भक्ति दरबार
English

தீராத விளையாட்டுப் பிள்ளை

Theeratha Vilaiyattu Pillai

स्तोत्र · तमिल · कृष्ण · सुब्रह्मण्य भारती

  1. தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணன், தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை.

    Theeraadha vilaiyaattup pillai Kannan, Theruvile pengalukku oyaadha thollai.

    कण्णन ऐसा बालक है जिसके खेल कभी खत्म नहीं होते, गली की लड़कियों के लिए कभी न थमने वाली परेशानी।

  2. தின்னப் பழங்கொண்டு தருவான் பாதி, தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான், என்னப்பன் என்னையன் என்றால் அதனை, எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்.

    Thinnap pazhangkondu tharuvaan paadhi, Thingindra podhile thattip parippaan, Ennappan ennaiyan endraal adhanai, Echchir padutthik kaditthuk koduppaan.

    वह खाने को फल लाकर आधा देता है, फिर खाते-खाते झपटकर छीन लेता है। अगर हम उसे 'मेरे प्यारे, मेरे स्वामी' कहकर मनाएँ, तो उसे जूठा करके, काटकर लौटाता है।

  3. தேனொத்த பண்டங்கள் கொண்டு என்ன, செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான், மானொத்த பெண்ணடி என்பான் சற்று, மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்.

    Thenottha pandangal kondu enna, Seidhaalum ettaadha uyaratthil vaippaan, Maanottha pennadi enbaan satru, Manamagizhum neratthile killi viduvaan.

    वह शहद जैसी मीठी चीज़ें लेकर, हम चाहे कुछ भी करें, ऐसी ऊँचाई पर रख देता है जहाँ हाथ न पहुँचे। कहता है, 'तू हिरनी-सी लड़की है', और जैसे ही मन खुश होने लगता है, चिकोटी काट लेता है।

  4. அழகுள்ள மலர்கொண்டு வந்தே என்னை, அழஅழச் செய்துபின் கண்ணை மூடிக்கொள், குழலிலே சூட்டுவேன் என்பான் என்னைக், குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்.

    Azhagulla malarkondu vandhe ennai, Azha azhach cheidhu pin kannai moodikkol, Kuzhalile soottuven enbaan ennaik, Kurudaakki malarinaith thozhikku vaippaan.

    वह सुंदर फूल लाकर मुझे रुला-रुलाकर कहता है, 'आँखें बंद करो, तुम्हारे बालों में लगाऊँगा'; और जब मेरी आँखें बंद होती हैं, तो फूल मेरी सहेली को दे देता है।

  5. பின்னலைப் பின்னின்று இழுப்பான் தலை, பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான், வன்னப் புதுச்சேலை தனிலே புழுதி, வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்.

    Pinnalaip pinnindru izhuppaan thalai, Pinne thirumbumunne sendru maraivaan, Vannap pudhuch chelai thanile puzhudhi, Vaarich chorindhe varutthik kulaippaan.

    वह पीछे से मेरी चोटी खींचता है, और मेरे सिर घुमाने से पहले ही भागकर छिप जाता है। मेरी नई रंगीन साड़ी पर धूल भर-भरकर उड़ाता है और मुझे खूब परेशान करता है।

  6. புல்லாங்குழல் கொண்டு வருவான் அமுது, பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான், கள்ளால் மயங்குவது போலே அதைக், கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்.

    Pullaangkuzhal kondu varuvaan amudhu, Pongith thadhumbu nar geetham padippaan, Kallaal mayanguvadhu pole adhaik, Kanmoodi vaai thirandhe kettiruppom.

    वह बाँसुरी लेकर आता है और अमृत-से उमड़ते मधुर गीत बजाता है। हम मानो मदिरा के नशे में, आँखें बंद किए और मुँह खोले उसे सुनते रहते हैं।

  7. அங்காந்திருக்கும் வாய் தனிலே கண்ணன், ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான், எங்காகிலும் பார்த்ததுண்டோ கண்ணன், எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ.

    Angaandhirukkum vaai thanile Kannan, Aarezhu katterumbaip pottu viduvaan, Engaagilum paartthadhundo Kannan, Engalaich cheigindra vedikkai ondro.

    हमारे खुले मुँह में कण्णन छह-सात बड़े काले चींटे डाल देता है! क्या कहीं ऐसा देखा है? और कण्णन हमसे बस यही एक शरारत नहीं करता।

  8. விளையாட வாவென்று அழைப்பான் வீட்டில், வேலையென்றால் அதைக் கேளாது இழுப்பான், இளையாரொடு ஆடிக் குதிப்பான் எம்மை, இடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான்.

    Vilaiyaada vaavendru azhaippaan veettil, Velaiyendraal adhaik kelaadhu izhuppaan, Ilaiyaarodu aadik kudhippaan emmai, Idaiyir pirindhu poi veettile solvaan.

    वह हमें खेलने बुलाता है, और अगर कहें कि घर में काम है तो सुनता नहीं, खींचकर ले जाता है। छोटों के साथ उछल-कूद करता है, फिर बीच में हमसे अलग होकर घर जाकर हमारी शिकायत कर देता है।

  9. அம்மைக்கு நல்லவன் கண்டீர் மூளி, அத்தைக்கு நல்லவன் தந்தைக்கும் அஃதே, எம்மைத் துயர்செய்யும் பெரியோர் வீட்டில், யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான்.

    Ammaikku nallavan kandeer mooli, Atthaikku nallavan thandhaikkum ahdhe, Emmaith thuyarseiyum periyor veettil, Yaavarkkum nallavan pole nadappaan.

    देखो, वह माँ के लिए अच्छा बच्चा है, बुआ के लिए भी, और पिता के लिए भी। जो बड़े हमें डाँटते हैं, उनके घरों में वह ऐसे रहता है जैसे सबका लाडला हो।

  10. கோளுக்கு மிகவும் சமர்த்தன் பொய்ம்மை, குத்திரம் பழிசொலக் கூசாச் சழக்கன், ஆளுக்கு இசைந்தபடி பேசித் தெருவில், அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்.

    Kolukku migavum samartthan poimmai, Kutthiram pazhisolak koosaach chazhakkan, Aalukku isaindhapadi pesith theruvil, Atthanai pengalaiyum aagaadhu adippaan.

    वह चुगली करने में बड़ा चतुर है, झूठ, चाल और दोष लगाने में ज़रा नहीं झिझकने वाला शरारती। हर किसी से उसकी पसंद की बात करके वह गली की सब लड़कियों को आपस में लड़वा देता है।