Bhakti Darbar
हिन्दी

Kanda Shashti Kavasam

கந்த சஷ்டி கவசம்

Stotras · Tamil · Murugan · by Devaraya Swamigal

  1. துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில், பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர், சஷ்டி கவசந் தனை.

    Thuthipporkku valvinai pom thunbam pom, nenjil pathipporkku selvam paliththu kathiththongum, nishtaiyum kaikoodum nimalar arul Kandhar, Sashti kavasam thanai.

    For those who recite it, heavy karma and sorrow fall away; for those who keep it in the heart, wealth comes and keeps growing, and steady meditation is attained: such is the Kanda Shashti Kavasam, the grace of the pure Lord Kandan.

  2. அமரர் இடர்தீர அமரம் புரிந்த, குமரன் அடி நெஞ்சே குறி.

    Amarar idartheera amaram purindha, Kumaran adi nenje kuri.

    O heart, fix your aim on the feet of Kumaran, who fought a war to end the troubles of the gods.

  3. சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்

    Shashtiyai nokka Saravana Bavanaar, sishtarukku udhavum sengkadhir velon

    Saravanabhava, who looks kindly on those keeping the Shashti fast and helps the good, the lord whose spear glows like the red sun,

  4. பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாட கிண்கிணி யாட

    Paadham irandil panmanich sadhangai, geedham paada kinkini aada

    with many-jewelled anklet bells on both his feet that sing a tune, the little bells swaying as he dances,

  5. மையல் நடஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து

    Maiyal nadam seiyum mayil vaahananaar, kaiyil velaal enaik kaakka endru vandhu

    he who rides the peacock that dances in rapture has come, spear in hand, to protect me.

  6. வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக

    Vara vara Velaayudhanaar varuga, varuga varuga mayilon varuga

    Come, come, Velayudha, lord who bears the spear; come, come, come, rider of the peacock.

  7. இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக

    Indhiran mudhalaa endisai potra, mandhira vadivel varuga varuga

    Come, come, lord of the beautiful spear that is itself a mantra, praised by Indra and the gods of the eight directions.

  8. வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக

    Vaasavan marugaa varuga varuga, nesak kuramagal ninaivon varuga

    Come, come, son-in-law of Indra; come, you who hold dear the hill maiden Valli.

  9. ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக

    Aarumugam padaiththa aiyaa varuga, neeridum Velavan niththam varuga

    Come, lord with six faces; come every day, spear-bearer who wears the sacred ash.

  10. சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹண பவனார் சடுதியில் வருக

    Sirakiri Velavan seekkiram varuga, Saravana Bavanaar saduthiyil varuga

    Come quickly, spear-bearer of Sirakiri hill; come at once, Saravanabhava.

  11. ரஹண பவச ரரரர ரரர ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி

    Rahana bavasa rararara rarara, rihana bavasa ririririri ririri

    Ra-ha-na-ba-va-sa: the six syllables of Saravanabhava’s name, chanted in mystic order to call him.

  12. விணபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென

    Vinabava Saravana veeraa namo nama, nibava Saravana nira nira nirena

    Salutations again and again to the hero Saravana, whose name’s syllables are chanted in every order; may he shine forth.

  13. வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக

    Vasara hanaba varuga varuga, asurar kudi keduththa aiyaa varuga

    Va-sa-ra-ha-na-ba, come, come; come, lord who destroyed the clans of the demons.

  14. என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

    Ennai aalum ilaiyon kaiyil, panniru aayudham paasaangusamum

    In the hands of the young lord who rules me are twelve weapons, among them the noose and the goad;

  15. பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

    Parandha vizhigal panniru ilanga, viraindhenaik kaakka Velon varuga

    his twelve wide eyes shine. Come swiftly to protect me, lord of the spear.

  16. ஐயும் கிலியும் அடைவுடன் சௌவும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்

    Aiyum giliyum adaivudan sauvum, uyyoli sauvum uyiraiyum giliyum

    The seed syllables aim, klim and sauh in their order, the saving light of sauh, and klim that is life itself,

  17. கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்

    Giliyum sauvum kilaroli aiyum, nilaipetru en mun niththamum olirum

    klim, sauh and the bright-shining aim: may they stand firm and glow before me every day.

  18. சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக

    Shanmugan neeyum thaniyoli ovvum, kundaliyaam Siva Guhan dhinam varuga

    You, Shanmukha, the one matchless light; Shiva’s son Guha, who is the kundalini power: come every day.

  19. ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்

    Aaru mugamum animudi aarum, neeridu netriyum neenda puruvamum

    His six faces and six jewelled crowns, his ash-marked foreheads and long brows,

  20. பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

    Panniru kannum pavalach sevvaayum, nanneri netriyil navamanich chuttiyum

    twelve eyes and lips red as coral, a nine-gem ornament on each noble forehead,

  21. ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்

    Eeraaru seviyil ilagu kundalamum, aariru thinbuyath thazhagiya maarbil

    glittering earrings in his twelve ears; and on the handsome chest between twelve strong shoulders

  22. பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

    Palbhooshanamum padhakkamum dhariththu, nanmani poonda navarathna maalaiyum

    he wears many ornaments and pendants, and a necklace of the nine precious gems,

  23. முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும்

    Muppuri noolum muththani maarbum, seppazhagudaiya thiruvayir undhiyum

    the three-stranded sacred thread, a chest adorned with pearls, a lovely belly and navel,

  24. துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்

    Thuvanda marungil sudaroli pattum, navarathnam padhiththa narseeraavum

    shining silk on his slender waist, and a fine sash set with the nine gems,

  25. இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க

    Iruthodai azhagum inai muzhandhaalum, thiruvadi adhanil silamboli muzhanga

    his two beautiful thighs and pair of knees, and the anklets ringing loud on his holy feet:

  26. செககண செககண செககண செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென

    Segagana segagana segagana segana, mogamoga mogamoga mogamoga mogena

    Segagana, mogamoga: the jingling of his anklets as he comes.

  27. நகநக நகநக நகநக நகென டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

    Naganaga naganaga naganaga nagena, diguguna digudigu diguguna diguna

    Naganaga, diguguna: the rhythm of his dancing steps.

  28. ரரரர ரரரர ரரரர ரரர ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    Rararara rararara rararara rarara, ririririri ririririri ririririri ririri

    Rararara, ririri: sacred sounds ringing out as he draws near.

  29. டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு

    Dudududu dudududu dudududu dududu, dagudagu digudigu dangu dinguku

    Dudududu, dagudagu, digudigu: the beat of the drums as he arrives.

  30. விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து

    Vindhu vindhu mayilon vindhu, mundhu mundhu Murugavel mundhu

    Come, come, rider of the peacock; come quickly before all, Lord Murugan.

  31. என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்

    Endranai aalum Eragach selva, maindhan vendum varam magizhndhu udhavum

    Treasure of Eragam (Swamimalai), who rules me, you gladly grant this child the boons he asks for;

  32. லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா வினோதனென்று

    Laalaa laalaa laalaa vesamum, leelaa leelaa leelaa vinodhan endru

    you take on playful forms and delight in your divine play; and so,

  33. உன்திரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க

    Un thiruvadiyai urudhi endru ennum, en thalai vaiththun inaiyadi kaakka

    I hold your holy feet as my one sure refuge: may your two feet, placed on my head, protect it.

  34. என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க

    Ennuyirkku uyiraam iraivan kaakka, panniru vizhiyaal baalanaik kaakka

    May the Lord who is the life of my life protect me; may he guard this child with his twelve eyes.

  35. அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க

    Adiyen vadhanam azhaguvel kaakka, podipunai netriyaip punidhavel kaakka

    May the beautiful spear protect my face; may the holy spear protect my ash-smeared forehead.

  36. கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க

    Kadhirvel irandum kanninaik kaakka, vidhisevi irandum Velavar kaakka

    May the shining spear protect my two eyes; may the spear-bearer protect my two ears.

  37. நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க

    Naasigal irandum nalvel kaakka, pesiya vaaydhanaip peruvel kaakka

    May the good spear protect my two nostrils; may the great spear protect my mouth that speaks.

  38. முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

    Muppaththirupal munaivel kaakka, seppiya naavaich sevvel kaakka

    May the sharp-tipped spear protect my thirty-two teeth; may the red spear protect my tongue.

  39. கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க

    Kannam irandum kadhirvel kaakka, ennilang kazhuththai iniyavel kaakka

    May the shining spear protect my two cheeks; may the gentle spear protect my tender neck.

  40. மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க

    Maarbai irathina vadivel kaakka, serila mulaimaar thiruvel kaakka

    May the jewelled spear protect my chest; may the holy spear protect my breasts.

  41. வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க

    Vadivel iruthol valampera kaakka, pidarigal irandum peruvel kaakka

    May the beautiful spear keep my two shoulders strong; may the great spear protect the nape of my neck.

  42. அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க

    Azhagudan mudhugai arulvel kaakka, pazhu padhinaarum paruvel kaakka

    May the gracious spear protect my back; may the mighty spear protect my sixteen ribs.

  43. வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க

    Vetrivel vayitrai vilangave kaakka, sitridai azhagurach sevvel kaakka

    May the victorious spear protect my belly; may the red spear protect my slender waist.

  44. நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் குறியிரண்டும் அயில்வேல் காக்க

    Naanaang kayitrai nalvel kaakka, aan kuri irandum ayilvel kaakka

    May the good spear protect my waist cord; may the sharp spear protect my private parts.

  45. பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க

    Pittam irandum peruvel kaakka, vattak kudhaththai valvel kaakka

    May the great spear protect my buttocks; may the strong spear protect my lower opening.

  46. பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க

    Panaiththodai irandum paruvel kaakka, kanaikkaal muzhandhaal kadhirvel kaakka

    May the mighty spear protect my two strong thighs; may the shining spear protect my shins and knees.

  47. ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகளி ரண்டும் கருணைவேல் காக்க

    Aiviral adiyinai arulvel kaakka, kaigal irandum karunaivel kaakka

    May the gracious spear protect my feet and their five toes; may the merciful spear protect my two hands.

  48. முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க

    Munkai irandum muranvel kaakka, pinkai irandum pinnaval irukka

    May the fierce spear protect my two forearms, and may the goddess stay with the backs of my arms;

  49. நாவில் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க

    Naavil Sarasvathi natrunaiyaaga, naabik kamalam nalvel kaakka

    may Saraswati be a good companion on my tongue; may the good spear protect the lotus of my navel.

  50. முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க

    Muppaal naadiyai munaivel kaakka, eppozhudhum enai edhirvel kaakka

    May the sharp spear protect the three main channels of my body; may the spear that meets every foe protect me at all times.

  51. அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க

    Adiyen vasanam asaivula neram, kadugave vandhu kanagavel kaakka

    Whenever I, your servant, speak or move, may the golden spear come swiftly and protect me.

  52. வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க

    Varum pagal thannil vachchiravel kaakka, araiyirul thannil anaiyavel kaakka

    May the diamond-hard spear protect me through the day; may the spear stay close and protect me at dusk.

  53. ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க

    Emaththil saamaththil edhirvel kaakka, thaamadham neekkich chadhurvel kaakka

    May the spear that faces every foe protect me in the watches of the night and at midnight; may the skilful spear protect me without delay.

  54. காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க

    Kaakka kaakka kanagavel kaakka, nokka nokka nodiyil nokka

    Protect me, protect me, golden spear, protect me; watch over me, watch over me in an instant.

  55. தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட

    Thaakka thaakka thadaiyarath thaakka, paarkka paarkka paavam podipada

    Strike, strike, strike down every obstacle; look on me, look on me, so my sins are crushed to dust.

  56. பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்

    Billi sooniyam perumpagai agala, valla bhootham valaattigap peygal

    May black magic, sorcery and bitter enmity leave me. Powerful spirits and tormenting ghosts,

  57. அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

    Allal paduththum adangaa muniyum, pillaigal thinnum puzhakkadai muniyum

    the unruly muni spirit that brings misery, the backyard spirit that preys on children,

  58. கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்

    Kollivaayp peygalum kuralaip peygalum, pengalaith thodarum biramaraatchadharum

    fire-mouthed ghosts, dwarf ghosts, and the brahma-rakshasas that stalk women:

  59. அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும்

    Adiyanaik kandaal alarik kalangida, Irisi Kaatteri iththunba senaiyum

    may they shriek and tremble when they see me, along with Irisi, Katteri and all this army of torment;

  60. எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்

    Ellilum iruttilum edhirppadum annarum, kanapoosai kollum Kaaliyodu anaivarum

    the beings that confront us by day and in the dark, the fierce Kali who takes great offerings, and all the rest,

  61. விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர் களும்

    Vittaangaararum migupala peygalum, thandiyakkaararum sandaalargalum

    the spirits that cling and will not leave, hosts of other ghosts, the tormentors and the cruel ones,

  62. என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும்

    En peyar sollavum idi vizhundhodida, aanai adiyinil arumbaavaigalum

    may they flee as if struck by lightning at the very mention of my name. Little effigies buried under an elephant’s footprint,

  63. பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்

    Poonai mayirum pillaigal enbum, nagamum mayirum neelmudi mandaiyum

    cat hair and children’s bones, nails and hair, and skulls with long hair,

  64. பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்

    Paavaigaludane pala kalasaththudan, manaiyir pudhaiththa vanjanai thanaiyum

    the wicked charms buried in the house with dolls and many pots,

  65. ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும்

    Ottiyach cherukkum ottiya paavaiyum, kaasum panamum kaavudan sorum

    the arrogance of sorcery and its dolls, the coins, money and rice offered in black rites,

  66. ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட

    Odhum anjanamum oruvazhip pokkum, adiyanaik kandaal alaindhu kulaindhida

    spells chanted over black salve and charms that trap one’s path: may they all scatter and fall apart when they see me.

  67. மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட

    Maatraar vanjagar vandhu vanangida, kaaladhoodhaal enaik kandaal kalangida

    May enemies and deceivers come and bow before me; may the messengers of death tremble when they see me,

  68. அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட

    Anji nadungida arandu purandida, vaayvittu alari madhikettu oda

    shaking with fear, rolling in terror, screaming aloud and running away out of their wits.

  69. படியினில் முட்ட பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு

    Padiyinil mutta paasak kayitraal, kattudan angam kadharidak kattu

    Bind them with your noose so they are thrown to the ground; tie their limbs until they cry out.

  70. கட்டி உருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு

    Katti uruttu kaalkai muriya, kattu kattu kadharidak kattu

    Bind them and roll them so their arms and legs break; bind them, bind them till they cry out.

  71. முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக

    Muttu muttu muzhigal pidhungida, sekku sekku sedhil sedhilaaga

    Strike them, strike them till their eyes bulge; crush them, crush them into pieces.

  72. சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால்

    Sokku sokku soorpagaich sokku, kuththu kuththu koorvadi velaal

    Stun them, stun them, stun the kin of the demon Sura; pierce them, pierce them with the sharp, beautiful spear.

  73. பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக

    Patru patru pagalavan thanaleri, thanaleri thanaleri thanaladhuvaaga

    Seize them, seize them; blaze like the fire of the sun, blaze, blaze until they are ashes.

  74. விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும்

    Viduvidu velai verundadhu oda, puliyum nariyum punnari naayum

    Hurl the spear so they flee in fright. Tigers, jackals, foxes and dogs,

  75. எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான்

    Eliyum karadiyum iniththodarndhu oda, thelum paambum seyyaan pooraan

    rats and bears: may they run far from me. Scorpions, snakes, millipedes and centipedes:

  76. கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க

    Kadivida vishangal kadiththuyar angam, eriya vishangal elidhinil irangga

    when their poison bites and rises through the body, may it quickly drain away.

  77. ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம்

    Olippum sulukkum oruthalai noyum, vaadham sayiththiyam valippup piththam

    Sprains and twists, migraine, rheumatism, chills, fits and disorders of bile,

  78. சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி

    Soolai sayam kunmam sokkuch chirangu, kudaichchal silandhi kudalvip piridhi

    colic, consumption, ulcers, itching skin disease, gnawing pains, boils and disorders of the bowels,

  79. பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி

    Pakkap pilavai padarthodai vaazhai, kaduvan paduvan kaiththaal silandhi

    abscesses in the side, sores spreading on the thighs, painful swellings and boils on the hands and feet,

  80. பற்குத் தரணை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

    Parkuth tharanai paru arai yaappum, ellaap piniyum endranaik kandaal

    toothache, swellings in the groin, and every other illness: whenever they see me,

  81. நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக

    Nillaadhu oda neeyenakku arulvaai, eeraezh ulagamum enakkuravaaga

    bless me so that they flee without stopping. May all fourteen worlds be my kin;

  82. ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்

    Aanum pennum anaivarum enakkaa, mannaal arasarum magizhndhuravaagavum

    may all men and women be on my side, and may the kings who rule the earth gladly be my friends.

  83. உன்னைத் துதிக்க உன் திரு நாமம் சரஹண பவனே சைலொளி பவனே

    Unnaith thudhikka un thiru naamam, Saravana Bavane sailoli Bavane

    To praise you, I call your holy names: Saravanabhava, light that rose on the mountain,

  84. திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே

    Thiripura Bavane thigazholi Bavane, paripura Bavane pavamoli Bavane

    son of the Goddess of the three cities, lord of shining light, lord of the ringing anklets, light that ends the round of births.

  85. அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்

    Hari thiru marugaa Amaraapadhiyaik, kaaththuth thevargal kadunjirai viduththaai

    Nephew of Vishnu, you saved Amaravati, the city of the gods, and freed the gods from their cruel prison.

  86. கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை

    Kandhaa Guhane kadhirvelavane, Kaarththigai maindhaa Kadambaa Kadambanai

    Kanda, Guha, bearer of the shining spear, son of the Krittika mothers, wearer of kadamba flowers, who destroyed the demons Kadamban

  87. இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா

    Idumbanai azhiththa iniyavel Murugaa, Thanigaachalane Sankaran pudhalvaa

    and Idumban: Murugan of the sweet spear, lord of Tiruttani hill, son of Shankara,

  88. கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா

    Kadhirgaamaththurai kadhirvel Murugaa, Pazhanip padhivaazh baala Kumaaraa

    Murugan of the shining spear who dwells at Kataragama, child Kumara who lives at Palani,

  89. ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா

    Aavinan kudivaazh azhagiya Velaa, Sendhil maamalaiyurum Sengalvaraayaa

    handsome spear-bearer who lives at Avinankudi, Sengalvaraya who dwells at Tiruchendur and on the great hill,

  90. சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

    Samaraapurivaazh Shanmugaththarase, kaaraar kuzhalaal Kalaimagal nandraai

    King Shanmukha who lives at Samarapuri: may Saraswati, goddess of learning, with hair dark as rain clouds, kindly

  91. என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்

    En naa irukka yaan unaip paada, enaith thodarndhirukkum endhai Muruganai

    dwell on my tongue so that I may sing of you. Murugan, my father, who is always with me,

  92. பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை

    Paadinen aadinen paravasamaaga, aadinen naadinen Aavinan poodhiyai

    I sang of him and danced in rapture; I danced and sought the sacred ash of Avinankudi

  93. நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி

    Nesamudan yaan netriyil aniyap, paasa vinaigal patradhu neengi

    to wear it lovingly on my forehead, so that the bonds of attachment and karma fall away,

  94. உன்பதம் பெறவே உன்னரு ளாக அன்புடன் இரக்ஷி அன்னமுஞ் சொன்னமும்

    Unpadham perave unnarulaaga, anbudan rakshi annamum sonnamum

    and I reach your feet by your grace. Protect me with love; may food and gold

  95. மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க

    Meththa meththaaga Velaayudhanaar, siththi petradiyen sirappudan vaazhga

    come in plenty from Velayudha, and may I, your servant, find fulfilment and live well.

  96. வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க

    Vaazhga vaazhga mayilon vaazhga, vaazhga vaazhga vadivel vaazhga

    Glory, glory to the rider of the peacock; glory, glory to the beautiful spear.

  97. வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்

    Vaazhga vaazhga malaik guru vaazhga, vaazhga vaazhga malaik kuramagaludan

    Glory, glory to the guru of the hills; glory, glory to him with Valli, the maiden of the hills.

  98. வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க

    Vaazhga vaazhga vaaranath thuvasam, vaazhga vaazhga en varumaigal neenga

    Glory, glory to his rooster banner; glory, glory to him, and may my poverty be gone.

  99. எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும்

    Eththanai kuraigal eththanai pizhaigal, eththanai adiyen eththanai seyinum

    However many my failings, however many my mistakes, whatever I, your servant, may do,

  100. பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே

    Petravan nee guru poruppadhu un kadan, petraval kuramagal petravalaame

    you are my father and guru, and forgiving me is your duty; Valli, the hill maiden, is my mother.

  101. பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்

    Pillai endru anbaayp piriyam aliththu, maindhan en meedhun manamagizhndharulith

    Treat me lovingly as your child, give me your affection, and bless me, your son, with a glad heart;

  102. தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய

    Thanjam endradiyaar thazhaiththida arulsei, Kandhar Sashti kavasam virumbiya

    bless your devotees who come to you for refuge, so they may flourish. This Kanda Shashti Kavasam,

  103. பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும்

    Baalan Devaraayan pagarndhadhaik, kaalaiyil maalaiyil karuththudan naalum

    which the devoted young Devaraya composed: morning and evening, every day, with attention,

  104. ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேசமுடன் ஒரு நினைவது வாகிக்

    Aasaaraththudan angam thulakki, nesamudan oru ninaivadhuvaagi

    after bathing and with proper observance, with love and a single-pointed mind,

  105. கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்

    Kandhar Sashtik kavasam idhanaich, sindhai kalangaadhu dhiyaanippavargal

    those who meditate on this Kanda Shashti Kavasam with an unwavering mind,

  106. ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஓதியே செபித்து உகந்துநீ றணிய

    Orunaal muppaththaaru uruk kondu, odhiye jebiththu ugandhu neeraniya

    reciting it thirty-six times in a day and joyfully wearing the sacred ash,

  107. அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர்

    Ashtadhikkullor adangalum vasamaaych, thisaimannar enmar seyaladhu arulvar

    will win over everyone in the eight directions, and the eight guardians of the directions will lend them their help.

  108. மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

    Maatralar ellaam vandhu vananguvar, navagol magizhndhu nanmai aliththidum

    All their enemies will come and bow to them; the nine planets will be pleased and bring them good.

  109. நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர்

    Navamadhan enavum nallezhil peruvar, endha naalum eerettaay vaazhvar

    They will gain beauty like a new Kama, the god of love, and live every day as if sixteen.

  110. கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்

    Kandhar kai velaam kavasaththadiyai, vazhiyaay kaana meyyaay vilangum

    This kavasam is the spear in Kanda’s hand; for those who take it as their path, it shines as truth.

  111. விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்

    Vizhiyaal kaana verundidum peygal, pollaadhavaraip podipodiyaakkum

    Ghosts take fright at a single glance of it; it grinds the wicked to dust;

  112. நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி

    Nallor ninaivil nadanam puriyum, sarva saththuru sangaaraththadi

    it dances in the minds of the good; it is the destroyer of all enemies.

  113. அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்

    Arindhenadhu ullam ashtalakshmigalil, Veeralakshmikku virundhunavaagach

    My heart knows him: as a feast for Vira Lakshmi, goddess of valour among the eight Lakshmis,

  114. சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த

    Soorapadhmaavaith thuniththa kaiyadhanaal, irubaththezhvarkku uvandhamudhaliththa

    with the hand that cut down Surapadman, he gladly gave nectar to the celestials;

  115. குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி

    Gurubaran Pazhanik kundrinil irukkum, chinnak kuzhandhai sevadi potri

    he is the supreme guru, the little child who stays on Palani hill: praise to his red feet.

  116. எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி

    Enaith thaduththaatkola endranadhu ullam, meviya vadivurum Velavaa potri

    Praise to you, spear-bearer, who took form in my heart to stop me from straying and make me your own.

  117. தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி

    Thevargal senaapathiye potri, kuramagal manamagizh kove potri

    Praise to the commander of the gods’ army; praise to the king who delights the heart of Valli, the hill maiden.

  118. திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி

    Thiramigu dhivya dhegaa potri, Idumbaayudhane Idumbaa potri

    Praise to you of mighty, divine form; praise to the lord whom Idumban serves.

  119. கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி

    Kadambaa potri Kandhaa potri, vetchi punaiyum Vele potri

    Praise to you who wear kadamba flowers; praise to Kanda; praise to the lord who wears vetchi blossoms.

  120. உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம்

    Uyargiri kanaga sabaikkor arase, mayil nadamiduvoi malaradi saranam

    King of the golden hall on the high mountain, you who dance on the peacock: I take refuge at your flower-soft feet.

  121. சரணம் சரணம் சரஹண பவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்

    Saranam saranam Saravanabava Om, saranam saranam Shanmugaa saranam

    Refuge, refuge, Om Saravanabhava; refuge, refuge, Shanmukha, you are my refuge.