவனை அளித்த, குமரி மர கதவருணி விமலி பை ரவி கருணை குலவுகிரி ராச புத்ரி, மன்றல்மிகு நந்தன வனங்கள்சிறை அளிமுரல வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Nandrendru theedhendru navilum ivvirandinul nandradhe ulagilullor, naaduvaar aadhalin naanume avvidham naadinen naadinaalum, indrendru sollaamal ninadhu thiruvullamadhu irangi arulseyguvaayel, ezhaiyen uyguven meyyaana mozhiyadhu un idhayamariyaadhadhu undo, kundramellaam uraindhu endrum anbarkkarul kumaara dhevanai aliththa, kumari maragadha varani vimali bairavi karunai kulavu giriraaja puthri, mandralmigu nandhana vanangal sirai alimurala valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
अच्छा और बुरा कहे जाने वाले इन दोनों में संसार के लोग अच्छे को खोजते हैं, इसलिए मैंने भी वही खोजा। फिर भी, यदि आपका पावन हृदय ‘आज नहीं’ कहे बिना पिघलकर कृपा करे, तो मैं ग़रीब बच जाऊँगा; यही सच है। क्या कुछ ऐसा है जो आपका हृदय न जानता हो? हे कन्या, जिन्होंने हर पहाड़ी पर बसने और सदा भक्तों पर कृपा करने वाले कुमरन देव को दिया; हे पन्ने-से रंग वाली, निर्मल भैरवी, करुणामयी पर्वतराज पुत्री; सुगंधित बगीचों में भौंरों के गुंजन वाले पावन कडवूर में बसने वाली उमा, अभिरामी!
ஒருநாள் இரண்டுநாள் அல்லநான் உலகத்து உதித்தஇந் நாள்வ ரைக்கும், ஒழியாத கவலையால் தீராத இன்னல்கொண்டு உள்ளந் தளர்ந்து மிகவும், அருநாண் அற்றிட்ட விற்போல் இருக்குமிவ் வடிமைபாற் கருணை கூர்ந்து, அஞ்சேலெ னச்சொல்லி ஆதரிப் பவர்கள்உனை அன்றியிலை உண்மை யாக, இருநாழி கைப்போதும் வேண்டாது நிமிடத்தில் இவ்வகில புவனத் தையும், இயற்றி அருளுந்திறம் கொண்டநீ ஏழையேன் இன்னல்தீர்த் தருளல் அரிதோ, வருநாவ லூரர்முத லோர்பரவும் இனியபுகழ் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Orunaal irandunaal alla naan ulagaththu udhiththa innaal varaikkum, ozhiyaadha kavalaiyaal theeraadha innalkondu ullandhalarndhu migavum, arunaan atritta virpol irukkum ivvadimaipaar karunai koorndhu, anjel enach cholli aadharippavargal unai andri illai unmaiyaaga, irunaazhigaip podhum vendaadhu nimidaththil ivvagila bhuvanaththaiyum, iyatri arulundhiram konda nee ezhaiyen innal theerththarulal aridho, varu naavaloorar mudhalor paravum iniya pugazh valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
एक-दो दिन नहीं, इस संसार में जन्म लेने के दिन से आज तक मैं अंतहीन चिंता और पीड़ा झेलता रहा हूँ, और मेरा मन टूटी डोरी वाले धनुष की तरह ढीला पड़ गया है। सच में, इस दास पर दया करके ‘डरो मत’ कहने और सहारा देने वाला आपके सिवा कोई नहीं। आप दो घड़ी भी लिए बिना एक मिनट में यह सारा ब्रह्मांड रच सकती हैं; क्या मुझ ग़रीब के दुःख मिटाना आपके लिए कठिन है? हे नावलूर के सुंदरर आदि द्वारा गाई मधुर महिमा वाले पावन कडवूर की उमा, अभिरामी!
எண்ணிக்கை இல்லாத துன்பங்கள் மேன்மேல் ஏறிட் டொறுக்க அந்தோ, எவ்விதம்உளஞ்சகித்து உய்குவேன் இப்பொழுது எடுத்திட்ட சன்மம் இதனில், நண்ணியெள் ளளவுசுக மானதொரு நாளினும் நான்அனு பவித்த தில்லை, நாடெலாம் அறியுமிது கேட்பதேன் நின்னுளமும் நன்றாய் அறிந்தி ருக்கும், புண்ணியம் பூர்வசன னத்தினிற் செய்யாத புலைய னானாலும் நினது, பூரண கடாட்சவீட் சண்ணியஞ்செய்தெனது புன்மையை அகற்றி அருள்வாய், மண்ணவர்கள் விண்ணவர்கள் நித்தமும் பரவும்இசை வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Ennikkai illaadha thunbangal menmel erittorukka andho, evvidham ulanjagiththu uyguven ippozhudhu eduththitta sanmam idhanil, nanniyel lalavu sugamaanadhoru naalinum naan anubaviththadhillai, naadelaam ariyumidhu ketpadhen ninnulamum nandraai arindhirukkum, punniyam poorva sananththinir seyyaadha pulaiyanaanaalum ninadhu, poorana kadaatcha veetchanniyanj cheydhenadhu punmaiyai agatri arulvaai, mannavargal vinnavargal niththamum paravum isai valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
अनगिनत दुःख एक पर एक चढ़कर मुझे सताते हैं। हाय, मेरा मन इसे सहकर कैसे बचे? इस जन्म में मैंने एक भी दिन तिल भर सुख नहीं जाना। सारा देश यह जानता है; पूछना क्या? आपका मन भी इसे अच्छी तरह जानता है। चाहे मैं पिछले जन्मों में कोई पुण्य न करने वाला नीच ही क्यों न हूँ, मुझ पर अपनी पूरी कृपा-दृष्टि डालकर मेरी दीनता मिटाइए, हे पावन कडवूर की उमा, अभिरामी, जिनकी कीर्ति धरती और स्वर्ग के लोग रोज़ गाते हैं!
தெரிந்தோ அலாதுதெரி யாமலோ இவ்வடிமை செய்திட்ட பிழையி ருந்தால், சினங்கொண்ட தோர்கணக் காகவை யாதுநின் திருவுளம் இரங்கி மிகவும், பரிந்துவந் தினியேனும் பாழ்வினையில் ஆழ்ந்துஇனற் படாது நல்வரம் அளித்துப், பாதுகாத் தருள்செய்ய வேண்டும்அண் டாண்டவுயிர் பரிவுடன் அளித்த முதல்வி, புரந்தரன் போதன்மா தவனாதி யோர்கள்துதி புரியும் பாதாம் புயமலர்ப், புங்கவி புரந்தரி புரந்தகி புராதனி புராணி திரி புவனே சுவரி, மருந்தினும் நயந்தசொற் பைங்கிளி வராகி எழில் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Therindho alaadhu theriyaamalo ivvadimai seydhitta pizhaiyirundhaal, sinangonda thorganakkaaga vaiyaadhu nin thiruvulam irangi migavum, parindhu vandhu iniyenum paazhvinaiyil aazhndhu inar padaadhu nalvaram aliththup, paadhugaaththarulseyya vendum andaanda uyir parivudan aliththa mudhalvi, purandharan podhan maadhavan aadhiyorgal thudhi puriyum paadhaambuya malarp, pungavi purandhari purandhagi puraadhani puraani thiri bhuvanesvari, marundhinum nayandha sorpaingili vaaraahi ezhil valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
यदि इस दास से जाने-अनजाने कोई भूल हुई हो, तो क्रोध में उसका हिसाब मत रखिए; अपने पावन हृदय को पिघलाकर बड़ी ममता से आइए, और अब से ऐसे वर दीजिए कि मैं बुरे कर्मों में डूबकर दुःख न पाऊँ; मेरी रक्षा कीजिए, हे आदि माता, जिन्होंने प्रेम से हर लोक के हर प्राणी को जीवन दिया; जिनके कमल-चरणों की इंद्र, ब्रह्मा, विष्णु आदि स्तुति करते हैं; हे श्रेष्ठा, रक्षिका, पुर-संहारिणी, पुरातनी, त्रिभुवनेश्वरी; दवा से भी मीठे बोल वाली हरी तोती; वाराही; पावन कडवूर की उमा, अभिरामी!
வஞ்சகக் கொடியோர்கள் நட்புவேண் டாமலும் மருந்தினுக் காவேண் டினும், மறந்துமோர் பொய்ம்மொழி சொலாமலுந் தீமையாம் வழியினிற் செல்லா மலும், விஞ்சுநெஞ் சதனில் பொறாமைதரியாமலும் வீண்வம்பு புரியா மலும், மிக்கபெரியோர்கள்சொலும் வார்த்தைதள் ளாமலும் வெகுளியவை கொள்ளாமலும், தஞ்சமென நினது உபய கஞ்சந்துதித்திடத் தமியேனுக் கருள்பு ரிந்து, சர்வகா லமுமெனைக் காத்தருள வேண்டினேன் சலக்கயல்கள் விழியை அனைய, வஞ்சியர்செவ்வாய்நிகரும்வாவியாம்பன்மலரும் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Vanjagak kodiyorgal natpu vendaamalum marundhinukkaa vendinum, marandhumor poymmozhi solaamalun theemaiyaam vazhiyinir sellaamalum, vinju nenjadhanil poraamai thariyaamalum veenvambu puriyaamalum, mikka periyorgal solum vaarththai thallaamalum veguliyavai kollaamalum, thanjamena ninadhu ubaya kanjan thudhiththidath thamiyenukku arulpurindhu, sarvakaalamum enaik kaaththarula vendinen salakkayalgal vizhiyai anaiya, vanjiyar sevvaai nigarum vaavi aambal malarum valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
क्रूर छलियों की दोस्ती न चाहना; दवा के लिए भी, भूलकर भी झूठ न बोलना; बुराई के रास्ते पर न चलना; मन में ईर्ष्या न पनपने देना; बेकार झगड़े न करना; बड़े-बुज़ुर्गों की बात न टालना; क्रोध के वश न होना: मुझ अकेले को यह कृपा दीजिए ताकि मैं आपके दोनों कमल-चरणों को अपनी शरण मानकर उनकी स्तुति करूँ, और हर समय मेरी रक्षा कीजिए, यही मेरी विनती है। हे पावन कडवूर की उमा, अभिरामी, जहाँ तालाबों में कुमुद उछलती मछली-सी आँखों वाली स्त्रियों के लाल होंठों जैसे खिलते हैं!
எனதின்னல் இன்னபடி யென்றுவே றொருவர்க்கு இசைத்திடவும் அவர்கள் கேட்டு, இவ்வின்னல்தீர்த் துள்ளத்து இரங்கிநன் மைகள்செயவும் எள்ளளவும் முடியாது நின், உனதமரு வுங்கடைக் கண்அருள் சிறிதுசெயின் உதவாத நுண்மணல் களும், ஓங்குமாற்று உயர்சொர்ண மலையாகும் அதுவன்றி உயர்அகில புவனங் களைக், கனமுடன் அளித்துமுப் பத்திரண் டறங்களும் கவின்பெறச்செய்யும் நின்னைக், கருதுநல் அடியவர்க்கு எளிவந்து சடுதியில் காத்துரட் சித்த தோர்ந்து, வனசநிகர் நின்பாதம் நம்பினேன் வந்தருள்செய் வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Enadhinnal innapadi endru verorvarkku isaiththidavum avargal kettu, ivvinnal theerththu ullaththu irangi nanmaigal seyavum ellalavum mudiyaadhu nin, unadhamaruvung kadaikkan arul siridhu seyin udhavaadha nunmanalgalum, ongu maatru uyar sorna malaiyaagum adhuvandri uyar agila bhuvanangalaik, ganamudan aliththu muppaththirandu arangalum kavinperach cheyyum ninnaik, karudhu nal adiyavarkku elivandhu sadudhiyil kaaththu ratchiththadhu orndhu, vanasanigar nin paadham nambinen vandharulsey valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
दूसरों को अपने दुःख बताना, और उनका सुनकर, दया करके उन्हें मिटाने में मदद करना, तिल भर भी भला नहीं कर सकता। पर यदि आप अपनी आँख के कोने से थोड़ी भी कृपा करें, तो बेकार महीन रेत भी शुद्ध सोने का पर्वत बन जाती है। और यह जानकर कि ऊँचे लोकों को रचने और बत्तीस धर्मों को चमकाने वाली आप, आपका ध्यान करने वाले भले भक्तों के पास सहज आकर तुरंत उनकी रक्षा करती हैं, मैंने आपके कमल-चरणों पर भरोसा किया है: आकर कृपा कीजिए, हे पावन कडवूर की उमा, अभिरामी!
கருநீல வடிவமார் மாடேறி உத்தண்ட கனதண்ட வெம்பா சமும், கைக்கொண்டு சண்டமா காலன்முன் எதிர்க்கமார்க் கண்டன் வெருண்டு நோக்க, இருநீல கண்டனெனும் நின்பதியை உள்ளத்தில் இன்புகொண் டருச்சனை செய, ஈசன்அவ் விலிங்கம் பிளப்பநின் னொடுதோன்றி யமனைச் சூலத்தி லூன்றிப், பெருநீல மலையென நிலத்தில்அன் னவன்விழப் பிறங்கு தாளால் உதைத்துப், பேசுமுனி மைந்தனுக் கருள்செய்தது உனதரிய பேரருளின் வண்ண மலவோ, வருநீல மடமாதர் விழியென்ன மலர்வாவி வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Karuneela vadivamaar maaderi uththanda ganadhanda vembaasamum, kaikkondu sandamaa kaalan mun edhirkka maarkkandan verundu nokka, iruneelakandanenum nin padhiyai ullaththil inbukondu archchanai seya, eesan avvilingam pilappa ninnodu thondri yamanaich choolaththil oondrip, peruneela malaiyena nilaththil annavan vizhap pirangu thaalaal udhaiththup, pesu muni maindhanukku arulseydhadhu unadhariya perarulin vannamalavo, varuneela madamaadhar vizhiyenna malarvaavi valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
जब भयंकर यम गहरे नीले भैंसे पर चढ़कर, भारी दंड और क्रूर पाश लिए आया, और अपने हृदय में आनंद से आपके नीलकंठ पति की पूजा करते मार्कंडेय ने डरकर उसे देखा, तो प्रभु ने वह लिंग फाड़ा, आपके साथ प्रकट हुए, यम को त्रिशूल से ऐसा दबाया कि वह विशाल नीले पर्वत की तरह धरती पर गिरा, उसे अपने चमकते पैर से ठोकर मारी, और मुनि-पुत्र पर कृपा की। क्या यह आपकी दुर्लभ महान कृपा का ही रूप नहीं था? हे पावन कडवूर की उमा, अभिरामी, जहाँ फूलों के तालाब युवतियों की काली आँखों जैसे खिलते हैं!
சகலசெல் வங்களுந் தரும்இமய கிரிராச தனயைமா தேவி நின்னைச், சத்யமாய் நித்யமுள் ளத்தில்து திக்கும்உத் தமருக்கு இரங்கி மிகவும், அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம் அழகுபுகழ் பெருமை இளமை, அறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி ஆகுநல் ஊழ்நு கர்ச்சி, தொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ சுகானந்த வாழ்வளிப் பாய், சுகிர்தகுண சாலி பரி பாலி அநு கூலி திரி சூலி மங் களவி சாலி, மகவுநான் நீதாய் அளக்கொ ணாதோ மகிமை வளர்திருக் கடவூ ரில்வாழ், வாமி சுப நேமி புகழ் நாமி சிவ சாமிமகிழ் வாமி அபி ராமி உமையே.
Sagala selvangalun tharum imaya giriraaja thanayai maadhevi ninnaich, chathyamaai niththam ullaththil thudhikkum uththamarukku irangi migavum, agilamadhil noyinmai kalvi dhana dhaanyam azhagu pugazh perumai ilamai, arivu sandhaanam vali thunivu vaazhnaal vetri aagu nal oozh nugarchchi, thogai tharum padhinaaru perum thandharuli nee sugaanandha vaazhvalippaai, sugirdha guna saali paripaali anukooli thirisooli mangala visaali, magavu naan nee thaai alakkonaadho magimai valar thirukkadavooril vaazh, vaami subha nemi pugazh naami siva saami magizh vaami abiraami umaiye.
हे महादेवी, हिमालय राज की पुत्री, सारी संपदा देने वाली! जो उत्तम जन रोज़ सच्चे मन से आपकी स्तुति करते हैं, उन पर बड़ी दया करके आप इस संसार में सोलह वरदान देती हैं: आरोग्य, विद्या, धन, अन्न, सुंदरता, यश, बड़प्पन, जवानी, ज्ञान, संतान, बल, साहस, लंबी आयु, विजय, सौभाग्य और भोग, और उन्हें सुख और आनंद भरा जीवन देती हैं। हे शुभ गुणों वाली, पालनहारी, सदा अनुकूल, त्रिशूलधारी, मंगल से विशाल! मैं आपकी संतान हूँ और आप मेरी माँ: क्या आपकी महिमा अपरंपार नहीं? हे पावन कडवूर की उमा, अभिरामी!