भक्ति दरबार
English

திருமாலை

Thirumalai

स्तोत्र · तमिल · विष्णु · तोंडरडिप्पोडि आलवार

  1. மற்றொன்றும் வேண்டா மனமே மதிளரங்கர், கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ் உற்ற, திருமாலை பாடும் சீர்த் தொண்டரடிப்பொடி எம், பெருமானை எப்பொழுதும் பேசு.

    Matrondrum vendaa maname madhilarangar, katrinam meyththa kazhalinaikkeezh utra, thirumaalai paadum seerth thondaradippodi em, perumaanai eppozhudhum pesu.

    हे मन, और कुछ मत चाहो। सदा हमारे स्वामी तोंडरडिप्पोडि की बात करो, वे महिमावान भक्त जिन्होंने तिरुमालै गाई और जो बछड़े चराने वाले, परकोटे वाले श्रीरंगम के प्रभु के चरणों में रहते हैं।

  2. காவலில் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து, நாவலிட்டு உழி தருகின்றோம் நமன்தமர் தலைகள் மீதே, மூவுலகு உண்டு உமிழ்ந்த முதல்வ நின் நாமம் கற்ற, ஆவலிப்பு உடைமை கண்டாய் அரங்கமா நகருளானே.

    Kaavalil pulanai vaiththuk kalidhannaik kadakkap paaindhu, naavalittu uzhitharugindrom naman thamar thalaigal meedhe, moovulagu undu umizhndha mudhalva nin naamam katra, aavalippu udaimai kandaai arangamaa nagarulaane.

    हमने इंद्रियों पर पहरा बिठा दिया, कलियुग को लाँघ गए, और अब यम के दूतों के सिर पर निडर घूमते हैं। हे आदि प्रभु, जिन्होंने तीनों लोकों को निगलकर फिर उगल दिया, देखिए, यह आपका नाम सीखने का गर्व है, हे महान श्रीरंगम के स्वामी!

  3. பச்சைமா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும், இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும், அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.

    Pachchaimaa malaipol meni pavalavaai kamalach chengan, achchudhaa amarar ere aayardham kozhundhe ennum, ichchuvai thavira yaan poi indhira logam aalum, achchuvai perinum venden arangamaa nagarulaane.

    हरे विशाल पर्वत-सा शरीर, मूँगे-से होंठ, लाल कमल-सी आँखें: ‘हे अच्युत, अमरों के स्वामी, ग्वालों के लाडले!’ इस मिठास को छोड़कर, इंद्रलोक पर राज करने का सुख भी मिले तो मैं नहीं चाहूँगा, हे महान श्रीरंगम के स्वामी!

  4. வேத நூல் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும், பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு, பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்புத் துன்பம், ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே.

    Vedha nool piraayam nooru manisar thaam puguvarelum, paadhiyum urangip pogum nindradhil padhinaiyaandu, pedhai paalagan adhaagum pini pasi mooppuththunbam, aadhalaal piravi venden arangamaa nagarulaane.

    मनुष्य शास्त्रों में कहे सौ वर्ष जी भी लें, तो आधे नींद में चले जाते हैं; बाकी में पंद्रह साल नासमझ बचपन में, और जो बचे वे रोग, भूख, बुढ़ापे और दुःख में। इसलिए मैं जन्म नहीं चाहता, हे महान श्रीरंगम के स्वामी!

  5. மொய்த்த வல்வினையுள் நின்று மூன்றெழுத்து உடைய பேரால், கத்திரபந்தும் அன்றே பராங்கதி கண்டு கொண்டான், இத்தனை அடியர் ஆனார்க்கு இரங்கும் நம் அரங்கனாய, பித்தனைப் பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே.

    Moyththa valvinaiyul nindru moondrezhuththu udaiya peraal, kaththirabandhum andre paraangadhi kandukondaan, iththanai adiyar aanaarkku irangum nam aranganaaya, piththanaip petrum andho piraviyul pinangumaare.

    भारी पापों में डूबे क्षत्रबंधु ने भी आपके तीन अक्षरों वाले नाम से उसी दिन परम गति पा ली। हाय, हमारे रंगनाथ जैसे, अपने हर भक्त पर दीवानगी से दया करने वाले प्रभु के होते हुए भी लोग जन्म के चक्र में छटपटाते हैं!

  6. பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான் பெரியதோர் இடும்பை பூண்டு, உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரைந்து நைந்து, தண்டுழாய் மாலை மார்பன் தமர்களாய்ப் பாடி யாடி, தொண்டு பூண்டமுதம் உண்ணாத் தொழும்பர் சோறு உகக்குமாறே.

    Pendiraal sugangal uyppaan periyadhor idumbai poondu, undiraak kidakkumpodhu udalukke karaindhu naindhu, thanduzhaai maalai maarban thamargalaaip paadiyaadi, thondu poondu amudham unnaath thozhumbar soru ugakkumaare.

    स्त्रियों के सुख के लिए वे बड़ी मुसीबत उठाते हैं, रात भर जागते हैं और शरीर के लिए घुलते जाते हैं। ये दास शीतल तुलसी-माला वाले प्रभु के भक्त बनकर न गाते-नाचते हैं, न सेवा करके अमृत चखते हैं; इन्हें बस भोजन से कितना प्यार है!

  7. மறம் சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு, புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்போது அறிய மாட்டீர், அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட்செய்யாதே, புறம் சுவர் கோலம் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே.

    Maram suvar madhil eduththu marumaikke verumai poondu, puram suvar ottai maadam puralumpodhu ariya maatteer, aram suvaraagi nindra aranganaarkku aatcheyyaadhe, puram suvar kolam seydhu pul kavvak kidakkindreere.

    तुम पाप की दीवारें खड़ी करते हो और अगले जन्म के लिए खाली रह जाते हो; जब तक बाहरी दीवारों वाला यह छेदों भरा घर ढह न जाए, तुम समझोगे नहीं। धर्म की दीवार बनकर खड़े रंगनाथ की सेवा किए बिना, तुम बाहरी दीवार सजाते हो और पक्षियों के नोचने के लिए पड़े रहते हो।

  8. புலையறமாகி நின்ற புத்தொடு சமணமெல்லாம், கலையறக் கற்ற மாந்தர் காண்பரோ கேட்பரோ தாம், தலையறுப்புண்டும் சாவேன் சத்தியம் காண்மின் ஐயா, சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்.

    Pulaiyaramaagi nindra puththodu samanamellaam, kalaiyarak katra maandhar kaanbaro ketparo thaam, thalaiyaruppundum saaven saththiyam kaanmin aiyaa, silaiyinaal ilangai setra dhevane dhevan aavaan.

    क्या शास्त्रों को सचमुच जानने वाले लोग नीच मत बनकर खड़े बौद्ध और जैन उपदेशों को देखेंगे या सुनेंगे? चाहे मेरा सिर काट दिया जाए, मैं यह कहे बिना नहीं मरूँगा: सच मानिए, जिन देव ने धनुष से लंका का नाश किया, वही एकमात्र देव हैं।

  9. வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால், பொறுப்பரியனகள் பேசிற் போவதே நோய தாகிக், குறிப்பெனக்கு அடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே, அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகர் உளானே.

    Veruppodu samanar mundar vidhiyil saakkiyargal nin paal, poruppariyanagal pesil povadhe noyadhaagik, kurippenakku adaiyumaagil koodumel thalaiyai aange, aruppadhe karumam kandaai arangamaanagar ulaane.

    यदि जैन, मुंडित संन्यासी और अभागे बौद्ध नफ़रत से आपके बारे में असहनीय बातें कहें, तो वहाँ से चले जाना ही ठीक है, क्योंकि वह रोग जैसा है; और यदि मुझे मौका और शक्ति मिले, तो मैं वहीं उनके सिर काटना अपना कर्तव्य समझूँगा, हे महान श्रीरंगम के स्वामी।

  10. மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள், உற்றபோதன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர், அற்றமேல் ஒன்று அறியீர் அவனல்லால் தெய்வமில்லை, கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே.

    Matrumor deivam unde madhiyilaa maanidangaal, utrapodhandri neengal oruvan endru unara maatteer, atramel ondru ariyeer avanallaal deivamillai, katrinam meyththa endhai kazhalinai panimin neere.

    अरे नासमझ लोगो, क्या कोई और देव है? जब तक संकट न आए, तुम नहीं समझोगे कि वही एक है। अंत के बारे में तुम कुछ नहीं जानते। उनके सिवा कोई देव नहीं: बछड़े चराने वाले हमारे पिता के चरणों में झुको।

  11. நாட்டினான் தெய்வம் எங்கும் நல்லதோர் அருள் தன்னாலே, காட்டினான் திருவரங்கம் உய்பவர்க்கு உய்யும் வண்ணம், கேட்டிரே நம்பிமீர்காள் கெருட வாகனனும் நிற்கச், சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே.

    Naattinaan deivam engum nalladhor arul thannaale, kaattinaan thiruvarangam uybavarkku uyyum vannam, ketteere nambimeergaal geruda vaahananum nirkach, chettai than madiyagaththuch chelvam paarththirukkindreere.

    अपनी कृपा से उन्होंने हर जगह देवता स्थापित किए, और उद्धार चाहने वालों को श्रीरंगम को उद्धार का मार्ग दिखाया। सुनो भले लोगो: जब गरुड़ पर सवार प्रभु यहीं खड़े हैं, तुम दरिद्रता की देवी की गोद में धन ढूँढ़ रहे हो!

  12. ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச், செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார், மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா, கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே.

    Oru villaal ongu munneer adaiththu ulagangal uyyach, cheruvile arakkar konaich chetra nam sevaganaar, maruviya periya koyil madhil thiruvarangam ennaa, karuvile thiruvilaadheer kaalaththaik kazhikkindreere.

    एक ही धनुष से उन्होंने उमड़ते सागर पर बाँध बनाया और लोकों को बचाने के लिए युद्ध में राक्षसराज को मारा: हमारे वे वीर परकोटे वाले श्रीरंगम के महान मंदिर में बसते हैं। अरे गर्भ से ही अभागो, तुम कभी ‘श्रीरंगम’ कहे बिना अपना समय गँवाते हो!

  13. நமனும் முற்கலனும் பேச நரகில் நின்றார்கள் கேட்க, நரகமே சுவர்க்கமாகும் நாமங்கள் உடைய நம்பி, அவனது ஊர் அரங்கமென்னாது அயர்த்து வீழ்ந்தளிய மாந்தர், கவலையுள் படுகின்றாரென்று அதனுக்கே கவல்கின்றேனே.

    Namanum murkalanum pesa naragil nindraargal ketka, naragame suvarkkamaagum naamangal udaiya nambi, avanadhu oor arangam ennaadhu ayarththu veezhndhu aliya maandhar, kavalaiyul padugindraar endru adhanukke kavalgindrene.

    जब यम और मुनि मुद्गल ने उनके नाम लिए और नरक में खड़े जीवों ने सुने, तो नरक ही स्वर्ग बन गया: ऐसे हैं प्रभु के नाम। मुझे बस इसी का दुःख है कि बेचारे लोग ‘उनका नगर श्रीरंगम’ कहना भूलकर गिर जाते हैं और चिंता में डूबे रहते हैं।

  14. எறியும் நீர் வெறிகொள் வேலை மாநிலத்து உயிர்கள் எல்லாம், வெறி கொள் பூந்துளவ மாலை விண்ணவர் கோனை யேத்த, அறிவிலா மனிசர் எல்லாம் அரங்கம் என்று அழைப்பராகில், பொறியில் வாழ் நரகம் எல்லாம் புல் எழுந்து ஒழியும் அன்றே.

    Eriyum neer verikol velai maanilaththu uyirgal ellaam, veri kol poondhulava maalai vinnavar konai eththa, arivilaa manisar ellaam arangam endru azhaipparaagil, poriyil vaazh naragam ellaam pul ezhundhu ozhiyum andre.

    यदि उफनती लहरों वाले सागर से घिरी इस विशाल धरती के सभी प्राणी सुगंधित तुलसी-माला वाले देवराज की स्तुति करें, और नासमझ लोग भी ‘श्रीरंगम’ पुकारें, तो इंद्रियों के सहारे जीने वालों के सारे नरक घास से ढककर मिट जाएँ।

  15. வண்டினம் முரலும் சோலை மயிலினம் ஆலும் சோலை, கொண்டல் மீதணவும் சோலை குயிலினம் கூவும் சோலை, அண்டர் கோன் அமரும் சோலை அணி திருவரங்க மென்னா, மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி நாய்க்கு இடுமினீரே.

    Vandinam muralum solai mayilinam aalum solai, kondal meedhanavum solai kuyilinam koovum solai, andar kon amarum solai ani thiruvarangam ennaa, mindar paaindhunnum sotrai vilakki naaykku idumineere.

    जहाँ भौंरे गुनगुनाते हैं, मोर नाचते हैं, बादल छूते हैं, कोयलें कूकती हैं, और देवराज बसते हैं, ऐसे उपवनों वाला सुंदर श्रीरंगम! जो ढीठ लोग यह कहे बिना टूटकर खाते हैं, उनका भोजन छीनकर कुत्तों को डाल दो।

  16. மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப், பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி யுடைய கோமான், உய்யப்போம் உணர்வினார்கட்கு ஒருவன் என்று உணர்ந்த பின்னை, ஐயப்பாடு அறுத்துத் தோன்றும் அழகனூர் அரங்கமன்றே.

    Meyyarkke meyyanaagum vidhiyilaa ennaip polap, poyyarkke poyyanaagum putkodiyudaiya komaan, uyyappom unarvinaarkatku oruvan endru unarndha pinnai, aiyappaadu aruththuth thondrum azhaganoor arangamandre.

    गरुड़-ध्वज वाले राजा सच्चों के लिए सच्चे हैं, और मुझ जैसे अभागे झूठों के लिए झूठे। श्रीरंगम उन सुंदर प्रभु का नगर है जो उद्धार की समझ रखने वालों के सामने, उनके यह जान लेने पर कि वही एक हैं, हर संदेह मिटाकर प्रकट होते हैं।

  17. சூதனாய்க் கள்வனாகித் தூர்த்தரோடு இசைந்த காலம், மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனைப், போதரே என்று சொல்லிப் புந்தியில் புகுந்து தன்பால், ஆதரம் பெருக வைத்த அழகன் ஊர் அரங்கம் அன்றே.

    Soodhanaaik kalvanaagith thoorththarodu isaindha kaalam, maadharaar kayalkan ennum valaiyul pattu azhundhuvenaip, podhare endru sollip pundhiyil pugundhu thanpaal, aadharam peruga vaiththa azhagan oor arangamandre.

    जब मैं जुआरी और चोर था, बदमाशों की संगत में था, स्त्रियों की मछली-सी आँखों के जाल में डूबा था, तब उन्होंने कहा ‘इधर आओ’, मेरे मन में प्रवेश किया, और अपने प्रति मेरा प्रेम बढ़ाया। श्रीरंगम उन्हीं सुंदर प्रभु का नगर है।

  18. விரும்பி நின்றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன்றில்லை, இரும்பு போல் வலிய நெஞ்சம் இறை இறை உருகும் வண்ணம், சுரும்பு அமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட, கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணிணை களிக்குமாறே.

    Virumbi nindreththa maatten vidhiyilen madhiyondrillai, irumbu pol valiya nenjam irai irai urugum vannam, surumbu amar solai soozhndha arangamaa koyil konda, karumbinaik kandukondu en kaninai kalikkumaare.

    मैं प्रेम से खड़ा होकर उनकी स्तुति नहीं करता; मैं अभागा हूँ, मुझमें कोई समझ नहीं। फिर भी लोहे-सा कठोर मेरा हृदय थोड़ा-थोड़ा पिघलता है, और भौंरों भरे उपवनों से घिरे श्रीरंगम के महान मंदिर में बसे उस मीठे गन्ने को देखकर मेरी दोनों आँखें आनंदित होती हैं।

  19. இனி திரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே, தனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான், கனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள், பனி அரும்பு உதிருமாலோ என் செய்கேன் பாவியேனே.

    Inithiraith thivalai modha eriyum than paravai meedhe, thanikidandhu arasu seyyum thaamaraik kannan emmaan, kaniyirundhanaiya sevvaaik kannanaik kanda kangal, pani arumbu udhirumaalo en seygen paaviyene.

    शीतल सागर पर, जहाँ मीठी लहरें फुहारें उछालती हैं, हमारे कमल-नयन प्रभु अकेले लेटकर राज करते हैं। पके फल-से लाल होंठों वाले कण्णन को देखने वाली मेरी आँखें ओस की बूँदों-से आँसू बहाती हैं। मैं पापी क्या करूँ?

  20. குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி, கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு, உடல் எனக்கு உருகுமாலோ எஞ்செய்கேன் உலகத்தீரே.

    Kudadhisai mudiyai vaiththuk gunadhisai paadham neetti, vadadhisai pinbu kaattith thendhisai ilangai nokki, kadal nirak kadavul endhai aravanaith thuyilumaa kandu, udal enakku urugumaalo enseygen ulagaththeere.

    पश्चिम की ओर सिर, पूर्व की ओर फैले चरण, उत्तर की ओर पीठ और दक्षिण में लंका की ओर दृष्टि करके, सागर के रंग वाले हमारे देव, हमारे पिता, नाग-शय्या पर सोते हैं। यह देखकर मेरा पूरा शरीर पिघल जाता है। हे संसार के लोगो, मैं क्या करूँ?

  21. பாயு நீர் அரங்கம் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட, மாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும், தூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும், ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே.

    Paayu neer arangam thannul paambanaip pallikonda, maayanaar thiru nanmaarvum maragadha uruvum tholum, thooya thaamaraik kangalum thuvaridhazhp pavala vaayum, aayaseer mudiyum thesum adiyarorkku agalalaame.

    बहती नदी वाले श्रीरंगम में अद्भुत प्रभु नाग-शय्या पर लेटे हैं। क्या उनके भक्त कभी उनकी पावन सुंदर छाती, पन्ने-से रूप और कंधों, निर्मल कमल-नेत्रों, मूँगे-से लाल होंठों, महिमामय मुकुट और तेज से दूर हो सकते हैं?

  22. பணிவினால் மனமது ஒன்றிப் பவளவாய் அரங்கனார்க்கு, துணிவினால் வாழமாட்டாத் தொல்லை நெஞ்சே நீ சொல்லாய், அணியனார் செம்பொன் ஆய அருவரை அனைய கோயில், மணியனார் கிடந்தவாற்றை மனத்தினால் நினைக்கலாமே.

    Panivinaal manamadhu ondrip pavalavaai aranganaarkku, thunivinaal vaazhamaattaath thollai nenje nee sollaai, aniyanaar sembon aaya aruvarai anaiya koyil, maniyanaar kidandhavaatrai manaththinaal ninaikkalaame.

    हे परेशान करने वाले मन, जो मूँगे-से होंठों वाले रंगनाथ पर विनम्रता से टिककर साहस से भक्ति में नहीं जी पाता, बताओ: क्या कोई कल्पना भी कर सकता है कि हमारे इतने पास रहने वाले रत्न-से प्रभु लाल सोने के दुर्लभ पर्वत जैसे उस मंदिर में कैसे लेटे हैं?

  23. பேசிற்றே பேசலல்லால் பெருமை ஒன்று உணரலாகாது, ஆசற்றார் தங்கட்கல்லால் அறியல் ஆவானுமல்லன், மாசற்றார் மனத்துளானை வணங்கி நாம் இருப்பதல்லால், பேசத்தான் ஆவதுண்டோ பேதை நெஞ்சே நீ சொல்லாய்.

    Pesitre pesal allaal perumai ondru unaralaagaadhu, aasatraar thangatkallaal ariyal aavaanum allan, maasatraar manaththulaanai vanangi naam iruppadhallaal, pesaththaan aavadhundo pedhai nenje nee sollaai.

    हम बस वही दोहरा सकते हैं जो कहा जा चुका है; उनकी महिमा समझी नहीं जा सकती। निर्दोषों के सिवा उन्हें कोई नहीं जान सकता। निर्मल मनों में बसने वाले को प्रणाम करने के सिवा, क्या हम कुछ कह भी सकते हैं? बताओ, भोले मन।

  24. கங்கயில் புனிதமாய காவிரி நடுவு பாட்டு, பொங்கு நீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள், எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழையேனே.

    Gangaiyir punidhamaaya kaaviri naduvu paattu, pongu neer parandhu paayum poompozhil arangam thannul, engal maal iraivan eesan kidandhadhor kidakkai kandum, enganam marandhu vaazhgen ezhaiyen ezhaiyene.

    गंगा से भी पावन कावेरी के बीच, जिसका उमड़ता जल फैलकर बहता है, फूलों भरे उपवनों वाले श्रीरंगम में मैंने अपने माल, प्रभु और ईश को लेटे देखा है। मैं अभागा उसे भूलकर कैसे जी सकता हूँ?

  25. வெள்ள நீர் பரந்து பாயும் விரிபொழில் அரங்கம் தன்னுள், கள்ளனார் கிடந்தவாறும் கமல நன் முகமும் கண்டு, உள்ளமே வலியைப் போலும் ஒருவன் என்று உணர மாட்டாய், கள்ளமே காதல் செய்து உன் கள்ளத்தே கழிக்கின்றாயே.

    Vella neer parandhu paayum viripozhil arangam thannul, kallanaar kidandhavaarum kamala nan mugamum kandu, ullame valiyaip polum oruvan endru unara maattaai, kallame kaadhal seydhu un kallaththe kazhikkindraaye.

    हे मन, तुमने बाढ़ के फैलते जल वाले, चौड़े उपवनों वाले श्रीरंगम में दिल चुराने वाले प्रभु को लेटे और उनका सुंदर कमल-मुख देखा, फिर भी तुम सचमुच कठोर हो: तुम नहीं समझते कि वही एक हैं, बल्कि छल से प्रेम करके उसी में जीवन गँवाते हो।

  26. குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை தன்னை, ஒளித்திட்டேன் என்கண் இல்லை நின்கணும் பத்தன் அல்லேன், களிப்பதென் கொண்டு நம்பீ கடல்வண்ணா கதறுகின்றேன், அளித்தெனக்கு அருள் செய் கண்டாய் அரங்கமா நகருளானே.

    Kuliththu moondru analai ombum kurikol andhanamai thannai, oliththitten enkan illai ninkanum baththan allen, kalippadhen kondu nambee kadalvannaa kadharugindren, aliththenakku arulsey kandaai arangamaa nagarulaane.

    स्नान करके तीन पवित्र अग्नियों की सेवा का ब्राह्मण-धर्म मैंने खो दिया है; वह मुझमें नहीं, और मैं आपका भक्त भी नहीं। हे प्रभु, हे सागर-वर्ण, मैं किससे आनंदित होऊँ? मैं आपको पुकारता हूँ: दया करके मुझ पर कृपा कीजिए, हे महान श्रीरंगम के स्वामी।

  27. போதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி புனைய மாட்டேன், தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன், காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன் அது தன்னாலே, ஏதிலேன் அரங்கர்க்கு எல்லே எஞ்செய்வான் தோன்றினேனே.

    Podhellaam podhu kondu un ponnadi punaiya maatten, theedhilaa mozhigal kondu un thirugunam seppa maatten, kaadhalaal nenjam anbu kalandhilen adhu thannaale, edhilen arangarkku elle enseyvaan thondrinene.

    मैं हर समय फूलों से आपके सुनहरे चरण नहीं सजाता, न निर्मल शब्दों में आपके पावन गुण कहता हूँ; मेरा हृदय प्रेम में आपसे घुला-मिला नहीं। इसलिए मैं रंगनाथ के लिए पराया हूँ। हाय, मैं किसलिए जन्मा?

  28. குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டோடித், தரங்க நீரடைக்கலுற்ற சலமிலா அணிலம் போலேன், மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால், அரங்கனார்க்காட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.

    Kurangugal malaiyai nookkak kuliththuth thaam purandittodith, tharanga neeradaikkalutra salamilaa anilam polen, marangalpol valiya nenjam vanjanen nenju thannaal, aranganaarkkaat seyyaadhe aliyaththen ayarkkindrene.

    जब वानर पर्वत सागर में धकेल रहे थे, तो सरल गिलहरी नहाकर, रेत में लोटकर लहरें रोकने में मदद को दौड़ी; मैं उसके जैसा नहीं। मेरा हृदय लकड़ी-सा कठोर है, मैं छली हूँ, और उसी हृदय के कारण रंगनाथ की सेवा नहीं करता; मैं बेचारा थक जाता हूँ।

  29. உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச், செம்புலால் உண்டு வாழும் முதலை மேல் சீறி வந்தார், நம் பரமாயதுண்டே நாய்களோம் சிறுமை யோரா, எம்பிராற்கு ஆட் செய்யாதே என் செய்வான் தோன்றினேனே.

    Umbaraal ariyalaagaa oliyulaar aanaikkaagich, chembulaal undu vaazhum mudhalai mel seeri vandhaar, nambaramaayadhunde naaygalom sirumai oraa, embiraarku aat seyyaadhe enseyvaan thondrinene.

    जिन तेजस्वी प्रभु को देवता भी नहीं जान पाते, वे हाथी की ख़ातिर लाल मांस खाकर जीने वाले मगर पर क्रोध से टूट पड़े। क्या उनके लिए कोई बोझ बहुत बड़ा है? वे हम कुत्तों जैसों की तुच्छता नहीं देखते। अपने प्रभु की सेवा किए बिना मैं किसलिए जन्मा?

  30. ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை, பாரில் நின் பாத மூலம் பற்றிலேன் பரம மூர்த்தி, காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன், ஆருளர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே.

    Oorilen kaani illai uravu matroruvar illai, paaril nin paadha moolam patrilen parama moorththi, kaaroli vannane en kannane kadharugindren, aarular kalaigan ammaa arangamaa nagarulaane.

    मेरा न कोई गाँव है, न ज़मीन, न कोई और रिश्तेदार; इस धरती पर मैंने आपके चरण भी नहीं पकड़े, हे परम मूर्ति। हे काले बादलों-से चमकने वाले, मेरे कण्णा, मैं पुकारता हूँ: मेरी रक्षा करने वाला और कौन है, हे महान श्रीरंगम के स्वामी?

  31. மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன்சொல் இல்லை, சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா, புனத்துழாய் மாலையானே பொன்னி சூழ் திருவரங்கா, எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னை ஆளுடைய கோவே.

    Manaththilor thooymai illai vaayilor insol illai, sinaththinaal setram nokkith theevili vilivan vaalaa, punaththuzhaai maalaiyaane ponni soozh thiruvarangaa, enakkinik kadhiyen sollaai ennai aaludaiya kove.

    मेरे मन में कोई पवित्रता नहीं, होंठों पर कोई मीठा शब्द नहीं; क्रोध में मैं दुश्मन ढूँढ़कर बेवजह कोसता हूँ। हे जंगली तुलसी-माला वाले, पोन्नि नदी से घिरे श्रीरंगम के स्वामी, बताइए, अब मेरा सहारा क्या है, हे मुझ पर अधिकार रखने वाले राजा?

  32. தவத்துளார் தம்மில் அல்லேன் தனம் படைத்தாரில் அல்லேன், உவர்த்த நீர் போல என்றன் உற்றவர்க்கு ஒன்றும் இலேன், துவர்த்த செவ்வாயினார்க்கே துவக்கறத் துரிசனானேன், அவத்தமே பிறவி தந்தாய் அரங்கமா நகருளானே.

    Thavaththulaar thammil allen thanam padaiththaaril allen, uvarththa neer pola endran utravarkku ondrum ilen, thuvarththa sevvaayinaarkke thuvakkarath thurisanaanen, avaththame piravi thandhaai arangamaa nagarulaane.

    मैं न तपस्वियों में हूँ, न धनवानों में; खारे पानी की तरह मैं अपने लोगों के किसी काम का नहीं। मैं केवल लाल होंठों वाली स्त्रियों के लिए जीकर पूरा पापी बन गया। आपने मुझे व्यर्थ जन्म दिया, हे महान श्रीरंगम के स्वामी।

  33. ஆர்த்து வண்டு அலம்பும் சோலை அணி திருவரங்கம் தன்னுள், கார்த்திரளனைய மேனிக் கண்ணனே உன்னைக் காணும், மார்க்கம் ஒன்று அறியமாட்டா மனிசரில் துரிசனாய, மூர்க்கனேன் வந்து நின்றேன் மூர்க்கனேன் மூர்க்கனேனே.

    Aarththu vandu alambum solai ani thiruvarangam thannul, kaarththiralanaiya menik kannane unnaik kaanum, maarggam ondru ariyamaattaa manisaril thurisanaaya, moorkkanen vandhu nindren moorkkanen moorkkanene.

    हे कण्णा, घिरे बादलों-से शरीर वाले, भौंरों की गूँज भरे उपवनों वाले सुंदर श्रीरंगम में! आपको देखने का कोई मार्ग न जानने वालों में सबसे बड़ा पापी, मैं मूर्ख, यहाँ आकर खड़ा हूँ: मूर्ख, निरा मूर्ख।

  34. மெய்யெலாம் போகவிட்டு விரி குழலாரில் பட்டு, பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால், பொய்யனேன் வந்து நின்றேன் பொய்யனேன் பொய்யனேனே.

    Meyyelaam pogavittu viri kuzhalaaril pattu, poyyelaam podhindhukonda potkanen vandhu nindren, aiyane arangane un arul ennum aasai thannaal, poyyanen vandhu nindren poyyanen poyyanene.

    मैंने सारा सच छोड़ दिया, खुले बालों वाली स्त्रियों में फँस गया, और झूठ से भरा निकम्मा बन गया; मैं यहाँ आकर खड़ा हूँ। हे प्रभु, हे रंगनाथ, आपकी कृपा नाम की चीज़ की लालसा में, मैं झूठा यहाँ आकर खड़ा हूँ: झूठा, निरा झूठा।

  35. உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வு ஒன்று இல்லாக், கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு, உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடன் இருந்து அறிதியென்று, வெள்கிப்போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே.

    Ullaththe uraiyum maalai ulluvaan unarvu ondru illaak, kallaththen naanum thondaaith thondukke kolam poondu, ulluvaar ullitru ellaam udan irundhu aridhi endru, velgippoi ennulle naan vilavarach chiriththittene.

    मैं ऐसा छली हूँ जिसमें हृदय में बसे माल का ध्यान करने की कोई भावना नहीं, फिर भी भक्त का भेस धारण कर लिया। यह जानकर कि आप हमारे भीतर रहकर लोगों के मन की हर बात जानते हैं, मैं शर्मिंदा होकर अपने आप पर पेट पकड़कर हँस पड़ा।

  36. தாவியன்று உலகம் எல்லாம் தலை விளாக் கொண்ட எந்தாய், சேவியேன் உன்னையல்லால் சிக்கெனச் செங்கண் மாலே, ஆவியே அமுதே என்றன் ஆருயிர் அனைய எந்தாய், பாவியேன் உன்னை அல்லால் பாவியேன் பாவியேனே.

    Thaaviyandru ulagam ellaam thalaivilaak konda endhaai, seviyen unnaiyallaal sikkenach chengan maale, aaviye amudhe endran aaruyir anaiya endhaai, paaviyen unnai allaal paaviyen paaviyene.

    हे मेरे पिता, जिन्होंने उस दिन सारे लोकों को लाँघकर नाप लिया! मैं दृढ़ता से आपके सिवा किसी की पूजा नहीं करूँगा, हे लाल नेत्रों वाले माल। हे मेरे प्राण, हे अमृत, हे मेरे प्राणों जैसे प्यारे पिता! मुझ पापी का आपके सिवा कोई नहीं: पापी, निरा पापी।

  37. மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே, உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையுள் பட்டு, உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே உன்னையன்றே, அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்கமா நகருளானே.

    Mazhaikkandru varai mun endhum maindhane madhuravaare, uzhaikkandre pola nokkam udaiyavar valaiyul pattu, uzhaikkindrerku ennai nokkaadhu ozhivadhe unnaiyandre, azhaikkindren aadhi moorththi arangamaa nagarulaane.

    हे बलवान, जिन्होंने कभी बारिश से बचाने के लिए पर्वत उठाया! हे मिठास की नदी! हिरण के बच्चे जैसी आँखों वाली स्त्रियों के जाल में फँसा मैं छटपटाता हूँ; क्या आप मुँह फेरकर मुझे नहीं देखेंगे? मैं केवल आपको पुकारता हूँ, हे आदि मूर्ति, हे महान श्रीरंगम के स्वामी!

  38. தெளிவிலாக் கலங்கல் நீர் சூழ் திருவரங்கத்துள் ஓங்கும், ஒளியுளார் தாமே அன்றே தந்தையும் தாயும் ஆவார், எளியதோர் அருளும் அன்றே என் திறத்து எம்பிரானார், அளியன் நம் பையல் என்னார் அம்மவோ கொடியவாறே.

    Thelivilaak kalangal neer soozh thiruvarangaththul ongum, oliyulaar thaame andre thandhaiyum thaayum aavaar, eliyadhor arulum andre en thiraththu embiraanaar, aliyan nam paiyal ennaar ammavo kodiyavaare.

    गंदले पानी से घिरे श्रीरंगम में चमकने वाले वे तेजस्वी प्रभु स्वयं मेरे पिता और माता हैं। क्या यह मुझ पर छोटी कृपा है? फिर भी मेरे प्रभु नहीं कहते, ‘यह हमारा है, बेचारा बच्चा।’ हाय, कितनी कठोरता!

  39. மேம் பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து, ஆம்பரிசறிந்து கொண்டு ஐம்புலனகத்தடக்கி, காம்பறத் தலை சிரைத்துன் கடைத்தலை இருந்து வாழும், சோம்பரை உகத்தி போலும் சூழ் புனல் அரங்கத்தானே.

    Mem porul pogavittu meymmaiyai miga unarndhu, aamparisarindhu kondu aimpulanagaththadakki, kaambarath thalai siraiththun kadaiththalai irundhu vaazhum, sombarai ugaththi polum soozh punal arangaththaane.

    लगता है आप उन ‘आलसियों’ से प्रेम करते हैं जिन्होंने सांसारिक धन छोड़ दिया, सत्य को गहराई से समझा, सही जाना, पाँचों इंद्रियों को भीतर रोका, सिर मुँड़ाया, और आपके द्वार पर रहते हैं, हे जल से घिरे श्रीरंगम के स्वामी।

  40. அடிமையில் குடிமையில்லா அயல் சதுப்பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்பரேலும், முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற்கு அன்பு செய்யும், அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகருளானே.

    Adimaiyil kudimaiyillaa ayal chadhuppedhi maaril, kudimaiyil kadaimai patta kukkaril pirapparelum, mudiyinil thulabam vaiththaai moygazharku anbu seyyum, adiyarai ugaththi polum arangamaa nagarulaane.

    आपकी सेवा में कोई स्थान न रखने वाले चतुर्वेदी विद्वानों के बजाय, लगता है आप उन भक्तों से प्रेम करते हैं जो आपके चरणों से प्रेम करते हैं, चाहे वे सबसे नीची जाति में ही क्यों न जन्मे हों, हे मुकुट पर तुलसी धारण करने वाले, हे महान श्रीरंगम के स्वामी।

  41. திரு மறு மார்வ நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து, மருவிய மனத்தராகில் மாநிலத்து உயிர்களெல்லாம், வெருவரக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேலும், அருவினைப் பயனது உய்யார் அரங்கமா நகருளானே.

    Thiru maru maarva ninnaich chindhaiyul thigazha vaiththu, maruviya manaththaraagil maanilaththu uyirgalellaam, veruvarak kondru suttittu eettiya vinaiyarelum, aruvinaip payanadhu uyyaar arangamaa nagarulaane.

    हे प्रभु, जिनकी छाती पर लक्ष्मी और श्रीवत्स चिह्न है! यदि लोग आपको अपने मन में चमकता हुआ रखें और भक्त बने रहें, तो चाहे उन्होंने धरती के सारे प्राणियों को डराकर मारने और जलाने का कर्म किया हो, वे उस भयानक कर्म के फल से बच जाएँगे, हे महान श्रीरंगम के स्वामी।

  42. வானுளார் அறியலாகா வானவா என்பராகில், தேனுலாம் துளப மாலைச் சென்னியாய் என்பராகில், ஊனமாயினகள் செய்யும் ஊனகாரகர்களேலும், போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே.

    Vaanulaar ariyalaagaa vaanavaa enbaraagil, thenulaam thulaba maalaich chenniyaai enbaraagil, oonamaayinagal seyyum oonagaaragarkalelum, ponagam seydha sedam tharuvarel punidham andre.

    यदि लोग कहें, ‘हे दिव्य प्रभु, जिन्हें स्वर्गवासी भी नहीं जान पाते!’, या ‘हे सिर पर शहद भरी तुलसी-माला धारण करने वाले!’, तो चाहे वे बुरे काम करने वाले नीच लोग हों, उनके भोजन का बचा अंश, यदि वे दें, तो पवित्र है।

  43. பழுதிலா ஒழுகல் ஆற்றுப் பல சதுப்பேதிமார்கள், இழி குலத்தவர்களேலும் எம்மடியார்களாகில், தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்று நின்னோடும் ஒக்க, வழிபட அருளினாய் போல் மதிள் திருவரங்கத்தானே.

    Pazhudhilaa ozhugal aatrup pala chadhuppedhimaargal, izhi kulaththavargalelum emmadiyaargalaagil, thozhumineer kodumin kolmin endru ninnodum okka, vazhipada arulinaai pol madhil thiruvarangaththaane.

    आपने निर्दोष आचरण वाले अनेक चतुर्वेदी विद्वानों से कहा: ‘चाहे वे नीच कुल के हों, यदि वे मेरे भक्त हैं, तो उनकी पूजा करो, उन्हें दो और उनसे लो’, और उन्हें अपने बराबर पूजे जाने का अधिकार दिया, हे परकोटे वाले श्रीरंगम के स्वामी।

  44. அமரவோர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதித், தமர்களில் தலைவராய சாதி அந்தணர்களேலும், நுமர்களைப் பழிப்பராகில் நொடிப்பதோர் அளவில் ஆங்கே, அவர்கள் தாம் புலையர் போலும் அரங்கமா நகருளானே.

    Amaravor angam aarum vedham or naangum odhith, thamargalil thalaivaraaya saadhi andhanargalelum, numargalaip pazhipparaagil nodippadhor alavil aange, avargal thaam pulaiyar polum arangamaa nagarulaane.

    छहों वेदांग और चारों वेद पढ़े, अपने समाज के अगुआ ऊँचे कुल के ब्राह्मण भी, यदि आपके भक्तों का अपमान करें, तो उसी पल वे जाति से गिर जाते हैं, हे महान श्रीरंगम के स्वामी।

  45. பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான், எண்ணிலா ஊழி ஊழி தவம் செய்தார் வெள்கி நிற்ப, விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன்று அருளை ஈந்த, கண்ணறா உன்னை என்னோ களைகணாக் கருதுமாறே.

    Pennulaam sadaiyinaanum biramanum unnaik kaanbaan, ennilaa oozhi oozhi thavam seydhaar velgi nirpa, vinnulaar viyappa vandhu aanaikkandru arulai eendha, kannaraa unnai enno kalaigannaak karudhumaare.

    जटाओं में गंगा धारण करने वाले शिव और ब्रह्मा ने आपको देखने के लिए अनगिनत युगों तक तप किया और लज्जित खड़े रह गए; फिर भी आप स्वर्गवासियों को चकित करते हुए आए और हाथी पर कृपा की। हे कभी न चूकने वाली दया वाले, लोग आपको अपना सहारा क्यों नहीं मानते?

  46. வளவெழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள், கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலைத், துவளத் தொண்டாய தொல் சீர்த் தொண்டரடிப்பொடி சொல், இளைய புன் கவிதையேலும் எம்பிராற்கு இனியவாறே.

    Valavezhum thavala maada madhurai maanagaram thannul, kavalamaal yaanai kondra kannanai aranga maalaith, thuvalath thondaaya thol seerth thondaradippodi sol, ilaiya pun kavidhaiyelum embiraarku iniyavaare.

    ये शब्द प्राचीन गौरव वाले तोंडरडिप्पोडि के हैं, जो उन कण्णन, श्रीरंगम के माल, के समर्पित सेवक बने जिन्होंने समृद्ध सफ़ेद महलों वाली महान मथुरा नगरी में विशाल हाथी को मारा: चाहे ये छोटे, साधारण पद हों, हमारे प्रभु को ये मीठे लगते हैं।