திருவெம்பாவை
Thiruvempavai
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन छोटा सभागार, जहाँ शिव नृत्य करते हैं।
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ், சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண், மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான், மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய், வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து, போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன், ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேயென்னே, ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.
Aadhiyum andhamum illaa arumperunj, chodhiyai yaam paadak ketteyum vaal thadangan, maadhe valarudhiyo vanseviyo nin sevidhaan, maadhevan vaarkazhalgal vaazhththiya vaazhththolipoi, veedhivaaik kettalume vimmi vimmi meymmarandhu, podhaar amaliyin mel nindrum purandingan, edhenum aagaal kidandhaal enne enne, eedhe endhozhi parisu elor embaavaai.
हे लंबी, चमकती आँखों वाली सखी, आदि और अंत से रहित उस दुर्लभ, विशाल ज्योति का हमारा गान सुनकर भी क्या तुम अब तक सो रही हो? क्या तुम्हारे कान इतने कठोर हैं? जब महादेव के पायल बँधे चरणों की हमारी स्तुति गली तक पहुँची, तो एक सखी सिसक-सिसककर बेसुध हो गई, फूलों की सेज से लुढ़ककर बेहोश पड़ी रही। और तुम? क्या यही तुम्हारा ढंग है, मेरी सखी? हे हमारी कन्या!
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம், பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே, நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர், சீசி யிவையுஞ் சிலவோ விளையாடி, ஏசு மிடமீதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக், கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும், தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள், ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்.
Paasam paranjodhikku enbaai iraappagal naam, pesumpodhu eppodhu ippodhaar amalikke, nesamum vaiththanaiyo nerizhaiyaai nerizhaiyeer, seesi ivaiyunj chilavo vilaiyaadi, esum idam eedho vinnorgal eththudharkuk, koosum malarppaadham thandharula vandharulum, thesan sivalogan thillaich chitrambalaththul, eesanaarkku anbaar yaam aarelor embaavaai.
रात-दिन जब भी हम बात करते थे, तुम कहती थीं ‘मेरा प्रेम परम ज्योति के लिए है’; क्या अब तुमने यह प्रेम फूलों की सेज को दे दिया, सुंदर गहनों वाली? ‘छी, सुंदर गहनों वाली सखियो! क्या यह खेलने की बात है? क्या यह छेड़ने की जगह है? वह तेजस्वी शिवलोक के स्वामी, जो अपने वे फूल-से चरण देने आते हैं जिनकी स्तुति करते देवता भी सकुचाते हैं, तिल्लै के छोटे सभागार के ईश: हम कौन हैं जो उनके प्रिय कहलाएँ?’ हे हमारी कन्या!
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென், அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறித், தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய், பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர், புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ, எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ, சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை, இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.
Muththanna vennagaiyaai munvandhu edhirezhundhu en, aththan aanandhan amudhan endru alloorith, thiththikkap pesuvaai vandhun kadai thiravaai, paththudaiyeer eesan pazhavadiyeer paangudaiyeer, puththadiyom punmai theerththaatkondaal pollaadho, eththo nin anbudaimai ellom ariyomo, siththam azhagiyaar paadaaro nam sivanai, iththanaiyum vendum emakkelor embaavaai.
हे मोती-सी सफ़ेद मुस्कान वाली, तुम पहले उठकर सबसे आगे हमसे मिलने आती थीं, मुँह में पानी भरकर मीठे स्वर में कहती थीं, ‘मेरे पिता, मेरा आनंद, मेरा अमृत!’ आओ, अपना द्वार खोलो। ‘तुम भक्त हो, प्रभु की पुरानी सेविकाएँ, भली सखियाँ; हम नई भक्तों की भूल माफ़ करके अपना लो, तो क्या बुरा है?’ ‘क्या हम सब तुम्हारे गहरे प्रेम को नहीं जानतीं? क्या सुंदर मन वाले हमारे शिव का गान नहीं करेंगे? हमें यह सब सुनना ही था!’ हे हमारी कन्या!
ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ, வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ, எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும், கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே, விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக், கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம், உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து, எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.
Onniththila nagaiyaai innam pularndhindro, vannak kilimozhiyaar ellaarum vandhaaro, ennikkodu ullavaa solluvom avvalavum, kannaith thuyindravame kaalaththaip pokkaadhe, vinnukku orumarundhai vedha vizhupporulaik, kannukku iniyaanaip paadik kasindhullam, ulnekku nindruruga yaam maattom neeye vandhu, ennik kuraiyil thuyilelor embaavaai.
‘हे चमकते मोती-सी मुस्कान वाली, क्या अभी सवेरा नहीं हुआ?’ ‘क्या तोते-सी मीठी बोली वाली सारी सुंदर सखियाँ आ गईं?’ ‘हम गिनकर बता देंगी कितनी हैं; तब तक सोकर समय मत गँवाओ। स्वर्ग की एक ही औषधि, वेदों के महान सत्य, आँखों को प्यारे प्रभु का गान करते हुए हम यहाँ खड़ी-खड़ी भीतर पिघल नहीं सकतीं। तुम खुद आकर गिनो, और कोई कम हो तो फिर सो जाना।’ हे हमारी कन्या!
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம், போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும், பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய், ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான், கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும், சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று, ஓலம் இடினும் உணராய் உணராய்காண், ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.
Maalariyaa naanmuganum kaanaa malaiyinai naam, polarivom endrulla pokkangale pesum, paaloorum thenvaaip padiree kadai thiravaai, gnaalame vinne pirave arivariyaan, kolamum nammai aatkondaruli kodhaattum, seelamum paadich chivane sivane endru, olam idinum unaraai unaraai kaan, elak kuzhali parisu elor embaavaai.
अरे दूध-शहद भरे होंठों वाली झूठी, जो डींग मारती है, ‘हम उस पर्वत को जानती हैं जिसे विष्णु न जान सके और ब्रह्मा न देख सके’! अपना द्वार खोलो। धरती, स्वर्ग और बाकी सब जिन्हें नहीं जान पाते, उनके रूप का, और जिस भलाई से वे हमें अपनाकर हमारे दोष धोते हैं उसका गान करके हम ‘शिव, शिव!’ पुकारती हैं, फिर भी तुम जागती नहीं, बिल्कुल नहीं। क्या यही तुम्हारा ढंग है, सुगंधित बालों वाली? हे हमारी कन्या!
மானேநீ நென்னலை நாளைவந் துங்களை, நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே, போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ, வானே நிலனே பிறவே அறிவரியான், தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும், வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய், ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும், ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்.
Maane nee nennalai naalai vandhungalai, naane ezhuppuvan endralum naanaame, pona thisai pagaraai innam pularndhindro, vaane nilane pirave arivariyaan, thaane vandhemmaith thalaiyaliththaatkondarulum, vaanvaar kazhal paadi vandhorkkun vaai thiravaai, oone urugaai unakke urum emakkum, enorkkun thangonaip paadelor embaavaai.
हे हिरणी, कल तुमने कहा था, ‘कल मैं खुद आकर तुम सबको जगाऊँगी।’ बिना लाज के बताओ, वह वादा किधर गया! क्या अभी सवेरा नहीं हुआ? आकाश, धरती और बाकी सब जिन्हें नहीं जान पाते, वे खुद आए, हमें दुलारकर अपना बना लिया। हम उनके ऊँचे पायल बँधे चरणों का गान करती आई हैं: मुँह खोलो! तुम्हारा तो शरीर भी नहीं पिघलता। यह तुम्हें, हमें और सबको शोभा देता है: हमारे राजा का गान करो। हे हमारी कन्या!
அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர், உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான், சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய், தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய், என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ், சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ, வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால், என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.
Anne ivaiyunj chilavo pala amarar, unnarkariyaan oruvan irunjeeraan, chinnangal ketpach chivanendre vaai thirappaai, thennaa ennaa munnam theeser mezhugoppaai, ennaanai ennaraiyan innamudhu endrellomunj, chonnom kel vevveraai innam thuyiludhiyo, vannenjap pedhaiyar pol vaalaa kidaththiyaal, enne thuyilin parisu elor embaavaai.
माँ, क्या ऐसा ही है? शंखों की आवाज़ सुनते ही तुम उस एक महामहिम प्रभु के लिए ‘शिव!’ पुकारती थीं जिनकी कल्पना भी अनेक देवता नहीं कर पाते; किसी के ‘हे दक्षिण के स्वामी’ कहने से पहले ही तुम आग के पास मोम की तरह पिघल जाती थीं। सुनो: हम सबने अलग-अलग पुकारा, ‘मेरे हाथी, मेरे राजा, मेरे मीठे अमृत!’ क्या तुम अब भी सो रही हो? तुम कठोर मन वाली मूर्खों की तरह यूँ ही पड़ी हो। यह कैसी नींद है? हे हमारी कन्या!
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும், ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும், கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை, கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ, வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய், ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ, ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை, ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்.
Kozhi silambach chilambung kurugengum, ezhil iyamba iyambum vensangengum, kezhil paranjodhi kezhil parangarunai, kezhil vizhupporulgal paadinom kettilaiyo, vaazhi eedhenna urakkamo vaai thiravaai, aazhiyaan anbudaimai aamaarum ivvaaro, oozhi mudhalvanaai nindra oruvanai, ezhaibangaalanaiye paadelor embaavaai.
मुर्गे बोल रहे हैं और हर ओर पक्षी चहक रहे हैं; बाजे सातों सुरों में बज रहे हैं और चारों ओर सफ़ेद शंख गूँज रहे हैं। हमने अनुपम परम ज्योति, अनुपम परम करुणा, अनुपम महान सत्य का गान किया: क्या तुमने नहीं सुना? तुम्हारा भला हो, यह कैसी नींद है? मुँह खोलो! क्या तुम्हारा गहरा प्रेम बस इतना ही है? उस एक का गान करो जो युगों के अंत में भी आदि बनकर खड़े रहे, जो देवी को अपना आधा अंग देते हैं। हे हमारी कन्या!
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே, பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே, உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம், உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து, சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம், இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல், என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
Munnaip pazhamporutkum munnaip pazhamporule, pinnaip pudhumaikkum perththum appetriyane, unnaip piraanaagap petra un seeradiyom, unnadiyaar thaal panivom aangavarkke paangaavom, annavare emkanavar aavaar avar ugandhu, sonna parise thozhumbaaip paniseyvom, inna vagaiye emakkengon nalgudhiyel, enna kuraiyum ilomelor embaavaai.
हे सबसे प्राचीन, हर प्राचीन चीज़ से भी पुराने, और हर नई चीज़ से भी नए! आपको अपना प्रभु पाने वाली हम आपकी समर्पित सेविकाएँ आपके भक्तों के चरणों में झुकेंगी और केवल उन्हीं की साथी बनेंगी; केवल वही हमारे पति होंगे, और जैसा वे चाहें वैसे हम प्रसन्न होकर उनकी सेवा करेंगी। हे हमारे राजा, यदि आप हमें यह दें, तो हमें किसी चीज़ की कमी नहीं रहेगी। हे हमारी कन्या!
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர், போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே, பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன், வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும், ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன், கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள், ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார், ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
Paadhaalam ezhinungeezh sorkazhivu paadhamalar, podhaar punaimudiyum ellaap porul mudive, pedhai orupaal thirumeni ondrallan, vedha mudhal vinnorum mannum thudhiththaalum, odha ulavaa oruthozhan thondarulan, kodhil kulaththu aran than koyir pinaappillaigaal, edhavan oor edhavan per aarutraar aarayalaar, edhavanaip paadum parisu elor embaavaai.
उनके फूल-से चरण सातों पाताल से नीचे, शब्दों से परे हैं; उनका फूलों से सजा मुकुट वहाँ है जहाँ सब चीज़ें समाप्त होती हैं। देवी एक ओर हैं; उनका पावन रूप केवल एक नहीं। वेद, देवता और धरती उनकी स्तुति करें, फिर भी वे ऐसे मित्र हैं जिनकी स्तुति कभी पूरी नहीं होती, जो भक्तों के बीच रहते हैं। हे निर्दोष हर के मंदिर की सेविकाओ: उनका नगर कौन-सा है, उनका नाम क्या है, उनके अपने कौन हैं, पराए कौन, और हम उनका गान कैसे करें? हे हमारी कन्या!
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக், கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி, ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற், செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல், மையார் தடங்கண் மடந்தை மணவாளா, ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின், உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம், எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
Moiyaar thadampoigai pukku mugerennak, kaiyaal kudaindhu kudaindhun kazhal paadi, aiyaa vazhiyadiyom vaazhndhom kaan aarazhalpol, seyyaa ven neeraadi selvaa sirumarungul, maiyaar thadangan madandhai manavaalaa, aiyaa nee aatkondarulum vilaiyaattin, uyvaargal uyyum vagaiyellaam uyndhozhindhom, eyyaamal kaappaai emaiyelor embaavaai.
हम भौंरों से भरे चौड़े तालाब में उतरकर, हाथों से पानी उछालते-मथते आपके चरणों का गान करती हैं। प्रभु, हम आपकी पुरानी सेविकाएँ सचमुच धन्य हो गईं। हे धधकती आग-से लाल, सफ़ेद भस्म रमाने वाले! हे निधि! हे पतली कमर और बड़ी काली आँखों वाली कन्या के दूल्हे! प्रभु, जिस लीला से आप हमें अपनाते हैं, उससे हम हर उस तरह बच गईं जैसे बचने वाले बचते हैं। हमारी रक्षा कीजिए कि हम कभी न थकें। हे हमारी कन्या!
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும், தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும், கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி, வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள், ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப், பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம், ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்.
Aarththa piravith thuyarkeda naam aarththaadum, theerththan nar thillaich chitrambalaththe theeyaadum, kooththan ivvaanum kuvalayamum ellomum, kaaththum padaiththum karandhum vilaiyaadi, vaarththaiyum pesi valaisilamba vaarkalaigal, aarpparavanj cheyya anikuzhalmel vandaarppap, pooththigazhum poigai kudaindhudaiyaan porpaadham, eththi irunjunai neeraadelor embaavaai.
वे वह पावन जल हैं जिसमें हम आनंद से नहाती हैं ताकि जन्म का बाँधने वाला दुःख मिटे; वे तिल्लै के सुंदर छोटे सभागार में अग्नि लेकर नाचने वाले नर्तक हैं, जो लीला में इस आकाश, धरती और हम सबकी रक्षा, रचना और लय करते हैं। आपस में बतियाते, चूड़ियाँ खनकाते, लंबी करधनियाँ बजाते, सुंदर बालों पर भौंरों की गुनगुन के साथ, आओ फूलों भरे तालाब में कूदें, अपने स्वामी के सुनहरे चरणों की स्तुति करें, और बड़े झरने में नहाएँ। हे हमारी कन्या!
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால், அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால், தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால், எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த, பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம், சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக், கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப், பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
Paingkuvalaik kaar malaraal sengamalap paimpodhaal, angam kuruginaththaal pinnum aravaththaal, thangal malam kazhuvuvaar vandhu saardhalinaal, engal piraattiyum engonum pondrisaindha, pongu maduvir pugappaaindhu paaindhu nam, sangam silambach chilambu kalandhaarppak, kongaigal pongak kudaiyum punal pongap, pangayap poompunal paaindhaadelor embaavaai.
अपने गहरे नीले कुमुदों और ताज़े लाल कमलों, पक्षियों के झुंडों और उनकी आवाज़ों, और अपना मैल धोने आते लोगों के कारण, यह उमड़ता तालाब हमारी देवी और हमारे प्रभु के एक साथ होने जैसा है। आओ उसमें बार-बार कूदें, हमारी शंख-चूड़ियाँ और पायलें साथ-साथ बजें, मन उमड़े और मथा पानी उछले, और इस कमलों भरे जल में नहाएँ। हे हमारी कन्या!
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக், கோதை குழலாட வண்டின் குழாமாடச், சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி, வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச், சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி, ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப், பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன், பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
Kaadhaar kuzhaiyaadap paimpoon kalanaadak, kodhai kuzhalaada vandin kuzhaamaadach, cheedhap punalaadich chitrambalam paadi, vedhap porul paadi apporulaamaa paadich, chodhi thiram paadich choozh kondraith thaar paadi, aadhi thiram paadi andhamaamaa paadip, bedhiththu nammai valarththeduththa peyvalai than, paadhath thiram paadi aadelor embaavaai.
कानों के कुंडल झूलते, सोने के गहने हिलते, मालाएँ और बाल लहराते, भौंरे मँडराते, आओ शीतल जल में नहाएँ और छोटे सभागार का गान करें; वेदों के अर्थ का गान करें और कैसे वे स्वयं वह अर्थ हैं; उनकी ज्योति और कोन्रै माला का गान करें; कैसे वे आदि और अंत हैं उसका गान करें; और नहाते हुए उन चूड़ियों वाली देवी के चरणों का गान करें जिन्होंने हमें पाला। हे हमारी कन्या!
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான், சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர, நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப், பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள், பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும், ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள், வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி, ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
Ororukaal emperumaan endrendre namperumaan, seerorukaal vaai ovaal siththang kaligoora, neerorukaal ovaa nedundhaarai kanpanippap, paarorukaal vandhanaiyaal vinnoraith thaan paniyaal, perarayarku inghane piththoruvar aamaarum, aaroruvar ivvannam aatkollum viththagar thaal, vaaruruvap poonmulaiyeer vaayaara naam paadi, eruruvap poompunal paaindhaadelor embaavaai.
बार-बार वह ‘मेरे प्रभु!’ पुकारती है, उसके होंठ उनकी महिमा कहते नहीं थकते, और मन आनंद से छलकता है; आँखों से लगातार आँसुओं की धार बहती है; वह बार-बार धरती पर झुकती है और किसी दूसरे देवता को प्रणाम नहीं करती। महान राजा के लिए ऐसे ही दीवाना हुआ जाता है! हे सजी सखियो, आओ जी भरकर उन ज्ञानी प्रभु के चरणों का गान करें जो हमें इस तरह अपनाते हैं, और सुंदर फूलों भरे जल में कूदकर नहाएँ। हे हमारी कन्या!
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள், என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின், மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற், பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம், என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள், தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு, முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே, என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.
Munnik kadalaich churukki ezhundhudaiyaal, ennath thigazhndhemmai aaludaiyaal ittidaiyin, minnip polindhem piraatti thiruvadimel, ponnanj chilambir chilambith thiruppuruvam, ennach chilai kulavi nandhammai aaludaiyaal, thannir pirivilaa engomaan anbarkku, munni aval namakku munsurakkum innarule, ennap pozhiyaai mazhaiyelor embaavaai.
हे वर्षा! पहले सागर को पी लो और हम पर राज करने वाली हमारी देवी के शरीर जैसी काली होकर उठो; उनकी पतली कमर जैसी बिजली-सी चमको; उनके पावन चरणों की सुनहरी पायलों जैसे गरजो; उनकी पावन भौंहों जैसा अपना इंद्रधनुष झुकाओ; और उस मीठी कृपा की तरह बरसो जो हमारे राजा से कभी अलग न होने वाली वे देवी सबसे पहले उनके भक्तों और हम पर बरसाती हैं। हे हमारी कन्या!
செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால், எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக், கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி, இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச், செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை, அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை, நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப், பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
Sengan avan paal dhisaimugan paal dhevargal paal, engum ilaadhador inbam nam paaladhaak, kongun karungkuzhali nandhammaik kodhaatti, ingu nam illangal thorum ezhundharulich, chengamalap porpaadhan thandharulunj chevaganai, angan arasai adiyongatku aaramudhai, nangal perumaanaip paadi nalandhigazhap, pangayap poompunal paaindhaadelor embaavaai.
एक ऐसा आनंद जो कहीं नहीं, न लाल नेत्रों वाले विष्णु के पास, न चतुर्मुख ब्रह्मा के पास, न देवताओं के पास, हमारा है: वह वीर जो सुगंधित काले बालों वाली देवी के साथ हमारे दोष धोते हैं, यहाँ हमारे हर घर में पधारते हैं और अपने सुनहरे लाल कमल-से चरण देते हैं; करुणा भरी आँखों वाले राजा; हम सेविकाओं के अमृत; हमारे प्रभु। उनका गान करके कि भलाई चमके, आओ कमलों भरे जल में कूदकर नहाएँ। हे हमारी कन्या!
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும், விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல், கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத், தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப், பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர், விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக், கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப், பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
Annaamalaiyaan adikkamalanj chendriranjum, vinnor mudiyin manith thogai veetratraar pol, kannaar iravi kadhir vandhu kaar karappath, thannaar oli mazhungith thaaragaigal thaamagalap, pennaagi aanaai aliyaaip pirangoliser, vinnaagi mannaagi iththanaiyum veraagik, kannaar amudhamumaai nindraan kazhal paadip, penne ip poompunal paaindhaadelor embaavaai.
जैसे अण्णामलै के प्रभु के कमल-चरणों में झुकते देवताओं के मुकुटों के रत्नों की चमक फीकी पड़ जाती है, वैसे ही चमकते सूर्य की किरणें आती हैं, अँधेरा छिपता है, तारों की शीतल रोशनी मंद होकर वे खिसक जाते हैं। हे सखी, आओ उनके चरणों का गान करें जो स्त्री हैं, पुरुष हैं और दोनों नहीं, चमकता आकाश और धरती हैं, और इन सबसे अलग भी, आँखों को मीठा अमृत, और इस फूलों भरे जल में कूदकर नहाएँ। हे हमारी कन्या!
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று, அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால், எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள், எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க, எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க, கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க, இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல், எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.
Ungaiyir pillai unakke adaikkalam endru, angap pazhanjol pudhukkum em achchaththaal, engal perumaan unakkondru uraippom kel, engongai ninnanbar allaar thol serarka, engai unakkallaadhu eppaniyunj cheyyarka, kangul pagal engan matrondrung kaanarka, ingip parise emakkengon nalgudhiyel, engezhilen gnaayiru emakkelor embaavaai.
इस डर से कि पुरानी कहावत ‘तुम्हारी गोद का बच्चा तुम्हारी ही शरण में है’ फिर सच न हो जाए, हम आपसे एक बात कहती हैं, हमारे प्रभु; सुनिए: हम आपके भक्तों के सिवा किसी को गले न लगाएँ; हमारे हाथ आपके सिवा किसी का काम न करें; रात-दिन हमारी आँखें और कुछ न देखें। हे हमारे राजा, यदि आप हमें यह दें, तो सूरज कहीं भी उगे, हमें क्या? हे हमारी कन्या!
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர், போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள், போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம், போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள், போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள், போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம், போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள், போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.
Potri arulugha nin aadhiyaam paadhamalar, potri arulugha nin andhamaanj chendhalirgal, potri ellaa uyirkkum thotramaam porpaadham, potri ellaa uyirkkum bogamaam poongazhalgal, potri ellaa uyirkkum eeraam inaiyadigal, potri maal naanmuganum kaanaadha pundarigam, potri yaam uyya aatkondarulum ponmalargal, potri yaam maargazhi neeraadelor embaavaai.
प्रणाम! अपने उन फूल-से चरणों से कृपा कीजिए जो आदि हैं! प्रणाम! अपने उन कोमल लाल चरणों से कृपा कीजिए जो अंत हैं! सभी प्राणियों के उद्गम सुनहरे चरणों को प्रणाम! सभी प्राणियों के आनंद फूल-से चरणों को प्रणाम! सभी प्राणियों के अंत दोनों चरणों को प्रणाम! विष्णु और ब्रह्मा जिन्हें न देख सके उन कमल-चरणों को प्रणाम! हमें अपनाकर उबारने वाले सुनहरे फूलों को प्रणाम! प्रणाम! आओ मार्गऴि के जल में नहाएँ। हे हमारी कन्या!
திருச்சிற்றம்பலம்.
Thiruchchitrambalam.
तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन छोटा सभागार, जहाँ शिव नृत्य करते हैं।