துஞ்சலும் துஞ்சல்
Thunjalum Thunjal
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल आरंभ।
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும், நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும், வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற், றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே.
Thunjalum thunjalilaadha pozhdhinum, nenjagam naindhu ninaimin naal thorum, vanjagam atradi vaazhththa vandha koo, tranjavu udhaiththana anjezhuththume.
सोते हुए या जागते हुए, हर दिन पिघले मन से उनका स्मरण करो: पंचाक्षर ने ही मृत्यु को लात मारकर डराया, जब वह भोलेपन से प्रभु के चरणों की स्तुति करने वाले बालक को लेने आई।
மந்திர நான்மறை யாகி வானவர், சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன, செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க், கந்தியுள் மந்திரம் அஞ்செ ழுத்துமே.
Mandhira naanmarai aagi vaanavar, sindhaiyul nindravar thammai aalvana, sendhazhal ombiya semmai vedhiyark, kandhiyul mandhiram anjezhuththume.
पंचाक्षर ही मंत्र हैं और चारों वेद भी; वे उन देवताओं पर राज करते हैं जो उन्हें मन में रखते हैं; और पवित्र अग्नि की सेवा करने वाले सच्चे वैदिक ब्राह्मणों के लिए वे संध्या पूजा के मंत्र हैं।
ஊனில் உயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர், ஞான விளக்கினை யேற்றி நன்புலத், தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர், ஆன கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
Oonil uyirppai odukki onsudar, gnaana vilakkinai etri nanpulath, thenai vazhithirandhu eththuvaarkkidar, aana keduppana anjezhuththume.
जो शरीर के भीतर श्वास को शांत करते हैं, ज्ञान का उज्ज्वल दीप जलाते हैं और भीतर के शहद रूपी प्रभु की स्तुति का मार्ग खोलते हैं, उनके सारे संकट पंचाक्षर मिटा देते हैं।
நல்லவர் தீயர் எனாது நச்சினர், செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ, கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத், தல்லல் கெடுப்பன அஞ்செ ழுத்துமே.
Nallavar theeyar enaadhu nachchinar, sellal kedach Siva muththi kaattuva, kolla Namandramar kondu pomidath, thallal keduppana anjezhuththume.
अच्छा हो या बुरा, जो भी पंचाक्षर की चाह रखता है, उसका दुख मिटता है और उसे शिव में मुक्ति का मार्ग दिखता है; और जब यम के दूत मारकर ले जाने आते हैं, तब भी पंचाक्षर वह कष्ट मिटा देते हैं।
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத், தங்குள பூதமும் அஞ்ச ஐம்பொழில், தங்கர வின்படம் அஞ்சுந் தம்முடை, அங்கையில் ஐவிரல் அஞ்செ ழுத்துமே.
Kongalar vanmadhan vaali aindhagath, thangula bhoodhamum anja aimpozhil, thangaravin padam anjun thammudai, angaiyil aiviral anjezhuththume.
जैसे बलवान कामदेव के पाँच सुगंधित पुष्प-बाण, हमारे भीतर के पाँच तत्व, पाँच उपवन, नाग के पाँच फन और अपनी हथेली की पाँच उँगलियाँ, वैसे ही हैं पाँच पवित्र अक्षर।
தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும், அம்மையி னுந்துணை அஞ்செ ழுத்துமே.
Thummal irumal thodarndha pozhdhinum, vemmai naragam vilaindha pozhdhinum, immai vinaiyadarththu eidhum pozhdhinum, ammaiyinum thunai anjezhuththume.
जब छींक और खाँसी रुकने का नाम न लें, जब नरक की तपन उठे, जब इस जीवन के कर्म कुचलते हुए आएँ, तब पंचाक्षर माँ से भी बढ़कर साथी हैं।
வீடு பிறப்பை அறுத்து மெச்சினர், பீடை கெடுப்பன பின்னை நாள்தொறும், மாடு கொடுப்பன மன்னு மாநடம், ஆடிஉ கப்பன அஞ்செ ழுத்துமே.
Veedu pirappai aruththu mechchinar, peedai keduppana pinnai naal thorum, maadu koduppana mannu maanadam, aadi ugappana anjezhuththume.
जो पंचाक्षर को प्रिय मानते हैं, उनके लिए ये जन्म का चक्र काटकर मुक्ति देते हैं, कष्ट मिटाते हैं, और दिन-प्रतिदिन धन देते हैं; ये प्रभु के शाश्वत महान नृत्य में आनंदित होते हैं।
வண்டம ரோதி மடந்தை பேணின, பண்டை யிராவணன் பாடி உய்ந்தன, தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க், கண்டம் அளிப்பன அஞ்செ ழுத்துமே.
Vandamar odhi madandhai penina, pandai Iraavanan paadi uyndhana, thondargal kondu thudhiththa pinnavark, kandam aliippana anjezhuththume.
भौंरों को खींचने वाले केशों वाली युवा देवी ने पंचाक्षर को प्रिय माना; इन्हें गाकर पुराने समय में रावण का उद्धार हुआ; और इनसे स्तुति करने वाले भक्तों को ये सारा ब्रह्मांड दे देते हैं।
கார்வணன் நான்முகன் காணு தற்கொணாச், சீர்வணச் சேவடி செவ்வி நாள்தொறும், பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட், கார்வணம் ஆவன அஞ்செ ழுத்துமே.
Kaarvanan Naanmugan kaanudharkonaach, seervanach chevadi sevvi naal thorum, pervanam pesip pidhatrum piththargat, kaarvanam aavana anjezhuththume.
जो प्रेम में पागल भक्त हर दिन उन सुंदर लाल चरणों की महिमा बड़बड़ाते रहते हैं जिन्हें बादल-वर्ण विष्णु और चतुर्मुख ब्रह्मा भी न खोज सके, उनके लिए पंचाक्षर ही मन का आनंद बन जाते हैं।
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச், சித்தத் தவர்கள் தெளிந்து தேறின, வித்தக நீறணி வார்வி னைப்பகைக், கத்திரம் ஆவன அஞ்செ ழுத்துமே.
Puththar saman kazhukkaiyar poikolaach, siththaththavargal thelindhu therina, viththaga neeraniwaar vinaip pagaik, kaththiram aavana anjezhuththume.
जिनके मन ने बौद्धों और जैनों की झूठी बातें स्वीकार नहीं कीं, उन्होंने पंचाक्षर को साफ़ समझा और उन पर भरोसा किया; पवित्र भस्म लगाने वाले ज्ञानियों के लिए ये कर्म रूपी शत्रु के विरुद्ध अस्त्र बन जाते हैं।
நற்றமிழ் ஞானசம் பந்தன் நான்மறை, கற்றவன் காழியர் மன்னன் உன்னிய, அற்றமில் மாலையீ ரைந்தும் அஞ்செழுத், துற்றன வல்லவர் உம்ப ராவரே.
Natramizh Gnaanasambandhan naanmarai, katravan Kaazhiyar mannan unniya, atramil maalai eeraindhum anjezhuth, thutrana vallavar umbar aavare.
उत्तम तमिल के ज्ञानसंबंदर, चारों वेदों के ज्ञाता, सीरकाळि के लोगों के प्रमुख द्वारा रचे पंचाक्षर पर ये दस निर्दोष पद जो पढ़ सकते हैं, वे देवता बन जाएँगे।
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल समापन।