விநாயகர் அகவல்
Vinayagar Agaval
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை, நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலம்செய், துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச், சங்கத் தமிழ் மூன்றும் தா.
Paalum thelitheenum paagum paruppumivai, naalum kalandhunakku naan tharuven kolamsei, thungak karimugaththu thoomaniye neeyenakkuch, sangath thamizh moondrum thaa.
दूध, साफ़ शहद, गुड़ की चाशनी और दाल — इन चारों को मिलाकर मैं तुम्हें अर्पित करूँगा। हे सुंदर गज-मुख वाले निर्मल रत्न, बदले में मुझे शास्त्रीय तमिल की तीनों विधाएँ दो: काव्य, संगीत और नाटक।
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்
Seedhak kalabach chendhaamaraip poom, paadhach chilambu palavisai paadap
उनके शीतल चंदन लगे, लाल कमल जैसे कोमल चरणों की पायल अनेक सुर गाती है,
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
Ponnarai naanum poonthugil aadaiyum, vannamarungil valarndhazhagerippap
उनकी सुंदर कमर पर सोने की करधनी और कोमल रेशमी वस्त्र बढ़ती सुंदरता से चमकते हैं,
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
Pezhai vayirum perumbaarak kodum, vezha mugamum vilangu sindhooramum
उनका गोल पेट, बड़ा भारी दाँत, हाथी का मुख और चमकता लाल सिंदूर,
அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
Anju karamum angusa paasamum, nenjir kudikonda neela meniyum
अंकुश और पाश थामे उनके पाँच हाथ, और मेरे मन में घर कर चुका उनका नीला शरीर,
நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
Naandra vaayum naaliru puyamum, moondru kannum mummadhach chuvadum
लटकती सूँड़ और मुख, आठ कंधे, तीन आँखें और मद के तीन निशान,
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
Irandu seviyum ilangu pon mudiyum, thiranda muppuri nool thigazholi maarbum
दो कान, चमकता सोने का मुकुट, और मोटे तीन धागों वाले जनेऊ से दमकती छाती —
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே
Sorpadham kadandha thuriya meignaana, arpudham nindra karpagak kalire
हे कल्पवृक्ष जैसे इच्छा पूरी करने वाले गज, जो शब्दों से परे तुरीय अवस्था के सच्चे ज्ञान का चमत्कार बनकर स्थित हैं,
முப்பழ நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
Muppazha nugarum mooshiga vaagana, ippozhudhu ennai aatkola vendith
हे मूषक पर सवार, तीनों फलों का स्वाद लेने वाले — अभी इसी पल मुझे अपनाने की इच्छा से,
தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
Thaayaai enakkuth thaanezhundharuli, maayaap piravi mayakkam aruththuth
तुम खुद माँ की तरह मेरे पास आए, अंतहीन जन्मों का भ्रम काट दिया,
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
Thirundhiya mudhal aindhezhuththum thelivaaip, porundhave vandhen ulandhanil pugundhu
और मेरे मन में आकर बस गए, पवित्र आदि पंचाक्षर को स्पष्ट करते हुए,
குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென
Guruvadivaagik kuvalayandhannil, thiruvadi vaiththu thiramidhu porulena
तुमने गुरु का रूप लिया, इस धरती पर अपने पावन चरण रखे, और दिखाया: यही मार्ग है, यही सत्य है।
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
Vaadaa vagaithaan magizhndhenakkaruli, kodaayudhaththaal koduvinai kalaindhe
तुमने खुशी से ऐसी कृपा की कि मैं कभी न मुरझाऊँ, और अपने दाँत रूपी अस्त्र से मेरे कठोर कर्म मिटा दिए;
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
Uvattaa upadhesam pugattiyen seviyil, thevittaadha gnaanath thelivaiyum kaatti
तुमने मेरे कान में ऐसा उपदेश डाला जो कभी फीका नहीं पड़ता, और ऐसे ज्ञान की स्पष्टता दिखाई जिससे मन कभी नहीं भरता;
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
Aimpulan thannai adakkum upaayam, inburu karunaiyin inidhenakkarulik
अपनी मधुर, आनंद भरी करुणा से तुमने मुझे पाँचों इंद्रियों को वश में करने का उपाय सिखाया;
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
Karuvigal odungum karuththinai ariviththu, iruvinai thannai aruththirul kadindhu
तुमने वह अवस्था बताई जहाँ सारी इंद्रियाँ शांत हो जाती हैं, अच्छे-बुरे दोनों कर्म काटे और अंधकार भगाया;
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
Thalamoru naangum thandhenakkaruli, malamoru moondrin mayakkam aruththe
तुमने मुझे ईश्वर के निकट पहुँचने की चारों अवस्थाएँ दीं, और तीनों मलों का भ्रम काट दिया;
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
Onbadhu vaayil oru mandhiraththaal, aimpulak kadhavai adaippadhum kaatti
तुमने दिखाया कि नौ द्वारों वाले इस शरीर में एक मंत्र से पाँचों इंद्रियों के दरवाज़े कैसे बंद किए जाते हैं;
ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
Aaraadhaaraththu angusa nilaiyum, peraa niruththip pechchurai aruththe
तुमने छहों चक्रों पर अंकुश जैसा नियंत्रण मुझमें स्थायी रूप से जमा दिया, और व्यर्थ बातों को खत्म कर दिया;
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
Idai pingalaiyin ezhuththariviththuk, kadaiyil suzhumunaik kabaalamum kaatti
तुमने इड़ा और पिंगला नाड़ियों के अक्षर सिखाए, और अंत में सिर के शिखर तक पहुँचती सुषुम्ना दिखाई;
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
Moondru mandalaththin muttiya thoonin, naandrezhu paambin naavil unarththik
तुमने मुझे उस सर्प-शक्ति का अनुभव कराया जो शरीर के तीन मंडलों से होकर जाते स्तंभ में ऊपर उठती है;
குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
Kundaliyadhanir koodiya asabai, vindezhu mandhiram velippada uraiththu
तुमने कुंडलिनी से जुड़े उस मौन मंत्र (अजपा) को स्पष्ट बताया जो उठकर प्रकट होता है;
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
Moolaadhaaraththin moondezhu kanalaik, kaalaal ezhuppum karuththariviththe
तुमने सिखाया कि मूलाधार से भड़कने वाली अग्नि को प्राण-वायु से कैसे जगाया जाए;
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி
Amudha nilaiyum aadhiththan iyakkamum, kumudha sagaayan gunaththaiyum koori
तुमने अमृत की अवस्था, सूर्य की गति, और कुमुद के मित्र चंद्रमा का स्वभाव बताया;
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
Idaich chakkaraththin eerettu nilaiyum, udal chakkaraththin uruppaiyum kaattich
तुमने बीच वाले चक्र की सोलह अवस्थाएँ और शरीर के चक्रों के अंग दिखाए;
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப்
Shanmuga thoolamum chathurmuga sookkamum, en mugamaaga inidhenakkarulip
तुमने प्यार से मुझे भीतरी अस्तित्व के स्थूल और सूक्ष्म रूप उनके सभी पहलुओं के साथ दिखाए;
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
Puriyatta kaayam pulappada enakkuth, theriyettu nilaiyum therisanap paduththik
तुमने आठ तत्वों वाले सूक्ष्म शरीर को मेरे लिए स्पष्ट किया और उसकी आठों अवस्थाओं के दर्शन कराए;
கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி
Karuththinil kabaala vaayil kaatti, iruththi muththi inidhenakkaruli
तुमने मेरे मन के भीतर सिर के शिखर का द्वार दिखाया, मुझे वहाँ स्थिर किया और प्यार से मुक्ति दी;
என்னை யறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து
Ennai ariviththu enakkarul seidhu, munnai vinaiyin mudhalaik kalaindhu
तुमने मुझे स्वयं को जानना सिखाया, मुझ पर कृपा की, और पुराने कर्मों की जड़ उखाड़ दी;
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
Vaakkum manamum illaa manolayam, thekkiye endran sindhai theliviththu
तुमने मुझे उस शांति से भर दिया जहाँ न वाणी रहती है न मन, और मेरे विचार निर्मल कर दिए;
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
Irulveli irandukku ondridam enna, arul tharum aanandhaththu azhuththi en seviyil
तुमने मुझे कृपा देने वाले उस आनंद में डुबो दिया जो अंधकार और प्रकाश दोनों से परे एक ही स्थान है, और मेरे कान में
எல்லை யில்லா ஆனந் தம்அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
Ellai illaa aanandham aliththu, allal kalaindhe arulvazhi kaattich
असीम आनंद दिया, मेरा दुख मिटाया, और कृपा का मार्ग दिखाया;
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
Saththaththin ulle Sadhaasivam kaattich, siththaththin ulle Sivalingam kaatti
तुमने ध्वनि के भीतर सदाशिव दिखाए, और मेरे अपने मन के भीतर शिवलिंग दिखाया;
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
Anuvirku anuvaai appaalukku appaalaaik, kanumutri nindra karumbulle kaatti
तुमने उस परमेश्वर को दिखाया जो अणु से भी छोटा और परे से भी परे है, जैसे पकी गाँठदार ईख के भीतर की मिठास;
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
Vedamum neerum vilanga niruththik, koodumeith thondar kuzhaaththudan kootti
तुमने पवित्र वेश और भस्म को मुझ पर शोभित किया, और मुझे सच्चे भक्तों की संगति में मिला दिया;
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
Anjak karaththin arumporul thannai, nenjak karuththin nilaiariviththuth
तुमने मेरे हृदय की गहराई में पंचाक्षर मंत्र का अनमोल अर्थ समझाया;
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே
Thaththuva nilaiyaith thandhenai aanda, viththaga Vinaayaga viraikazhal sarane
तुमने मुझे सत्य की अवस्था दी और अपना बना लिया — हे ज्ञानी विनायक, मैं तुम्हारे सुगंधित चरणों की शरण लेता हूँ।