பிடித்த பத்து
Pidithapathu
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल आरंभ।
உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் றனக்கு, வம்பெனப் பழுத்தென் குடிமுழு தாண்டு வாழ்வற வாழ்வித்த மருந்தே, செம்பொருட் டுணிவே சீருடைக் கழலே செல்வமே சிவபெரு மானே, எம்பொருட் டுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Umbargatku arase ozhivara niraindha yogame ootraiyen thanakku, vambenap pazhuththu en kudi muzhudhu aandu vaazhvara vaazhviththa marundhe, semporut thunive seerudaik kazhale selvame Sivaperumaane, emporuttu unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
देवताओं के राजा, बिना किसी खालीपन के सब में भरे योग, वह औषधि जो मुझ मलिन के लिए बिना माँगे पकी, मेरे पूरे कुल पर राज किया और इस जीवन से परे का जीवन दिया; परम सत्य की निश्चितता, महिमामय चरण, मेरे धन, शिव प्रभु — अपने लिए मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
விடைவிடா துகந்த விண்ணவர் கோவே வினையனே னுடையமெய்ப் பொருளே, முடைவிடா தடியேன் மூத்தற மண்ணாய் முழுப்புழுக் குரம்பையிற் கிடந்து, கடைபடா வண்ணம் காத்தெனை ஆண்ட கடவுளே கருணைமா கடலே, இடைவிடா துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Vidaividaadhu ugandha vinnavar kove vinaiyanen udaiya meipporule, mudaividaadhu adiyen mooththara mannaai muzhuppuzhuk kurambaiyil kidandhu, kadaipadaa vannam kaaththenai aanda kadavule karunaimaa kadale, idaividaadhu unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
बैल की सवारी पसंद करने वाले देवताओं के राजा, मुझ पापी के सच्चे धन; हे ईश्वर, जिन्होंने मेरी रक्षा करके मुझे अपनाया, ताकि मैं कीड़ों से भरी इस बदबूदार देह-झोपड़ी में पड़ा, बूढ़ा होकर मिट्टी में सड़कर बुरे अंत को न पहुँचूँ; करुणा के महासागर — बिना छोड़े मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்தஆ ரமுதே, பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் றனக்குச், செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெரு மானே, இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Ammaiye appaa oppilaa maniye anbinil vilaindha aaramudhe, poimmaiye perukkip pozhudhinaich churukkum puzhuththalaip pulaiyanen thanakkuch, chemmaiye aaya Sivapadham aliththa selvame Sivaperumaane, immaiye unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
माँ, पिता, बेजोड़ रत्न, प्रेम से पका दुर्लभ अमृत: मुझ नीच को, जिसने केवल झूठ बढ़ाया और अपने दिन गँवाए, तुमने शिव-पद दिया जो स्वयं पूर्णता है। मेरे धन, शिव प्रभु — इसी जीवन में मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே பெருந்திறல் அருந்தவர்க் கரசே, பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே, தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த செல்வமே சிவபெரு மானே, இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Aruludaich chudare alindhador kaniye perundhiral arundhavark arase, poruludaik kalaiye pugazhchchiyaik kadandha bogame yogaththin polive, therulidath thadiyaar sindhaiyut pugundha selvame Sivaperumaane, irulidaththu unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
कृपा से भरी ज्योति, पूरा पका फल, महान और बलशाली तपस्वियों के राजा, अर्थ से भरी कला, स्तुति से परे आनंद, योग की शोभा, स्पष्टता के क्षण में भक्तों के मन में उतरे धन, शिव प्रभु — अंधकार में मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன் உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே, மெய்ப்பதம் அறியா வீறிலி யேற்கு விழுமிய தளித்ததோ ரன்பே, செப்புதற் கரிய செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே, எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Oppunakku illaa oruvane adiyen ullaththul olirgindra oliye, meippadham ariyaa veeriliyerku vizhumiyadhu aliththador anbe, cheppudharku ariya sezhunjudar moorththee selvame Sivaperumaane, eippidaththu unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
बेजोड़ एकमात्र प्रभु, अपने सेवक के मन में चमकती ज्योति; वह प्रेम जिसने मुझ निकम्मे को, जो सच्ची अवस्था नहीं जानता था, सबसे श्रेष्ठ उपहार दिया; शब्दों से परे भरपूर तेज वाले रूप, मेरे धन, शिव प्रभु — अपनी थकान में मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
அறவையேன் மனமே கோயிலாக் கொண்டாண்டளவிலா ஆனந்த மருளிப், பிறவிவே ரறுத்தென் குடிமுழு தாண்ட பிஞ்ஞகா பெரியஎம் பொருளே, திறவிலே கண்ட காட்சியே அடியேன் செல்வமே சிவபெரு மானே, இறவிலே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Aravaiyen maname koyilaak kondu aandu alavilaa aanandham arulip, piravi veraruththu en kudi muzhudhu aanda Pinjagaa periya emporule, thiravile kanda kaatchiye adiyen selvame Sivaperumaane, iravile unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
जटाधारी प्रभु, हमारे महान धन, तुमने मुझ असहाय के मन को अपना मंदिर बनाया, मुझ पर राज किया, असीम आनंद दिया, पुनर्जन्म की जड़ काटी और मेरे पूरे कुल को अपनाया; कृपा से खुले दर्शन, मेरे धन, शिव प्रभु — मरते हुए भी मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
பாசவே ரறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமா றடியனேற் கருளிப், பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே, தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தீ செல்வமே சிவபெரு மானே, ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Paasa ver arukkum pazhamporul thannaip patrumaaru adiyanerku aruli, poosanai ugandhu en sindhaiyut pugundhu poonkazhal kaattiya porule, thesudai vilakke sezhunjudar moorththee selvame Sivaperumaane, Eesane unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
हे धन, जिसने अपने सेवक को बंधन की जड़ काटने वाले प्राचीन सत्य को थामने की कृपा दी, मेरी पूजा से प्रसन्न होकर मेरे मन में आए और अपने फूल-चरण दिखाए; तेजस्वी दीप, भरपूर ज्योति के रूप, मेरे धन, शिव प्रभु — हे ईश, मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற ஆதியே யாதும்ஈ றில்லாச், சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே சிவபெரு மானே, பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப் பிழைத்தவை அல்லையாய் நிற்கும், எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Aththane andar andamaai nindra aadhiye yaadhum eerillaa, siththane paththar sikkenap pidiththa selvame Sivaperumaane, piththane ellaa uyirumaaith thazhaiththup pizhaiththavai allaiyaai nirkum, eththane unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
पिता, आदि प्रभु जो देवता और पूरा ब्रह्मांड बनकर स्थित हैं, अनंत सिद्ध, भक्तों द्वारा कसकर थामे गए धन, शिव प्रभु; हे बावले, हे अद्भुत, जो हर जीव बनकर फलते हो और फिर भी सबसे अलग रहते हो — मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய, தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே, யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Paal ninaindhoottum thaayinum saalap parindhu nee paaviyenudaiya, ooninai urukki ullozhi perukki ulappilaa aanandhamaaya, theninaich chorindhu purampuram thirindha selvame Sivaperumaane, yaanunaith thodarndhu sikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
भूख लगने से पहले ही बच्चे को दूध पिलाने वाली माँ से भी अधिक ममता से तुमने मुझ पापी का शरीर पिघलाया, भीतर की ज्योति बढ़ाई और अनंत आनंद का शहद बरसाया; सदा मेरे साथ रहने वाले धन, शिव प्रभु — मैंने तुम्हारे पीछे चलकर तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
புன்புலால் யாக்கை புரைபுரை கனியப் பொன்னெடுங் கோயிலாப் புகுந்தென், என்பெலாம் உருக்கி எளியையாய் ஆண்ட ஈசனே மாசிலா மணியே, துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காந் தொடக்கெலாம் அறுத்தநற் சோதீ, இன்பமே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
Punpulaal yaakkai puraipurai kaniyap ponnedung koyilaap pugundhen, enbelaam urukki eliyaiyaai aanda Eesane maasilaa maniye, thunbame pirappe irappodu mayakkaam thodakkelaam aruththa narchodhee, inbame unnaich chikkenap pidiththen enge ezhundharuluvadhu iniye.
तुम मांस के इस तुच्छ शरीर में ऐसे आए जैसे यह ऊँचा सुनहरा मंदिर हो, इसके रोम-रोम को पकाया, मेरी सारी हड्डियाँ पिघला दीं, और सुलभ बनकर मुझ पर राज किया; हे ईश, निर्मल रत्न, दुख, जन्म, मृत्यु और भ्रम के हर बंधन को काटने वाली शुभ ज्योति, मेरे आनंद — मैंने तुम्हें कसकर पकड़ लिया है। अब तुम कहाँ जाओगे?
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रंबलम — चिदंबरम के पावन ज्ञान-मंडप की जय, भजन का पारंपरिक मंगल समापन।