அமலனாதிபிரான்
Amalanadipiran
ஆபாத சூடம் அநுபூய ஹரிம் சயாநம், மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா, அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம், யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்.
Aapaada chudam anubhooya Harim sayaanam, Madhye Kaveraduhitur mudhitaantaraatmaa, Adrashtrutaam nayanayor vishayaantaraanaam, Yo nischikaaya manavai munivaahanam tam.
मैं मुनिवाहन तिरुप्पाणाळ्वार का ध्यान करता हूँ, जिन्होंने कावेरी की धाराओं के बीच लेटे हरि का चरणों से मुकुट तक दर्शन करके, आनंदित हृदय से निश्चय किया कि उनकी आँखें अब और कुछ नहीं देखेंगी।
காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி, தேட்டரும் உதர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய், வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து, பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே.
Kaattave kanda paadha kamalam nallaadai undhi, Thettarum udhara bandham thirumaarbu kandam sevvaai, Vaattamil kangal meni muniyerith thanipugundhu, Paattinaal kandu vaazhum Paanar thaal paravinome.
हम उन तिरुप्पाणर के चरणों की स्तुति करते हैं, जो मुनि के कंधों पर चढ़कर अकेले गर्भगृह में पहुँचे, और प्रभु ने जो दिखाया वह देखा: कमल-चरण, सुंदर वस्त्र, नाभि, दुर्लभ कटिबंध, पावन वक्ष, कंठ, लाल होंठ, अथक नेत्र और पूरा रूप; और जो देखा उसे गाकर जिए।
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த, விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன், நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக், கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே.
Amalan aadhipiraan adiyaarkku ennai aatpaduttha, Vimalan vinnavarkon viraiyaar pozhil Vengadavan, Nimalan ninmalan needhi vaanavan neel madhil Arangatthu ammaan thiruk, Kamala paadham vandhu en kannin ullana okkindradhe.
वह निर्मल आदि प्रभु, जिन्होंने मुझे अपने भक्तों का सेवक बनाया; देवताओं के निष्कलंक राजा; सुगंधित उपवनों वाले वेंकटम के स्वामी; निर्दोष, न्यायी स्वर्ग-स्वामी; ऊँची दीवारों वाले श्रीरंगम के प्रभु: उनके पावन कमल-चरण मानो आकर मेरी आँखों में बस गए हैं।
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற, நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக், கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச், சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே.
Uvandha ullatthanaai ulagam alandhu andam ura, Nivandha neel mudiyan andru nerndha nisaasararaik, Kavarndha venganaik Kaagutthan kadiyaar pozhil Arangatthu ammaan araich, Chivandha aadaiyin mel sendradhaam en sindhanaiye.
प्रसन्न हृदय से उन्होंने लोकों को नापा, उनका ऊँचा मुकुट आकाश छूने लगा; ककुत्स्थ वंश के राम बनकर उनके तीखे बाणों ने सामने आए राक्षसों को हर लिया। मेरा मन सुगंधित उपवनों वाले श्रीरंगम के प्रभु की कमर के लाल वस्त्र पर जाकर टिक गया है।
மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள், சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான், அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில், உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே.
Mandhi paai vada Vengada maamalai vaanavargal, Sandhi seiya nindraan Arangatthu aravin anaiyaan, Andhi pol niratthu aadaiyum adhan mel Ayanaip padaitthadhu or ezhil, Undhi meladhu andro adiyen ullatthu innuyire.
वह उत्तर के महान वेंकट पर्वत पर खड़े हैं, जहाँ बंदर उछलते हैं और देवता पूजा करते हैं; श्रीरंगम में शेषनाग पर लेटे हैं। मेरे हृदय का प्रिय प्राण उनके संध्या-रंग के वस्त्र पर, और उसके ऊपर उस सुंदर नाभि पर टिका है जिससे ब्रह्मा जन्मे।
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து, உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன், மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று, உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே.
Chathura maa madhil soozh Ilangaikku iraivan thalai patthu, Udhira otti or venganai uitthavan odhavannan, Madhura maa vandu paada maa mayil aadu Arangatthu ammaan thiru vayitru, Udhara bandham en ullatthul nindru ulaagindradhe.
सागर-वर्ण वाले प्रभु ने एक तीखा बाण चलाकर चौकोर ऊँची दीवारों से घिरी लंका के राजा के दसों सिर काट दिए। मधुर भौंरों के गान और मोरों के नृत्य वाले श्रीरंगम के प्रभु के पावन उदर का बंध मेरे हृदय में ठहरकर घूमता रहता है।
பாரம் ஆய பழவினை பற்று அறுத்து என்னைத் தன், வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என் உள் புகுந்தான், கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்து அம்மான் திரு, ஆர மார்வு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே.
Baaram aaya pazhavinai patru arutthu ennaith than, Vaaram aakki vaitthaan vaitthadhu andri en ul pugundhaan, Kora maadhavam seidhanan kol ariyen Arangatthu ammaan thiru, Aara maarvu adhu andro adiyenai aatkondadhe.
उन्होंने मेरे भारी पुराने कर्म काटकर मुझे अपना बना लिया; इतना ही नहीं, वह मेरे भीतर समा गए। मैं नहीं जानता मैंने कौन-सा कठोर तप किया था। श्रीरंगम के प्रभु का हार से सजा पावन वक्ष ही है जिसने मुझे अपना दास बनाया।
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய, வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன், அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும், உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே.
Thunda ven piraiyan thuyar theertthavan anjiraiya, Vandu vaazh pozhil soozh Aranga nagar meya appan, Andarandap pagirandatthu oru maa nilam ezhu maal varai mutrum, Unda kandam kandeer adiyenai uyak kondadhe.
उन्होंने अर्धचंद्रधारी शिव का कष्ट मिटाया; वह हमारे पिता हैं जो सुंदर पंखों वाले भौंरों के उपवनों से घिरे श्रीरंगम नगर में बसते हैं। देखो, उनका वह कंठ, जिसने भीतर-बाहर के सब लोक, विशाल धरती और सातों महापर्वत निगल लिए, उसी ने मुझे उबारा।
கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல், மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம், ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார், செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே.
Kaiyin aar suri sangu analaazhiyar neel varaipol, Meiyanaar thulaba viraiyaar kamazh neel mudi em, Aiyanaar ani Aranganaar aravin anaimisai meya maayanaar, Seiya vaai aiyo ennaich chindhai kavarndhadhuve.
उनके हाथों में घुमावदार शंख और अग्नि-सा चक्र है; उनका शरीर विशाल पर्वत-सा है; ऊँचा मुकुट तुलसी से सुगंधित है; वह हमारे स्वामी, सुंदर रंगनाथ, शेषनाग पर लेटे मायावी हैं। आह, उनके लाल होंठों ने मेरा मन चुरा लिया!
பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு, அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக், கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப், பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே.
Pariyan aagi vandha avunan udal keenda amararkku, Ariya aadhippiraan Arangatthu amalan mugatthuk, Kariya aagip pudai parandhu milirndhu sevvari odi neenda ap, Periya aaya kangal ennaip pedhaimai seidhanave.
उन्होंने विशाल रूप लेकर सामने आए असुर का शरीर चीर दिया; वह आदि प्रभु हैं, जिन तक देवता भी कठिनाई से पहुँचते हैं, श्रीरंगम के निर्मल प्रभु। उनके मुख की वे बड़ी आँखें, काली, फैली, चमकती, लाल धारियों वाली और लंबी, मुझे बेसुध कर गई हैं।
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய், ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான், கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில், நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே.
Aala maa maratthin ilai mel oru baalaganaai, Gnaalam ezhum undaan Arangatthu aravin anaiyaan, Kola maa mani aaramum mutthuth thaamamum mudivu illadhu or ezhil, Neela meni aiyo niraikondadhu en nenjinaiye.
विशाल बरगद के पत्ते पर बालक बनकर उन्होंने सातों लोक निगल लिए; वह श्रीरंगम में शेषनाग पर लेटे हैं। आह, उनका सुंदर रत्नहार, मोतियों की माला और अनंत सौंदर्य वाला नीला रूप मेरे पूरे हृदय में भर गया है।
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய், உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை, அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக், கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே.
Kondal vannanaik kovalanaai vennai, Unda vaayan en ullam kavarndhaanai, Andarkon ani Arangan en amudhinaik, Kanda kangal matru ondrinaik kaanaave.
वह वर्षा के बादल के रंग के हैं; ग्वाले बनकर उनके मुख ने मक्खन खाया; उन्होंने मेरा हृदय चुरा लिया; वह देवताओं के राजा, श्रीरंगम के सुंदर प्रभु, मेरे अमृत हैं। जिन आँखों ने उन्हें देख लिया, वे अब और कुछ नहीं देखेंगी।