भक्ति दरबार
English

திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா

Kandar Kalivenba

स्तोत्र · तमिल · मुरुगन · कुमरगुरुपरर

  1. பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய பாமேவு தெய்வப் பழமறையும் தேமேவு

    Poomevu sengamalap puththelum theraariya, paamevu deivap pazhamaraiyum themevu

    जिन्हें लाल कमल पर बैठे ब्रह्मा नहीं जान पाते, न छंदों से भरे प्राचीन दिव्य वेद, न ही मधुर…

  2. நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த போதமும் காணாத போதமாய் ஆதிநடு

    Naadhamum naadhaandha mudivum navaitheerndha, bodhamum kaanaadha bodhamaai aadhinadu

    …नाद, न नाद से परे की अवस्था, न निर्मल ज्ञान: वे वह चेतना हैं जिसे इनमें से कोई नहीं देख पाता, जो आदि, मध्य…

  3. அந்தங் கடந்தநித்தி யானந்த போதமாய்ப் பந்தம் தணந்த பரஞ்சுடராய் வந்த

    Andhang kadandha niththiyaanandha bodhamaaip, bandham thanandha paranjudaraai vandha

    …और अंत से परे है; वे नित्य आनंदमय चेतना हैं, हर बंधन से मुक्त परम ज्योति हैं;

  4. குறியும் குணமுமொரு கோலமுமற்று எங்கும் செறியும் பரம சிவமாய் அறிவுக்கு

    Kuriyum gunamum oru kolamumatru, engum seriyum parama sivamaai arivukku

    बिना किसी चिह्न, गुण या आकार के, वे सब में व्याप्त परम शिव हैं; बुद्धि के लिए…

  5. அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் தனாதருளின்

    Anaadhiyaai aindhozhirkum appuramaai andre, manaadhigalukku ettaa vadivaai thanaadharulin

    …वे अनादि हैं, सृष्टि आदि पाँच कर्मों से परे हैं, ऐसा स्वरूप जिसे मन और इंद्रियाँ नहीं छू सकतीं; अपनी ही कृपा से…

  6. பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் எஞ்சாத

    Panjavidha roopa parasugamaai evvuyirkkum, thanjamena nirkum thanipporulaai enjaadha

    …वे पाँच प्रकार के रूपों में परम सुख हैं, हर प्राणी के आश्रय के रूप में खड़ी अनोखी सत्ता हैं; पूर्ण और…

  7. பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும் காரணமும் இல்லாக் கதியாகித் தாரணியில்

    Pooranamaai niththamaaip pokkuvaravum punarvum, kaaranamum illaak kadhiyaagith thaaraniyil

    …संपूर्ण, नित्य, वह परम गति जिसमें न आना-जाना है, न मेल, न कोई कारण; और इस संसार में…

  8. இந்திரசாலம் புரிவோன் யாவரையும் தான்மயக்கும் தந்திரத்தில் சாராது சார்வதுபோல முந்தும்

    Indhirasaalam purivon yaavaraiyum thaan mayakkum, thandhiraththil saaraadhu saarvadhu pola mundhum

    …जैसे जादूगर अपनी माया से सबको मोहित करता है पर स्वयं उससे अछूता रहता है, वैसे ही वे सब में रहकर भी अलग हैं; वे पहले…

  9. கருவின்றி நின்ற கருவாய் அருளே உருவின்றி நின்ற உருவாய்த் திரிகரணம்

    Karuvindri nindra karuvaai arule, uruvindri nindra uruvaai thirikaranam

    …कारण हैं जिनका कोई कारण नहीं, स्वयं कृपा हैं, बिना रूप के खड़ा रूप हैं; तीन शक्तियों…

  10. ஆகவரும் இச்சை அறிவு இயற்றலால் இலயம் போகஅதி காரப் பொருளாகி ஏகத்து

    Aagavarum ichchai arivu iyatralaal ilayam, boga adhikaarap porulaagi egaththu

    …इच्छा, ज्ञान और क्रिया से वे लय, भोग और अधिकार के स्वामी बनते हैं; और एक होकर…

  11. உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் இருண்மலத்துள்

    Uruvum aruvum uru aruvum aagip, paruva vadivam palavaai irunmalaththul

    …वे साकार, निराकार और साकार-निराकार बनते हैं, समय पर अनेक रूप लेते हैं; अंधकारमय मल में…

  12. மோகமுறும் பல்லுயிர்க்கும் முத்தி அளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் தேகமுறத்

    Mogamurum palluyirkkum muththi aliththarku, mala paagamurave kadaikkan paaliththuth thegamura

    …मोहित अनगिनत जीवों को मुक्ति देने के लिए वे कृपा-दृष्टि डालते हैं ताकि उनका मल पक सके; और उन्हें देह देने के लिए…

  13. தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து மந்த்ரமுதல்

    Thandha aruvuruvam saarndha vindhu mohini maan, bendhamurave pinippiththu mandhira mudhal

    …वे उन्हें बिंदु, मोहिनी और महामाया के द्वारा सूक्ष्म और स्थूल रूपों से बाँधते हैं; और मंत्र से आरंभ होकर…

  14. ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து மாறிவரும்

    Aaraththuvaavum andaththu aarndha aththuvaakkalum, mur koorath thagum simizhppil koottuviththu maarivarum

    …वे उन्हें छह मार्गों और ब्रह्मांड में फैले मार्गों के बंधन में रखते हैं, जैसा पहले कहा गया; और बदलते हुए…

  15. ஈரிரண்டு தோற்றத்து ஏழுபிறப்புள் யோனி எண்பான் ஆரவந்த நான்குநூறாயிரத்துள் தீர்வரிய

    Eerirandu thotraththu ezhu pirappul yoni enbaan, aaravandha naangu nooraayiraththul theervariya

    …चार प्रकार के जन्म और सात प्रकार के प्राणियों में, चौरासी लाख योनियों के बीच, न छूटने वाले…

  16. கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து வெந்நிரய

    Kanmaththukku eedaaik karangum sagadamum por, senmiththu uzhalath thirodhiththu venniraya

    …कर्म के अनुसार वे उन्हें जन्म देकर घूमते पहिये की तरह भटकाते हैं और उन पर पर्दा डालते हैं; जलते नरक…

  17. சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் தர்க்கமிடும்

    Sorkkaadhi bogamelaam thuyppiththup pakkuvaththaal, narkaaranam siridhu nannudhalum tharkkamidum

    …स्वर्ग आदि सभी भोग उन्हें चखाते हैं; और जब परिपक्व होने पर थोड़ा पुण्य पास आता है…

  18. தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து முன்னூல்

    Thonnool parasamayam thorum adhuvadhuve, nannool enath therindhu naattuviththu munnool

    …वे उन्हें तर्क करने वाले प्राचीन ग्रंथों वाले हर पर-मत से गुज़ारते हैं, जहाँ हर कोई अपने ग्रंथ को सच्चा मानता है; फिर मूल शास्त्र से…

  19. விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாபோகம் சார்வித்து அருள்பெருகு

    Viradha mudhalaaya pala meyththavaththin unmaich, chariyai kiriyaa bogam saarviththu arulperugu

    …वे उन्हें व्रत और अनेक सच्चे तप तक, और चर्या, क्रिया और योग के सच्चे मार्ग तक ले आते हैं; और उमड़ती कृपा से…

  20. சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து நால்வகையாம்

    Saaloga saameepa saaroopamum pusippiththu, aalogam thannai agatruviththu naalvagaiyaam

    …वे उन्हें सालोक्य, सामीप्य और सारूप्य का सुख देते हैं, उनकी भ्रम-दृष्टि हटाते हैं; और चार प्रकार के…

  21. சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் பெத்த

    Saththinipaadham tharudharku iruvinaiyum, oththuvarum kaalam ulavaagip beththa

    …शक्तिपात देने के लिए, जब पुण्य और पाप बराबर होने का समय आता है; और जब बँधे जीव का…

  22. மலபரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி உலவா

    Malaparipaagam varumalavil pannaal, alamarudhal kannutru aruli ulavaa

    …मल पक जाता है, उसे बहुत दिनों तक तड़पते देखकर वे कृपा करते हैं; और जो अनंत…

  23. தறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் பிறியாக்

    Tharivukku arivaagi avvarivukku ettaa, neriyil serindha nilai neengip piriyaak

    …ज्ञान के भीतर का ज्ञान हैं, फिर भी उस ज्ञान की पहुँच से परे हैं, अपनी छिपी अवस्था छोड़कर, कभी न बिछुड़ने वाली…

  24. கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் குருபரனென்று ஓர்திருப்பேர் கொண்டு திருநோக்கால்

    Karunai thiruvuruvaaik kaasinikke thondrik, guruparanendru or thirupper kondu thirunokkaal

    …करुणा को अपना पावन रूप बनाकर धरती पर प्रकट होते हैं, गुरुपरन यानी परम गुरु का पावन नाम लेकर; और अपनी पावन दृष्टि से…

  25. ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் பாழாக

    Oozhvinaiyaip pokki udalarubaththettu nilam, ezhum aththuvaakkal irumoondrum paazhaaga

    …पूर्व कर्म मिटाते हैं, और देह, उसके अनेक लोक और स्तर, और छह मार्गों को शून्य कर देते हैं…

  26. ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் பூணும்

    Aanavamaana padalam kizhiththu arivil, kaanariya meygnaanak kankaattip poonum

    …अहंकार का पर्दा फाड़कर वे सच्चे ज्ञान की वह आँख खोलते हैं जिसे बुद्धि नहीं देख पाती; और…

  27. அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி முடியாது

    Adignaanaththaal porulum aanmaavum kaattik, kadiyaar buvanamutrum kaatti mudiyaadhu

    …अपने चरणों के ज्ञान से वे परम सत्य और आत्मा दिखाते हैं, सारे सुगंधित लोक दिखाते हैं; और अनंत…

  28. தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் போக்கும்

    Thekku paramaanandhath thellamudham aagi engum, neekkamara nindra nilai kaattip pokkum

    …परम आनंद के निर्मल अमृत के रूप में उमड़ते हुए, वे वह अवस्था दिखाते हैं जो बिना किसी अंतराल के सब में भरी है; और जाना…

  29. வரவு நினைப்பு மறப்பும் பகலும் இரவுங் கடந்து உலவா இன்பம் மருவுவித்துக்

    Varavu ninaippu marappum pagalum, iravung kadandhu ulavaa inbam maruvuviththuk

    …आना, याद करना और भूलना, दिन और रात, सबसे परे ले जाकर वे उन्हें अनंत आनंद से जोड़ देते हैं।

  30. கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவு மானுமுடன் மால்விடைமேல் மின்னிடத்துப்

    Kanmamalaththaarkku malark kanmoondrum thaazhsadaiyum, vanmazhuvu maanumudan maalvidaimel minnidaththup

    कर्म से बँधे जीवों के लिए वे तीन कमल-नेत्रों, लटकती जटाओं, मज़बूत फरसे और हिरण के साथ, विशाल बैल पर, बिजली-सी देवी को बगल में लिए प्रकट होते हैं…

  31. பூத்த பவளப் பொருப்பு ஒன்று வெள்ளி வெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி மூத்த

    Pooththa pavalap poruppu ondru velli, verpil vaayththanaiya deiva vadivaagi mooththa

    …ऐसा दिव्य रूप मानो चाँदी के पर्वत पर खिला मूँगे का पर्वत हो; और पुराने…

  32. கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் பெருகியெழு

    Karumamalak kattaruththuk kannarul seydhu ulnindru, orumalaththaarkku inbam udhavip perugiyezhu

    …कर्म-बंधन वे काटते हैं और कृपा करते हैं; भीतर रहकर वे उन जीवों को आनंद देते हैं जिनमें केवल एक मल बचा है; और उमड़ती…

  33. மூன்றவத்தை யும் கழற்றி முத்தருட னேயிருத்தி ஆன்றபர முத்தி அடைவித்துத் தோன்றவரும்

    Moondravaththaiyum kazhatri muththarudane iruththi, aandra paramuththi adaiviththuth thondravarum

    …तीनों अवस्थाओं को हटाकर, उन्हें मुक्त जनों के बीच बिठाकर, परम मुक्ति तक पहुँचाते हैं।

  34. யானெனதென்று அற்ற இடமே திருவடியா மோனபரா னந்த முடியாக ஞானம்

    Yaanenadhendru atra idame thiruvadiyaa, monaparaanandha mudiyaaga gnaanam

    हे प्रभु, जिनके पावन चरण वह स्थान हैं जहाँ ‘मैं’ और ‘मेरा’ मिट जाते हैं, जिनका मुकुट मौन परमानंद है, जिनका…

  35. திருவுருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா இருநிலமே

    Thiruvuruvaa ichchai seyalarivu kannaa, aruladhuve sengai alaraa irunilame

    …पावन शरीर ज्ञान है, जिनकी आँखें इच्छा, क्रिया और ज्ञान हैं, जिनके लाल कमल-से हाथ स्वयं कृपा हैं, और विशाल धरती…

  36. சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே மின்னுருவம்

    Sannidhiyaa nirkum thanichchudare evvuyirkkum, binnamara nindra perumaane minnuruvam

    …जिनका गर्भगृह है: हे अनोखी ज्योति! हे महाप्रभु, जो हर जीव में अखंड रूप से स्थित हैं! आपके बिजली-से चमकते…

  37. தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த பைம்பொன் வாய்ந்த கிரண மணிமுடியும் தேய்ந்தபிறைத்

    Thoyndha navarathnach chudarmaniyaal seydha paimpon, vaaindha kirana manimudiyum theyndha piraith

    …नौ चमकते रत्नों से जड़े, शुद्ध सोने के तेजस्वी मुकुट; और घटते चाँद के…

  38. துண்டம்இரு மூன்று நிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் விண்ட

    Thundam irumoondru nirai thondrap padhiththanaiya, pundaram pooththa nudhal pottazhagum vinda

    …छह टुकड़ों की पंक्ति जैसे, माथों पर चमकते तिलक और बिंदी की सुंदरता; और खिले हुए…

  39. பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் பருதி

    Paruvamalarp pundarigam pannirandu pooththaangu, arulpozhiyum kanmalar eeraarum parudhi

    …मौसम के बारह कमलों जैसी, कृपा बरसाती आपकी बारह फूल-सी आँखें; और अनेक सूर्यों…

  40. பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் நிலவுமிழும்

    Palavum ezhundhu sudar paaliththaar polak, kulavu magarak kuzhaiyum nilavumizhum

    …के उगकर रोशनी फैलाने जैसे, आपके चमकते मकर-कुंडल; और चाँदनी बिखेरती…

  41. புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் வின்மலிதோள்

    Punmuruval pooththalarndha poongumudhach chevvaayum, senmavidaai theerkkum thirumozhiyum vinmalithol

    …मुस्कान से खिले कुमुद जैसे लाल होंठ; जन्मों की थकान मिटाने वाले आपके पावन वचन; और धनुष से बलवान…

  42. வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்சூர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் எவ்வுயிர்க்கும

    Vevvasurar potrisaikkum venjooranaith thadindhu, thevvaruyir sindhum thirumugamum evvuyirkkum

    …कंधों वाले क्रूर असुर जिसकी स्तुति करते थे, उस भयंकर सूरपद्म को मारकर शत्रुओं के प्राण हरने वाला पावन मुख; और हर जीव के…

  43. ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் சூழ்வோர்

    Oozhvinaiyai maatri ulavaadha perinba, vaazhvutharum seyya malarmugamum soozhvor

    …पूर्व कर्म बदलकर अनंत परमानंद का जीवन देने वाला लाल फूल-सा मुख; और वह कमल-मुख जो…

  44. வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் விடுத்தகலாப்

    Vadikkum pazhamaraigal aagamangal yaavum, mudikkum kamala mugamum viduththagalaap

    …ज्ञानियों द्वारा निचोड़े गए सभी प्राचीन वेदों और आगमों का शिखर है; और वह सुगंधित फूल-मुख जो चिपके हुए…

  45. பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் நேசமுடன்

    Paasa irul thurandhu palkadhiril sodhividum, vaasa malarvadhana mandalamum nesamudan

    …बंधन के अँधेरे को भगाकर अनेक किरणों से चमकता है; और प्रेम से…

  46. போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் தாகமுடன்

    Bogamurum vallikkum puththelir poongodikkum, mogam alikkum mugamadhiyum thaagamudan

    …वल्ली और देवताओं की फूलों भरी लता देवसेना को आनंद देने वाला चाँद-सा मुख; और वह दिव्य कमल-मुख जो लालसा से…

  47. வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் கொந்தவிழ்ந்த

    Vandhadiyil serndhor magizha varambalavum, thandharulum deivamugath thaamaraiyum kondhavizhndha

    …आपके चरणों में आने वालों को प्रसन्न करने के लिए अनेक वर देता है; और गुच्छों में खिले…

  48. வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் ஆரமுதம்

    Verik kadambum viraikkuravum pooththalarndha, baarap buyasailam pannirandum aaramudham

    …शहद भरे कदंब और सुगंधित कुरवा फूलों से सजे पर्वत-से बारह कंधे; और मीठा अमृत…

  49. தேவர்க்கு உதவும் திருக்கரமும் சூர்மகளிர் மேவக் குழைந்தணைந்த மென்கரமும் ஓவாது

    Thevarkku udhavum thirukkaramum soormagalir, mevak kuzhaindhanaindha menkaramum ovaadhu

    …देवताओं को देने वाला पावन हाथ; दिव्य कन्याओं को कोमलता से गले लगाने वाला मुलायम हाथ; और वह फूल-सा हाथ जो…

  50. மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் மார்பகத்தில்

    Maari pozhindha malarkkaramum poondhodaiyal, sera anindha thirukkaramum maarbagaththil

    …बिना रुके बारिश-सा दान बरसाता है; फूलों की माला पहना पावन हाथ; और छाती पर…

  51. வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் மொய்த்த

    Vaiththa karathalamum vaamamarungir karamum, uyththa kurangil orukaramum moyththa

    …रखी हथेली; बाईं ओर का हाथ; जाँघ पर रखा एक हाथ; और…

  52. சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்த தடங்கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் தெறுபோர்

    Sirudhodiser kaiyum mani serndha thadangaiyum, karuvusamar angusamser kaiyum therupor

    …छोटी चूड़ियों वाला हाथ; घंटी थामे चौड़ा हाथ; भीषण युद्ध के लिए अंकुश थामे हाथ; और भयंकर युद्ध में…

  53. அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் முதிராத

    Adhirketakam suzhatrum angaith thalamum, kadhirvaal vidhirkkum karamum mudhiraadha

    …गूँजती ढाल घुमाने वाली हथेली; चमकती तलवार लहराने वाला हाथ; और वह चौड़ी छाती…

  54. கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார் வேட்டணைந்த அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் பைம்பொன்

    Kumbamulaich chevvaaik kodiyidaiyaar vettanaindha, amponmanippoon aganmaarbum paimpon

    …जो सोने और रत्नों के गहनों से सजी है, जिसे उनकी युवा, लाल होंठों वाली, पतली कमर वाली पत्नियाँ प्रेम से गले लगाती हैं; और सुनहरा…

  55. புரிநூலும் கண்டிகையும் பூம்பட்டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் திருவரையும்

    Purinoolum kandigaiyum poombattudaiyum, araignaanum kachchai azhagum thiruvaraiyum

    …जनेऊ, कंठहार, कोमल रेशमी वस्त्र, कमरबंद, सुंदर कच्छा और पावन कमर;

  56. நாதக்கழலு நகுமணிப் பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் சோதி

    Naadhakkazhalum nagumanip por kinkiniyum, paadhaththu anindha paripuramum sodhi

    …झनकती पायलें, चमकते रत्नों वाले सोने के घुँघरू, और पैरों में पहने नूपुर; और आपका दिव्य रूप…

  57. இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும் உளந்தனில்கண்டு

    Ilamparudhi nooraayirangodi pola, valandharu deiveega vadivum ulandhanil kandu

    …जो लाख करोड़ उगते सूर्यों जैसा चमकता है: जो इसे अपने हृदय में देखकर…

  58. ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின் மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே ஓதியஐந்து

    Aadharipporkku aaruyiraai anbaragath thaamaraiyin, meedhirukkum deiva vilakkoliye odhiya aindhu

    …उसे सँजोते हैं, आप उनके प्राण हैं। हे भक्तों के हृदय-कमल पर जलते दिव्य दीपक! जपे गए पंचाक्षर…

  59. ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய் ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே தாங்கரிய

    Ongaaraththu ulolikkum ulloliyaai aindhozhirkum, neengaadha peruruvaai nindrone thaangariya

    …और ओंकार के भीतर की ज्योति की भी भीतरी ज्योति आप हैं; पाँचों कर्मों से कभी अलग न होने वाले विराट रूप में आप खड़े हैं! असहनीय…

  60. மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் பந்தனையால்

    Mandhirame soriyaa vaanpadhame maamudiyaath, thondhamurum vanname thokkaagap bandhanaiyaal

    …मंत्र आपका रक्त हैं, ऊँचे पद आपका महामुकुट, वर्ण आपकी त्वचा, और जुड़े हुए…

  61. ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா வைத்த

    Oththa buvanath thuruve uromamaath, thaththuvangale saththa dhaadhuvaa vaiththa

    …लोक आपके रोम हैं, तत्त्व आपके शरीर की सात धातुएँ, और…

  62. கலையே அவயவமாக் காட்டும் அத்துவாவின் நிலையே வடிவமா நின்றோய் பலகோடி

    Kalaiye avayavamaak kaattum aththuvaavin, nilaiye vadivamaa nindroy palakodi

    …कलाएँ आपके अंग: छह मार्गों को ही अपना रूप बनाकर आप खड़े हैं! अनेक करोड़…

  63. அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசத்தி மூன்றுட் கரணமாய்த் தொண்டுபடும்

    Andam uruvaagi angam saraasaramaaik, kanda saththi moondrut karanamaaith thondupadum

    …ब्रह्मांड आपका शरीर हैं, सभी चर-अचर आपके अंग, तीन शक्तियाँ आपकी अंतःकरण; और सेवा करने वाले…

  64. ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே மேவ

    Aavip pulanukku arivu alippa aindhozhilum, evith thaninadaththum engove meva

    …जीवों की इंद्रियों को ज्ञान देने के लिए आप पाँचों कर्मों को अकेले चलाते हैं, हे हमारे राजा! हे जीवन जो…

  65. வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே பருவத்து

    Varum atta moorththamaam vaazhve meygnaanam, tharum atta yogath thavame paruvaththu

    …आठ रूपों में प्रकट होता है! हे सच्चा ज्ञान देने वाले अष्टांग योग के तप! और उचित समय पर…

  66. அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் சுகலளிதப்

    Agalaadha peranbu adaindhor agaththul, pugalaagum inbap poruppum sugalalidhap

    …आपका पर्वत वह आनंद है जो अटूट प्रेम पाने वालों के हृदय में आश्रय बनता है; और कोमल…

  67. பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் பாரின்பம்

    Perinba vellap perukkaaru meedhaanam, therinba nalgum thirunaadum paarinbam

    …आपकी नदी परमानंद की उमड़ती बाढ़ है; आपका पावन देश परम पद का सुख देता है; और सारे सांसारिक…

  68. எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் தொல்லுலகில்

    Ellaam kadandha irunilaththul pokkuvaravu, allaadhu uyarndha aninagarum thollulagil

    …सुखों से परे, आपका ऊँचा सुंदर नगर वहाँ है जहाँ जन्म-मृत्यु का आना-जाना नहीं; और इस प्राचीन संसार में…

  69. ஈறும் முதலும் அகன்று எங்கும் நிறைந்த ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் ஏறுமதம்

    Eerum mudhalum agandru engum niraindha aindhezhuththaik, koori nadaaththum kuragadhamum erumadham

    …आपका घोड़ा उस पंचाक्षर मंत्र के जप से चलता है जिसका न अंत है न आदि और जो सब में भरा है; और आपका हाथी…

  70. தோய்ந்து களித்தோர் துதிக்கையினார் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் வாய்ந்தசிவ

    Thoyndhu kaliththor thudhikkaiyinaar panjamalam, kaayndha sivagnaanak kadaakkalirum vaaindha siva

    …वह प्रबल शिव-ज्ञान है जिसने पाँचों मलों को जला दिया, जिसमें डूबे लोग जिसकी स्तुति करते हैं; और आपकी माला…

  71. பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் காரணத்துள்

    Pooranaththul pooranamaam bodham pudhumalaraa, naaragaththul kattu narundhodaiyum kaaranaththul

    …प्रेम के धागे में गुँथी है, जिसके ताज़े फूल शिव की पूर्णता में पूर्णता वाली चेतना हैं; और आपका गगनचुंबी ध्वज…

  72. ஐந்தொழிலும் ஓவாது அளித்துயர்ந்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் சந்ததமும்

    Aindhozhilum ovaadhu aliththuyarndha vaankodiyum, vandha nava naadha manimurasum sandhadhamum

    …पाँचों कर्मों को निरंतर करते हुए ऊँचा फहराता है; आपका रत्नजड़ित नगाड़ा नौ नादों में बजता है; और सदा…

  73. நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைந்தருளும் ஆணையும் தேக்கமழ்ந்து

    Neekkamindri aadi nizhalasaippaan pol buvanam, aakki asaindharulum aanaiyum thekkamazhndhu

    …आपकी आज्ञा लोकों को रचती और चलाती है, जैसे कोई नर्तक बिना रुके छायाओं को हिलाता है;

  74. வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே தேசுதிகழ்

    Veesum panuval vibudhar thaniththaniye, pesum dhasaangamenap petrone thesuthigazh

    हे प्रभु, जिनके ये दस राज-चिह्न हैं, जिनकी ज्ञानी अलग-अलग सुगंधित पदों में स्तुति करते हैं! तेजस्वी…

  75. பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி ஆங்கொருநாள்

    Poongayilai verpil punaimalarp poongodhaiyidap, paangurayum mukkan paranjodhi aangorunaal

    …सुंदर कैलाश पर्वत पर, फूलों से सजी देवी को बाईं ओर लिए, तीन नेत्रों वाली परम ज्योति ने एक दिन…

  76. வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் தந்து

    Vendhaguvarkku aatraadha vinnor muraikkirangi, aindhu mugaththodu adhomugamum thandhu

    …क्रूर असुरों से त्रस्त देवताओं की पुकार पर दया करके, अपने पाँच मुखों के साथ अधोमुख भी जोड़ा;

  77. திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப விரிபுவனம்

    Thirumugangal aaraagich chendhazharkan aarum, orumugamaaith theepporiyaaru uyppa viribuvanam

    उनके पावन मुख छह हो गए, और उनकी छह अग्नि-नेत्रों ने एक साथ छह चिंगारियाँ छोड़ीं, जो विशाल लोकों में…

  78. எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழற்பிழம்பைப் பொற்கரத்தால் அங்கண்

    Engum parakka imaiyor kandu anjudhalum, pongum thazharpizhambaip porkaraththaal angan

    …हर ओर फैल गईं; देवता देखकर डर गए, और उन्होंने उस धधकती आग के पुंज को अपने सुनहरे हाथ से…

  79. எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் அடுத்ததொரு

    Eduththamaiththu vaayuvaik kondu egudhiyendru, emmaan koduththalippa mellak kodupoi aduththadhoru

    …उठाकर समेटा, और हमारे प्रभु ने उसे वायु देवता को देकर ले जाने को कहा; वे उसे धीरे से ले गए और…

  80. பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் போதொருசற்று

    Bhoodhath thalaivakodu podhiyenath theekkadavul, seedhap bageeradhikke sendruyppap podhoru satru

    …तत्त्वों के प्रमुख अग्नि को सौंपकर कहा ‘इसे ले जाओ’; अग्नि देव उसे शीतल गंगा तक ले गए; पर थोड़ी ही देर में…

  81. அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள் சரவணத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் முன்னர்

    Annavalum kondamaidharku aatraal saravanaththil, senniyil kondu uyppath thiruvuruvaai munnar

    …वे भी उसे सँभाल न सकीं, और सिर पर रखकर शरवण सरोवर ले गईं, जहाँ उसने पावन रूप लिया; और फिर…

  82. அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கணிந்த நாதன் குறுமுறுவல்

    Arumeen mulaiyundu azhudhu vilaiyaadi, naruneer mudikkanindha naadhan kurumuruval

    …आपने छह कृत्तिकाओं का दूध पिया, रोए और खेले; फिर सिर पर सुगंधित गंगा धारण करने वाले प्रभु…

  83. கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக் காட்டுதலும் அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் தன்னிரண்டு

    Kanniyodum sendru avatkuk kaadhaluruk kaattudhalum, annaval kandu avvuruvam aarinaiyum thannirandu

    …मंद मुस्कान वाली देवी के साथ वहाँ गए और उन्हें प्यारा बालक दिखाया; उन छह रूपों को देखकर उन्होंने अपने दोनों…

  84. கையால் எடுத்தணைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் செய்ய

    Kaiyaal eduththanaiththuk kandhanenap perpunaindhu, meyyaarum ondraaga mevuviththuch cheyya

    …हाथों से उन्हें उठाकर गले लगाया, उनका नाम कंदन रखा, और छहों शरीरों को एक कर दिया;

  85. முகத்தில் அணைத்து உச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் சகத்தளந்த

    Mugaththil anaiththu uchchi mondhu mulaippaal, agaththul magizhpooththu aliththuch chagaththalandha

    उन्होंने उन्हें अपने चेहरे से लगाया, सिर चूमा, और आनंद से खिले हृदय से अपना दूध पिलाया;

  86. வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே கிள்ளைமொழி

    Vellai vidaimel vimalan karaththil aliththu, ullam uvappa uyarndhone killaimozhi

    …फिर सफ़ेद बैल पर विराजे निर्मल प्रभु के हाथों में सौंप दिया। हे उनके मन को प्रसन्न करते हुए बड़े होने वाले! तोते-सी बोली वाली…

  87. மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும் துங்க மடவார் துயர்தீர்ந்து தங்கள்

    Mangai silambin mani onbadhil thondrum, thunga madavaar thuyartheerndhu thangal

    …देवी की पायल के नौ रत्नों से नौ श्रेष्ठ कन्याएँ प्रकट हुईं; अपने दुःख से मुक्त होकर, अपनी…

  88. விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீரவாகு நெருப்பிலுதித்து

    Viruppaal aliththa nava veerarukkul munnon, maruppaayum thaar veeravaagu neruppiludhiththu

    …इच्छा से उन्होंने नौ वीरों को जन्म दिया, जिनमें सबसे बड़े माला पहने वीरबाहु हैं; और अग्नि से जन्मा मेढ़ा…

  89. அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கிடா அதனைச் சென்று கொணர்ந்து எங்கோன்

    Angan buvanam anaiththum azhiththulavum, sengan kidaa adhanaich chendru konarndhu engon

    …वह लाल आँखों वाला मेढ़ा जो सारे लोकों को नष्ट करता घूम रहा था, उसे वे जाकर ले आए, क्योंकि हमारे प्रभु ने…

  90. விடுக்குதி என்றுஉய்ப்ப அதன் மீதிவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா படைப்போன்

    Vidukkudhi endru uyppa adhan meedhivarndhu enthikkum, nadaththi vilaiyaadum naadhaa padaippon

    …कहा था ‘इसे ले आओ’। हे प्रभु, जो उस पर सवार होकर आठों दिशाओं में खेलते फिरे! जब सृष्टिकर्ता ब्रह्मा…

  91. அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை புகன்றிலையால்

    Agandhai uraippa marai aadhi ezhuththendru, ugandha pranavaththin unmai pugandrilaiyaal

    …घमंड से बोले, और वेदों के आदि अक्षर ॐ का सत्य नहीं बता पाए,

  92. சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ஙன் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே மட்டவிழும்

    Sittith thozhiladhanaich cheyvadhengngan endru munam, kuttich chiraiyiruththum komaane mattavizhum

    …तो आपने पूछा, ‘फिर तुम सृष्टि का काम कैसे करोगे?’, उनके सिर पर ठोका और उन्हें बंदी बना लिया, हे राजा!

  93. பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே கொன்னெடுவேல்

    Ponnang kadukkaip purisadaiyon potrisaippa, munnam piramam mozhindhone konneduvel

    जब शहद टपकते सुनहरे कोन्रै फूलों से सजी जटाओं वाले शिव ने आपकी स्तुति की, तब आपने उन्हें परम तत्त्व का अर्थ समझाया! अपने विशाल भाले से…

  94. தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீரவடி வேல் விடுத்தோனே சீரலைவாய்த்

    Thaaraganum maayath thadangiriyum thoolaaga, veeravadivel viduththone seeralaivaaith

    …आपने अपना वीर पैना भाला चलाकर तारकासुर और माया के विशाल पर्वत को धूल बना दिया! गौरवशाली अलैवाय…

  95. தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து வெள்ளைக்

    Thellu thirai kozhikkum sendhooril poik karunai, vellam enath thavisin veetrirundhu vellaik

    …तिरुचेंदूर, जहाँ साफ़ लहरें तट को धोती हैं, वहाँ जाकर आप करुणा की बाढ़ की तरह सिंहासन पर विराजे;

  96. கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்சூழ் மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் சயேந்திரனாம்

    Gayendhiranukku anjal aliththuk kadalsoozh, mayendhiraththil pukku imaiyor vaazhach chayendhiranaam

    …सफ़ेद हाथी वाले इंद्र को अभय दिया; और देवताओं की रक्षा के लिए, सागर से घिरी महेंद्रपुरी में, स्वयं को विजयी इंद्र कहने वाले…

  97. சூரனைச் சோதித்துவருக என்றுதடம் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே காரவுணன்

    Sooranaich chodhiththu varuga endru thadandhol, visaya veeranaith thoodhaaga viduththone kaaravunan

    …सूरपद्म को परखने के लिए आपने चौड़े कंधों वाले विजयी वीर वीरबाहु को दूत बनाकर भेजा! जब उस काले असुर ने…

  98. வானவரை விட்டு வணங்காமை யால் கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் பானு

    Vaanavarai vittu vanangaamaiyaal kodiya, dhaanavargal naarpadaiyum sangariththup baanu

    …न देवताओं को छोड़ा न सिर झुकाया, तब आपने क्रूर दानवों की चतुरंगिणी सेना का नाश किया;

  99. பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் சகமுடுத்த

    Pagaivan mudhalaaya paalarudan singa muganai vendru, vaagai mudiththoy sagamuduththa

    …भानुगोपन आदि पुत्रों सहित सिंहमुख को हराकर आपने विजय की माला पहनी!

  100. வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் சூருடலம் கீண்ட சுடர் வேலோய் போரவுணன்

    Vaaridhanil pudhiya maavaaik kidandha nedum, soorudalam keenda sudar veloy poravunan

    हे चमकते भाले वाले, जिसने संसार को घेरे सागर में अनोखे आम के पेड़ के रूप में पड़े सूर के विशाल शरीर को चीर दिया! उस योद्धा असुर का…

  101. அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த் துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் அங்கவற்றுள்

    Angam irukooraai adanmayilum sevalumaaith, thungamudan aarththezhundhu thondrudhalum angavatrul

    …शरीर दो टुकड़े होकर गरजते हुए एक बलवान मोर और एक मुर्गे के रूप में उठ खड़ा हुआ; और उनमें से…

  102. சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா ஏறி நடாத்தும் இளையோனே மாறிவரு

    Seerum aravaip porudha chithra mayil vaaganamaa, eri nadaaththum ilaiyone maarivaru

    …हे युवा प्रभु, जो फुफकारते साँप से लड़ने वाले रंग-बिरंगे मोर को वाहन बनाकर उस पर सवार हैं!

  103. சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன மேவத் தனித்துயர்த்த மேலோனே மூவர்

    Seval pagaiyaith thiralser padhaagaiyena, mevath thaniththuyarththa melone moovar

    हे श्रेष्ठ प्रभु, जिन्होंने पहले शत्रु रहे मुर्गे को अपना बलशाली ध्वज बनाकर ऊँचा उठाया! आपने…

  104. குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட் கொண்டளித்த தேவே மறைமுடிவாம்

    Kuraimudiththu vinnang kudiyetrith thevar, siraividuththu aatkondaliththa theve maraimudivaam

    …तीनों देवों का संकट मिटाया, देवताओं को स्वर्ग में फिर बसाया, उन्हें कैद से छुड़ाकर अपनी शरण में लिया, हे देव! आप जो वेदों का सार…

  105. சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே பொய்விரவு

    Saivak kozhundhe thavakkadale vaanudhavum, deivak kalitrai manamseydhone poyviravu

    …शैव धर्म के कोमल अंकुर हैं! हे तप के सागर! हे स्वर्ग के हाथी द्वारा पाली गई देवयानै से विवाह करने वाले!

  106. காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்தப் பூமருவு

    Kaamam munindha kalaimunivan kannarulaal, vaamamada maanin vayitrudhiththap poomaruvu

    झूठी कामना से मुँह मोड़ चुके ज्ञानी ऋषि की कृपा-दृष्टि से एक सुंदर हिरणी के गर्भ से जन्मी, और फूलों भरे…

  107. கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து மேன்மைபெறத்

    Kaanak kuravar kaligoorap poonguyilpol, enar punangaaththu inidhirundhu menmaiperath

    …जंगल में शिकारी कुरवों के आनंद के लिए, वे कोयल की तरह सुख से रहीं और बाजरे के खेत की रखवाली करती रहीं;

  108. தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே உள்ளம் உவந்து

    Thellith thinaimaavum thenum parindhaliththa, vallik kodiyai manandhone ullam uvandhu

    हे वल्ली से विवाह करने वाले, लता-सी उस कन्या से जिसने प्रेम से छना हुआ बाजरे का आटा और शहद अर्पित किया!

  109. ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோ னே நாறுமலர்க்

    Aaru thirup padhigandu aarezhuththum anbinudan, koorum avar sindhai kudikondone naarumalark

    हे उनके हृदय में बसने वाले, जो प्रसन्न मन से आपके छह पावन धाम देखते हैं और प्रेम से आपका षडक्षर मंत्र जपते हैं!

  110. கந்திப் பொதும்பர் எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே சந்ததமும்

    Kandhip podhumbar ezhu kaaralaikkum seeralaivaaich, chendhip padhipurakkum sevvele sandhadhamum

    हे लाल प्रभु, जो गौरवशाली अलैवाय, तिरुचेंदूर की रक्षा करते हैं, जिसके सुगंधित उपवन काले बादलों को छूते हैं! हर समय…

  111. பல்கோடி சன்மப் பகையும் அவமிருந்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் பல்கோடி

    Palkodi sanmap pagaiyum avamirundhum, palkodi vikkinamum palpiniyum palkodi

    …अनगिनत जन्मों की शत्रुता, अकाल मृत्यु, अनगिनत विघ्न और अनेक रोग, अनगिनत…

  112. பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும் அடல் பூதமுந்தீ நீரும் பொருபடையும் தீது அகலா

    Paadhagamum seyvinaiyum paambum pasaasum adal, bhoodhamum thee neerum porupadaiyum theedhu agalaa

    …पाप, जादू-टोना, साँप, पिशाच, भयंकर भूत, आग, पानी, लड़ती सेनाएँ, और न टलने वाली बुराइयाँ…

  113. வெவ்விடமும் துட்ட மிருகம் முதலாம் எவையும் எவ்விடம் வந்து எம்மை எதிர்ந்தாலும் அவ்விடத்தில்

    Vevvidamum thutta mirugam mudhalaam evaiyum, evvidam vandhu emmai edhirndhaalum avvidaththil

    …घातक विष, जंगली जानवर और ऐसी सारी चीज़ें: जहाँ कहीं भी ये हमारे सामने आएँ, वहीं…

  114. பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் மயில்வேலும் கச்சைத்

    Pachchaimayil vaaganamum pannirandu thinthozhum, achcham agatrum mayilvelum kachchaith

    …आपका हरा मोर वाहन, आपके बारह मज़बूत कंधे, डर भगाने वाला आपका भाला,

  115. திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் விரகிரணம்

    Thiruvaraiyum seeradiyum sengaiyum eeraaru, arulvizhiyum maamugangal aarum virakiranam

    …कमरबंद वाली पावन कमर, छोटे चरण, लाल हाथ, बारह कृपालु नेत्र, छह महान मुख,

  116. சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும் எதிர்தோன்ற வந்திடுக்கண்

    Sindhap punaindha thirumudigal oraarum, endhath thisaiyum edhirthondra vandhidukkan

    …और किरणें बिखेरते आपके छह पावन मुकुट हर दिशा में हमारे सामने प्रकट हों; और आप आकर…

  117. எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து உல்லாசமாக உளத்திருந்து பல்விதமாம்

    Ellaam podipaduththi evvaramum thandhu pugundhu, ullaasamaaga ulaththirundhu palvidhamaam

    …सारे संकटों को चूर-चूर करें, हर वरदान दें, और मेरे हृदय में आनंद से आकर बसें; और मुझे अनेक प्रकार की…

  118. ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்சீர்ப் பேசும் இயல் பல்காப்பியத் தொகையும் ஓசை

    Aasumudhal naarkaviyum attaavadhaanamum seerp, pesum iyal palkaappiyath thogaiyum osai

    …कविता, आशु-कविता से शुरू होने वाले चारों प्रकार, अष्टावधान की कला, और अपनी शैली के लिए सराहे गए अनेक महाकाव्य,

  119. எழுத்துமுத லாம் ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து ஒழுக்கமுடன்

    Ezhuththu mudhalaam aindhu ilakkanamum thoyndhu, pazhuththa thamizhppulamai paaliththu ozhukkamudan

    …और अक्षर से शुरू होने वाले व्याकरण के पाँचों अंग; मुझे पकी हुई तमिल विद्वत्ता का आशीर्वाद दें; और सदाचार के साथ…

  120. இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் தம்மைவிடுத்து

    Immaip pirappil iruvaadhanai agatri, mummaip perumalangal mosiththuth thammaividuththu

    …इसी जन्म में दोनों प्रकार के कर्म-संस्कार हटाएँ, तीनों बड़े मलों का नाश करें, और…

  121. ஆயும் பழைய அடியா ருடன்கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் சேய

    Aayum pazhaiya adiyaarudan koottith, thoyum parabogam thuyppiththuch cheya

    …मुझे अपने उन पुराने भक्तों के साथ मिलाएँ जो अहं छोड़कर आपको खोजते हैं, और मुझे उस परम सुख का स्वाद दें जिसमें वे डूबे हैं। हे बालक…

  122. கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு அடியேற்கு முன்னின்று அருள்

    Kadiyerkum poongamalak kaalkaatti aatkondu, adiyerku munnindru arul

    …मुझे अपने सुगंधित कमल-चरण दिखाएँ, मुझे अपना बना लें, और अपने इस दास के सामने खड़े होकर कृपा करें।