भक्ति दरबार
English

திருப்பள்ளியெழுச்சி

Thiruvasagam: Thiruppalliyezhuchi

स्तोत्र · तमिल · शिव · माणिक्कवाचकर

  1. திருச்சிற்றம்பலம்.

    Thiruchchitrambalam.

    तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन सभागार; भजन के आरंभ और अंत में बोला जाने वाला मंगल-वचन।

  2. போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே, புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண், டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும், எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம், சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ், திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே, ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Potri en vaazhmudhalaagiya porule, Pularndhadhu poongazharku inaithunai malar kondu, Etri nin thirumugatthu emakkarul malarum, Ezhilnagai kondu nin thiruvadi thozhugom, Setridhazhk kamalangal malarum than vayal soozh, Thirupperundhurai urai Sivaperumaane, Etruyar kodiyudaiyaai enai udaiyaai, Emperumaan palli ezhundharulaaye.

    हे मेरे जीवन के मूल तत्व, आपको नमन! भोर हो गई। आपके फूल-से चरणों में जोड़े-जोड़े फूल अर्पित करके, आपके मुख पर हमारे लिए कृपा से खिलने वाली सुंदर मुस्कान की आस में, हम आपके पावन चरणों की पूजा करते हैं। हे कीचड़ से खिलते कमलों वाले शीतल खेतों से घिरे तिरुप्पेरुंदुरै के शिव, ऊँचे वृषभ-ध्वज वाले, मेरे स्वामी: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  3. அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய், அகன்றது உதயநின் மலர்த்திரு முகத்தின், கருணையின் சூரியன் எழஎழ நயனக், கடிமலர் மலரமற் றண்ணல்அங் கண்ணாம், திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர், திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே, அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே, அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே.

    Arunan Indhiran thisai anuginan irulpoi, Agandradhu udhaya nin malarth thirumugatthin, Karunaiyin sooriyan ezha ezha nayanak, Kadimalar malara matru annal angannaam, Thiralnirai arupadham muralvana ivaiyor, Thirupperundhurai urai Sivaperumaane, Arulnidhi thara varum aanandha malaiye, Alaikadale palli ezhundharulaaye.

    सूर्य के सारथी अरुण इंद्र की दिशा, पूर्व, में पहुँच गए; अंधकार चला गया। आपके खिलते मुख का करुणा-सूर्य ज्यों-ज्यों ऊपर उठता है, आपकी आँखों के सुगंधित फूल खिलते हैं, और यहाँ भौंरों के झुंड गुनगुना रहे हैं। हे तिरुप्पेरुंदुरै के शिव, कृपा का खज़ाना देने आने वाले आनंद के पर्वत, लहराते करुणा-सागर: कृपा करके शय्या से उठिए।

  4. கூவின பூங்குயில் கூவின கோழி, குருகுகள் இயம்பின இயம்பின சங்கம், ஓவின தாரகை யொளிஒளி உதயத், தொருப்படு கின்றது விருப்பொடு நமக்குத், தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய், திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே, யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Koovina poongkuyil koovina kozhi, Kurugugal iyambina iyambina sangam, Ovina thaaragai oli oli udhayatthu, Orupadugindradhu viruppodu namakkuth, Dheva nar serikazhal thaalinai kaattaai, Thirupperundhurai urai Sivaperumaane, Yaavarum arivariyaai emakku eliyaai, Emperumaan palli ezhundharulaaye.

    सुंदर कोयलें कूक उठीं, मुर्गों ने बाँग दी, पक्षी चहचहाए, शंख बजे; तारों की रोशनी मंद पड़ गई और भोर का प्रकाश फैल रहा है। हे देव, प्रेम से हमें अपने पायल वाले दोनों चरण दिखाइए। हे तिरुप्पेरुंदुरै के शिव, जिन्हें कोई नहीं जान पाता पर जो हमारे लिए सुलभ हैं: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  5. இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால், இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால், துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால், தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால், சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால், திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே, என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Innisai veenaiyar yaazhinar orupaal, Irukkodu thotthiram iyambinar orupaal, Thunniya pinaimalark kaiyinar orupaal, Thozhugaiyar azhugaiyar thuvalgaiyar orupaal, Chenniyil anjali kooppinar orupaal, Thirupperundhurai urai Sivaperumaane, Ennaiyum aandukondu innarul puriyum, Emperumaan palli ezhundharulaaye.

    एक ओर मधुर वीणा और याळ बजाने वाले हैं; एक ओर ऋग्वेद और स्तोत्र गाने वाले; एक ओर गुँथी मालाएँ लिए लोग; एक ओर पूजा करते, रोते और भाव-विह्वल होते लोग; एक ओर सिर के ऊपर हाथ जोड़े लोग। हे तिरुप्पेरुंदुरै के शिव, जिन्होंने मुझे भी अपना बनाकर मधुर कृपा की: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  6. பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால், போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர், கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால், கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச், சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா, சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந், தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Boodhangal thorum nindraai enin allaal, Pokkilan varavilan ena ninaip pulavor, Geethangal paadudhal aadudhal allaal, Kettariyom unaik kandarivaaraich, Cheedhangol vayal Thirupperundhurai mannaa, Sindhanaikkum ariyaai engal mun vandhu, Edhangal arutthemmai aandarul puriyum, Emperumaan palli ezhundharulaaye.

    ज्ञानी गाते और नाचते हैं कि आप सब तत्वों में हैं और न आते हैं न जाते हैं; पर हमने किसी ऐसे के बारे में नहीं सुना जिसने आपको सचमुच देखा हो। हे शीतल खेतों वाले तिरुप्पेरुंदुरै के राजा, विचार से भी परे, आप हमारे सामने आकर हमारे दोष काटते हैं और कृपा से हमें अपनाते हैं: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  7. பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார், பந்தனை வந்தறுத் தாரவர் பலரும், மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின், வணங்குகின் றார்அணங் கின்மண வாளா, செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ், திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே, இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Pappara veettirundhu unarum nin adiyaar, Bandhanai vandharutthaar avar palarum, Maippuru kanniyar maanudatthu iyalbin, Vanangugindraar anangin manavaalaa, Seppuru kamalangal malarum than vayal soozh, Thirupperundhurai urai Sivaperumaane, Ippirappu arutthemai aandarul puriyum, Emperumaan palli ezhundharulaaye.

    आपके बहुत से भक्त, जो सब कुछ छोड़कर बैठे हैं और आपको जानते हैं, आकर अपने बंधन काट चुके हैं; काजल लगी आँखों वाली स्त्रियाँ मनुष्यों की रीति से आपकी पूजा करती हैं। हे देवी के पति, ताँबे-से लाल कमलों वाले शीतल खेतों से घिरे तिरुप्पेरुंदुरै के शिव, जो इस जन्म का बंधन काटकर कृपा से हमें अपनाते हैं: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  8. அதுபழச் சுவையென அமுதென அறிதற், கரிதென எளிதென அமரரும் அறியார், இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே, எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும், மதுவளர் பொழில்திரு வுத்தர கோச, மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா, எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Adhu pazhach chuvaiyena amudhena aridharku, Aridhena elidhena amararum ariyaar, Idhu avan thiruvuru ivan avan enave, Engalai aandukondu ingezhundharulum, Madhuvalar pozhil Thiru Utthara Kosa, Mangaiyullaai Thirupperundhurai mannaa, Edhu emaip panikolumaaradhu ketpom, Emperumaan palli ezhundharulaaye.

    देवता भी नहीं जानते कि आप फल के स्वाद जैसे हैं या अमृत जैसे, जानने में कठिन हैं या सरल। फिर भी आप यहाँ आकर हमें ऐसे अपनाते हैं कि हम कह सकें, 'यही उनका पावन रूप है, यही वे हैं।' हे मधु-भरे उपवनों वाले तिरु उत्तरकोसमंगै में बसने वाले, तिरुप्पेरुंदुरै के राजा: आप हमसे जैसी सेवा चाहें, हम सुनेंगे। हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  9. முந்திய முதல்நடு இறுதியு மானாய், மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார், பந்தணை விரலியும் நீயும்நின் அடியார், பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே, செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித், திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி, அந்தண னாவதுங் காட்டிவந் தாண்டாய், ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

    Mundhiya mudhal nadu irudhiyumaanaai, Moovarum arigilar yaavar matru arivaar, Pandhanai viraliyum neeyum nin adiyaar, Pazhangudil thorum ezhundharuliya parane, Sendhazhal purai thirumeniyum kaattith, Thirupperundhurai urai koyilum kaatti, Andhananaavadhum kaatti vandhaandaai, Aaramudhe palli ezhundharulaaye.

    आप सबके आदि, मध्य और अंत हैं; त्रिदेव भी आपको नहीं जानते, तो और कौन जानेगा? हे परम प्रभु, आप गेंद थामे उँगलियों वाली देवी के साथ अपने भक्तों की हर पुरानी झोंपड़ी में पधारे; आपने हमें लाल अग्नि-सा अपना पावन रूप दिखाया, तिरुप्पेरुंदुरै का अपना मंदिर दिखाया, और ब्राह्मण बनकर आकर हमें अपनाया। हे दुर्लभ अमृत, कृपा करके शय्या से उठिए।

  10. விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா, விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள், மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே, வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம், கண்ணகத் தேநின்று களிதரு தேனே, கடலமு தேகரும் பேவிரும் படியார், எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய், எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    Vinnagath dhevarum nannavum maattaa, Vizhupporule unadhu ozhuppadiyongal, Mannagatthe vandhu vaazhach cheidhaane, Van Thirupperundhuraiyaai vazhi adiyom, Kannagatthe nindru kalitharu thene, Kadal amudhe karumbe virumbu adiyaar, Ennagatthaai ulagukku uyiraanaai, Emperumaan palli ezhundharulaaye.

    हे परम तत्व, जिन तक स्वर्ग के देवता भी नहीं पहुँच पाते, आपने धरती पर आकर हम तुच्छ सेवकों को जीवन दिया। हे समृद्ध तिरुप्पेरुंदुरै के स्वामी, हम पीढ़ियों से आपके सेवक हैं। हे आँखों में बसकर आनंद देने वाले मधु, सागर के अमृत, गन्ने, आप प्रेमी भक्तों के विचारों में बसते हैं और संसार के प्राण हैं: हमारे प्रभु, कृपा करके शय्या से उठिए।

  11. புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம், போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித், திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம், அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப், படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும், அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய், ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே.

    Bhuvaniyir poip piravaamaiyil naal naam, Pokkugindrom avame indhap boomi, Sivan uyyak kolgindra vaaru endru nokkith, Thirupperundhurai uraivaai Thirumaalaam, Avan viruppeidhavum malaravan aasaip, Padavum nin alarndha meik karunaiyum neeyum, Avaniyir pugundhemai aatkolla vallaai, Aaramudhe palli ezhundharulaaye.

    यह देखकर कि यही धरती है जहाँ शिव जीवों का उद्धार करते हैं, विष्णु और कमल पर बैठे ब्रह्मा तरसते हैं, सोचते हुए कि 'धरती पर जन्म न लेकर हम अपने दिन व्यर्थ गँवा रहे हैं।' हे तिरुप्पेरुंदुरै में बसने वाले, आप और आपकी पूर्ण खिली सच्ची करुणा धरती पर आकर हमें अपना सकते हैं। हे दुर्लभ अमृत, कृपा करके शय्या से उठिए।

  12. திருச்சிற்றம்பலம்.

    Thiruchchitrambalam.

    तिरुच्चिट्रम्बलम्: चिदंबरम का पावन सभागार; भजन के समापन पर बोला जाने वाला मंगल-वचन।