கோளறு பதிகம்
Kolaru Pathigam
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल आरंभ।
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி, மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே, ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Veyuru tholibangan vidamunda kandan miganalla veenai thadavi, maasaru thingal Gangai mudimel anindhen ulame pugundha adhanaal, gnaayiru thingal sevvaai budhan viyaazham velli sani paambirandu mudane, aasaru nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
बाँस जैसे चिकने कंधों वाली उमा को आधा अंग देने वाले, विष को कंठ में रखने वाले, सुंदर वीणा बजाने वाले, और सिर पर निर्मल चाँद और गंगा धारण करने वाले प्रभु मेरे मन में आ बसे हैं। इसलिए सूर्य, चंद्र, मंगल, बुध, बृहस्पति, शुक्र, शनि और राहु-केतु, सब उनके भक्तों के लिए अच्छे, बहुत अच्छे और निर्बाध रहेंगे।
என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க எருதேறி யேழை யுடனே, பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால், ஒன்பதொ டொன்றொடேழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்க ளவைதாம், அன்பொடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Enbodu kombodaamai ivai maarbilanga erudheri ezhai udane, ponpodhi maththamaalai punalsoodi vandhen ulame pugundha adhanaal, onbadhodu ondrodezhu padhinettodu aarum udanaaya naalgal avaidhaam, anbodu nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
वे अपनी देवी के साथ बैल पर सवार होकर, छाती पर हड्डियाँ, सूअर का दाँत और कछुए का खोल चमकाते, सुनहरी धतूरे की माला और गंगा धारण किए आए और मेरे मन में बस गए। इसलिए अशुभ माने जाने वाले सारे नक्षत्र भी उनके भक्तों के लिए प्रेम से अच्छे, बहुत अच्छे रहेंगे।
உருவளர் பவளமேனி யொளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல், முருகலர் கொன்றைதிங்கண் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசைதெய்வ மான பலவும், அருநெதி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Uruvalar pavala meni oli neeranindhu Umaiyodum vellai vidaimel, murugalar kondrai thingal mudimel anindhen ulame pugundha adhanaal, Thirumagal kalaiyadhoordhi seyamaadhu boomi thisai dheivamaana palavum, arunedhi nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
मूंगे जैसे लाल शरीर पर चमकती भस्म लगाए, उमा के साथ सफ़ेद बैल पर, सिर पर सुगंधित कोन्रै फूल और चाँद धारण किए प्रभु मेरे मन में आ बसे हैं। इसलिए लक्ष्मी, हिरण पर सवार दुर्गा, विजय की देवी, धरती माता और दिशाओं के देवता उनके भक्तों को दुर्लभ धन देंगे और अच्छे, बहुत अच्छे रहेंगे।
மதிநுதன் மங்கையோடு வடபா லிருந்து மறையோது மெங்கள் பரமன், நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடுநோய்க ளான பலவும், அதிகுணம் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Madhinudhal mangaiyodu vadapaal irundhu maraiyodhum engal paraman, nadhiyodu kondrai maalai mudimel anindhen ulame pugundha adhanaal, kodhiyuru kaalan angi Namanodu thoodhar kodu noigalaana palavum, adhigunam nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
चाँद जैसे माथे वाली देवी के साथ बरगद के नीचे बैठकर वेद सिखाने वाले, सिर पर नदी और कोन्रै की माला पहनने वाले हमारे परमेश्वर मेरे मन में आ बसे हैं। इसलिए उग्र मृत्यु, अग्नि, अपने दूतों के साथ यमराज, और हर कठोर रोग दयालु होकर उनके भक्तों के लिए अच्छे, बहुत अच्छे रहेंगे।
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள்த னோடும் விடையேறு நங்கள் பரமன், துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும் மிகையான பூத மவையும், அஞ்சிடு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Nanjani kandan endhai madavaal thanodum vidaiyeru nangal paraman, thunjirul vanni kondrai mudimel anindhen ulame pugundha adhanaal, venjina avunarodu urumidiyum minnum migaiyaana bhootham avaiyum, anjidu nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
कंठ में विष धारण करने वाले मेरे पिता, अपनी युवा देवी के साथ बैल पर सवार हमारे परमेश्वर, सिर पर वन्नि पत्ते और कोन्रै फूल पहने मेरे मन में आ बसे हैं। इसलिए क्रूर, क्रोधी असुर, गरजती बिजली और उग्र प्राकृतिक शक्तियाँ डरकर पीछे हटेंगी और उनके भक्तों के लिए अच्छी, बहुत अच्छी रहेंगी।
வாள்வரி யதளதாடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய், நாண்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால், கோளரி யுழுவையோடு கொலையானை கேழல் கொடுநாக மோடு கரடி, ஆளரி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Vaalvari adhaladhaadai vari kovanaththar madavaal thanodum udanaai, naanmalar vanni kondrai nadhisoodi vandhen ulame pugundha adhanaal, kolari uzhuvaiyodu kolaiyaanai kezhal kodunaagamodu karadi, aalari nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
धारीदार बाघंबर और धारीदार लंगोटी पहनने वाले प्रभु अपनी युवा देवी के साथ, ताज़े फूल, वन्नि, कोन्रै और नदी धारण किए आए और मेरे मन में बस गए। इसलिए शेर और बाघ, जानलेवा हाथी, सूअर, ज़हरीले साँप और भालू, सब उनके भक्तों के लिए अच्छे, बहुत अच्छे रहेंगे।
செப்பிள முலைநன்மங்கை யொருபாக மாக விடையேறு செல்வ னடைவார், ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும் வினையான வந்து நலியா, அப்படி நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Seppila mulai nanmangai orubaagamaaga vidaiyeru selvan adaivaar, oppila madhiyum appum mudimel anindhen ulame pugundha adhanaal, veppodu kulirum vaadham migaiyaana piththum vinaiyaana vandhu naliyaa, appadi nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
बैल पर सवार कृपालु प्रभु, जिनके आधे अंग में सुंदर युवा देवी हैं, सिर पर बेजोड़ नया चाँद और जल धारण किए मेरे मन में आ बसे हैं। इसलिए बुखार और ठंड, जोड़ों का दर्द, बढ़ा हुआ पित्त और कर्मों के फल सताने नहीं आएँगे; वे उनके भक्तों के लिए अच्छे, बहुत अच्छे रहेंगे।
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து மடவாள் தனோடும் உடனாய், வாண்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால், ஏழ்கடல் சூழிலங்கை அரையன்ற னோடும் இடரான வந்து நலியா, ஆழ்கடல் நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Velpada vizhi seidhandru vidaimel irundhu madavaal thanodum udanaai, vaanmadhi vanni kondrai malarsoodi vandhen ulame pugundha adhanaal, ezhkadal soozh Ilangai araiyan thanodum idaraana vandhu naliyaa, aazhkadal nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
जिन्होंने एक बार अपनी दृष्टि से कामदेव को जला दिया, वे बैल पर अपनी युवा देवी के साथ, चमकता चाँद, वन्नि और कोन्रै फूल धारण किए आए और मेरे मन में बस गए। इसलिए कोई संकट, सागरों से घिरी लंका के राजा से भी, सताने नहीं आएगा; गहरा समुद्र भी उनके भक्तों के लिए अच्छा, बहुत अच्छा रहेगा।
பலபல வேடமாகும் பரனாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன், சலமக ளோடெருக்கு முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், மலர்மிசை யோனுமாலு மறையோடு தேவர் வருகால மான பலவும், அலைகடல் மேருநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Palapala vedamaagum paran naari baagan pasuverum engal paraman, salamagalodu erukku mudimel anindhen ulame pugundha adhanaal, malarmisaiyonum maalum maraiyodu thevar varukaalam aana palavum, alaikadal meru nalla avai nalla nalla adiyaar avarkku migave.
अनेक रूप धरने वाले, देवी को आधा अंग देने वाले, बैल पर सवार हमारे परमेश्वर, सिर पर गंगा देवी और अर्क के फूल धारण किए मेरे मन में आ बसे हैं। इसलिए कमल पर बैठे ब्रह्मा, विष्णु, वेद, देवता, आने वाला सारा समय, उमड़ता समुद्र और मेरु पर्वत, सब उनके भक्तों के लिए अच्छे, बहुत अच्छे रहेंगे।
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன், மத்தமு மதியுநாக முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால், புத்தரோ டமணைவாதில் அழிவிக்கும்அண்ணல் திருநீறு செம்மை திடமே, அத்தகு நல்லநல்ல வவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.
Koththalar kuzhaliyodu visayarku nalgu gunamaaya veda vigirdhan, maththamum madhiyum naagam mudimel anindhen ulame pugundha adhanaal, puththarodu amanai vaadhil azhivikkum annal thiruneeru semmai thidame, aththagu nalla nalla avai nalla nalla adiyaar avarkku migave.
फूलों से भरे केशों वाली देवी के साथ शिकारी के रूप में अर्जुन पर कृपा करने वाले अद्भुत प्रभु, सिर पर धतूरा, चाँद और साँप धारण किए मेरे मन में आ बसे हैं। बौद्धों और जैनों को शास्त्रार्थ में हराने वाली इन प्रभु की पवित्र भस्म निश्चय ही सच्ची और शक्तिशाली है; ऐसी सब बातें उनके भक्तों के लिए अच्छी, बहुत अच्छी रहेंगी।
தேனமர் பொழில்கொளாலை விளைசெந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ, நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன், தானுறு கோளுநாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
Thenamar pozhilkol aalai vilai sennel thunni valar semponn engum nigazha, Naanmugan aadhiyaaya Biramaapuraththu marai gnaana gnaana munivan, thaanuru kolum naalum adiyaarai vandhu naliyaadha vannam uraisei, aanasol maalaiyodhum adiyaargal vaanil arasaalvar aanai namadhe.
चार मुखों वाले ब्रह्मा द्वारा पहले बसाए गए ब्रह्मपुरम में, जहाँ शहद भरे उपवन, गन्ने के कोल्हू, घने लाल धान और हर ओर लाल सोना है, वेद-ज्ञानी मुनि ने यह शब्दों की माला गाई ताकि ग्रह और नक्षत्र भक्तों को कभी न सताएँ। जो भक्त इसे पढ़ेंगे, वे स्वर्ग में राज करेंगे — यह हमारा पक्का वचन है।
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल समापन।