மாணிக்கம் கட்டி
Manikkam Katti
மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி, ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில், பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான், மாணிக் குறளனே தாலேலோ, வையம் அளந்தானே தாலேலோ.
Maanikkam katti vayiram idai katti, Aanip ponnaal seidha vannach chirutthottil, Peni unakkup Biraman vidudhandhaan, Maanik kuralane thaalelo, Vaiyam alandhaane thaalelo.
ब्रह्मा ने प्रेम से तुम्हारे लिए शुद्ध सोने का यह छोटा रंगीन पालना भेजा है, जिसमें माणिक जड़े हैं और बीच-बीच में हीरे। सो जाओ, नन्हे वामन ब्रह्मचारी, ताले-लो; सो जाओ, धरती नापने वाले, ताले-लो।
உடையார் கனமணியோடு ஒண் மாதுளம்பூ, இடை விரவிக் கோத்த எழில் தெழ்கினோடு, விடை ஏறு காபாலி ஈசன் விடுதந்தான், உடையாய் அழேல் அழேல் தாலேலோ, உலகம் அளந்தானே தாலேலோ.
Udaiyaar kanamaniyodu on maadhulampoo, Idai viravik kottha ezhil thezhkinodu, Vidai eru Kaabaali Eesan vidudhandhaan, Udaiyaai azhel azhel thaalelo, Ulagam alandhaane thaalelo.
वृषभ पर सवार, कपालधारी ईश शिव ने भारी रत्नों वाली करधनी भेजी है, जिसमें चमकते अनार के फूल-से मनके गुँथे हैं। रोओ मत, रोओ मत, मेरे स्वामी, ताले-लो; हे लोक नापने वाले, ताले-लो।
என்தம்பிரானார் எழில் திருமார்வர்க்குச், சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு, இந்திரன் தானும் எழில் உடைக் கிண்கிணி, தந்து உவனாய் நின்றான் தாலேலோ, தாமரைக் கண்ணனே தாலேலோ.
Endhambiraanaar ezhil thirumaarvarkkuch, Chandham azhagiya thaamaraith thaalarkku, Indhiran thaanum ezhil udaik kinkini, Thandhu uvanaai nindraan thaalelo, Thaamaraik kannane thaalelo.
सुंदर पावन वक्ष और सुडौल कमल-चरणों वाले मेरे प्रभु के लिए, स्वयं इंद्र सुंदर घुँघरू देकर प्रसन्न खड़े रहे। ताले-लो, कमलनयन, ताले-लो।
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும், அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும், அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார், செங்கண் கருமுகிலே தாலேலோ, தேவகி சிங்கமே தாலேலோ.
Sangin valampuriyum sevadik kinkiniyum, Angaich charivalaiyum naanum araitthodarum, Angan visumbil amarargal potthandhaar, Sengan karumugile thaalelo, Dhevaki singame thaalelo.
विशाल आकाश के देवताओं ने दक्षिणावर्ती शंख, लाल चरणों के लिए घुँघरू, नन्ही हथेलियों के लिए कंगन, कमर का धागा और करधनी भेजी है। ताले-लो, लाल आँखों वाले काले बादल; ताले-लो, देवकी के सिंह-शावक।
எழில் ஆர் திருமார்வுக்கு ஏற்கும் இவை என்று, அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு, வழு இல் கொடையான் வயிச்சிரவணன், தொழுது உவனாய் நின்றான் தாலேலோ, தூமணி வண்ணனே தாலேலோ.
Ezhil aar thirumaarvukku erkum ivai endru, Azhagiya aimpadaiyum aaramum kondu, Vazhu il kodaiyaan Vayichchiravanan, Thozhudhu uvanaai nindraan thaalelo, Thoomani vannane thaalelo.
निर्दोष दानी कुबेर एक सुंदर पंचायुध ताबीज़ और हार लेकर आए, यह कहते हुए कि ये तुम्हारे सुंदर पावन वक्ष पर सजेंगे, और प्रसन्न होकर हाथ जोड़े खड़े रहे। ताले-लो, निर्मल रत्न-वर्ण वाले, ताले-लो।
ஓதக் கடலின் ஒளிமுத்தின் ஆரமும், சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும், மா தக்க என்று வருணன் விடுதந்தான், சோதிச் சுடர் முடியாய் தாலேலோ, சுந்தரத் தோளனே தாலேலோ.
Odhak kadalin olimutthin aaramum, Saadhip pavalamum sandhach charivalaiyum, Maa thakka endru Varunan vidudhandhaan, Jodhich chudar mudiyaai thaalelo, Sundharath tholane thaalelo.
वरुण ने उफनते सागर के चमकते मोतियों का हार, उत्तम मूँगा और सुंदर कंगन यह कहकर भेजे कि ये महान के योग्य हैं। ताले-लो, दीप्तिमान मुकुट वाले; ताले-लो, सुंदर कंधों वाले।
கான் ஆர் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும், வான் ஆர் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும், தேன் ஆர் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள், கோனே அழேல் அழேல் தாலேலோ, குடந்தைக் கிடந்தானே தாலேலோ.
Kaan aar narundhuzhaai kaiseidha kanniyum, Vaan aar sezhunjolaik karpagatthin vaasigaiyum, Then aar malarmel Thirumangai potthandhaal, Kone azhel azhel thaalelo, Kudandhaik kidandhaane thaalelo.
मधु-भरे कमल पर बैठने वाली लक्ष्मी ने जंगल की सुगंधित तुलसी की हाथ से गुँथी माला और स्वर्ग के हरे-भरे उपवन के कल्पवृक्ष की माला भेजी है। रोओ मत, रोओ मत, मेरे राजा, ताले-लो; हे कुडंदै में लेटे प्रभु, ताले-लो।
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை, உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ, அச்சுதனுக்கு என்று அவனியாள் போத்தந்தாள், நச்சுமுலை உண்டாய் தாலேலோ, நாராயணா அழேல் தாலேலோ.
Kachchodu porsurigai kaambu kanagavalai, Uchchi manichchutti onthaal niraip porpoo, Achchudhanukku endru Avaniyaal potthandhaal, Nachchumulai undaai thaalelo, Naaraayanaa azhel thaalelo.
पृथ्वी देवी ने अच्युत के लिए सुनहरी कटार वाली कमरबंद, रेशम, सोने के कंगन, सिर के लिए रत्नजड़ित टीका और सुंदर डंठलों पर सुनहरे फूलों की पंक्ति भेजी है। ताले-लो, विषैले स्तन का दूध पीने वाले; रोओ मत, नारायण, ताले-लो।
மெய் திமிரும் நானப் பொடியொடு மஞ்சளும், செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும், வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள், ஐயா அழேல் அழேல் தாலேலோ, அரங்கத்து அணையானே தாலேலோ.
Mei thimirum naanap podiyodu manjalum, Seiya thadangannukku anjanamum sindhuramum, Veiya kalaippaagi kondu uvalaai nindraal, Aiyaa azhel azhel thaalelo, Arangatthu anaiyaane thaalelo.
भयंकर हिरण पर सवार दुर्गा तुम्हारे शरीर पर मलने के लिए सुगंधित चूर्ण और हल्दी, और तुम्हारी बड़ी लाल आँखों के लिए काजल और सिंदूर लेकर आईं और प्रसन्न खड़ी रहीं। रोओ मत, रोओ मत, मेरे स्वामी, ताले-लो; हे श्रीरंगम में शेष-शय्या पर लेटे प्रभु, ताले-लो।
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை உண்ட, அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய, செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல், எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.
Vanjanaiyaal vandha peichchi mulai unda, Anjana vannanai aaichchi thaalaattiya, Senjol maraiyavar ser Pudhuvaip Pattan sol, Enjaamai vallavarkku illai idardhaane.
सुंदर वाणी वाले वेदज्ञों के निवास पुदुवै के पट्टन (पेरियाळ्वार) के ये वचन बताते हैं कि कैसे ग्वालिन माँ ने उस साँवले को लोरी सुनाई, जिसने छल से आई राक्षसी का दूध पी लिया। जो इन्हें बिना कुछ छोड़े सीख लेते हैं, उन्हें कोई कष्ट नहीं होता।