திருப்பள்ளியெழுச்சி
Thiruppalliyezhuchi
தமேவ மத்வா பரவாஸுதேவம் ரங்கேசயம் ராஜவதர்ஹணீயம், ப்ராபோதிகீம் யோக்ருத ஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும் பகவந்தமீடே.
Thameva mathvaa paravaasudhevam Rangesayam raajavadharhaneeyam, praabodhikeem yokrutha sookthimaalaam bhakthaangrirenum bhagavanthameede.
मैं उन पावन भक्तांघ्रिरेणु ('भक्तों के चरणों की धूल') की स्तुति करता हूँ, जिन्होंने श्रीरंगम में लेटे प्रभु को स्वयं परम वासुदेव और राजा की तरह पूज्य मानकर उन्हें जगाने के लिए सुंदर पदों की माला रची।
மண்டங்குடி என்பர் மாமறையோர் மன்னிய சீர்த், தொண்டரடிப்பொடி தொன்னகரம் வண்டு, திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி, உணர்த்தும் பிரான் உதித்த ஊர்.
Mandangudi enbar maamaraiyor manniya seerth, Thondaradippodi thonnagaram vandu, thinarththa vayal Thennarangaththammaanaip palli, unarththum piraan udhiththa oor.
महान वेदज्ञ कहते हैं कि वह मंडंगुडि है: यशस्वी तोंडरडिप्पोडि का प्राचीन नगर, भौंरों से भरे खेतों के बीच, जहाँ दक्षिण श्रीरंगम के प्रभु को जगाने वाले संत का जन्म हुआ।
கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான், கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய், மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம், வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி, எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த, இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும், அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும், அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Kadhiravan gunadhisaich chigaram vandhu anaindhaan, kana irul agandradhu kaalai am pozhudhaai, madhu virindhu ozhugina maa malar ellaam, vaanavar arasargal vandhu vandhu eendi, edhirdhisai niraindhanar ivarodum pugundha, irungalitru eettamum pidiyodu murasum, adhirdhalil alaikadal pondruladhu engum, Arangaththammaa palli ezhundharulaaye.
सूरज पूर्व की चोटी पर आ गया है; घना अंधेरा छँट गया और सुहानी सुबह आ गई; खिलते हुए सारे बड़े फूलों से शहद बह रहा है। देवताओं के राजा भीड़ बनाकर तुम्हारे सामने आ गए हैं, और उनके साथ बड़े हाथियों के झुंड और नगाड़े भी, कि हर ओर उमड़ते समुद्र जैसा शोर है। हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
கொழுங்கொடி முல்லையின் கொழு மலர் அணவிக், கூர்ந்தது குணதிசை மாருதம் இதுவோ, எழுந்தன மலர் அணைப் பள்ளிகொள் அன்னம், ஈன்பனி நனைந்த தம் இருஞ் சிறகு உதறி, விழுங்கிய முதலையின் பிலம் புரை பேழ்வாய், வெள் எயிறு உற அதன் விடத்தினுக்கு அனுங்கி, அழுங்கிய ஆனையின் அருந்துயர் கெடுத்த, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Kozhungodi mullaiyin kozhu malar anavik, koorndhadhu gunadhisai maarudham idhuvo, ezhundhana malar anaip pallikol annam, eenpani nanaindha tham irunj chiragu udhari, vizhungiya mudhalaiyin pilam purai pezhvaai, vel eyiru ura adhan vidaththinukku anungi, azhungiya aanaiyin arunthuyar keduththa, Arangaththammaa palli ezhundharulaaye.
पूर्व की हवा हरी-भरी चमेली की बेल के घने फूलों को छूती हुई आ गई है; फूलों के बिछौने पर सोए हंस अपने बड़े पंखों से ओस झाड़ते हुए उठ गए हैं। हे वह, जिन्होंने उस हाथी का भयानक दुख मिटाया जो मगरमच्छ के गुफा जैसे जबड़ों के सफ़ेद दाँत गड़ने पर चीख उठा था — हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
சுடர் ஒளி பரந்தன சூழ் திசை எல்லாம், துன்னிய தாரகை மின்னொளி சுருங்கிப், படர் ஒளி பசுத்தனன் பனி மதி இவனோ, பாயிருள் அகன்றது பைம் பொழிற் கமுகின், மடலிடைக் கீறி வண் பாளைகள் நாற, வைகறை கூர்ந்தது மாருதம் இதுவோ, அடல் ஒளி திகழ் தரு திகிரி அம் தடக்கை, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Sudar oli parandhana soozh thisai ellaam, thunniya thaaragai minnoli surungip, padar oli pasuththanan pani madhi ivano, paayirul agandradhu paim pozhir kamugin, madalidaik keeri van paalaigal naara, vaigarai koorndhadhu maarudham idhuvo, adal oli thigazh tharu thigiri am thadakkai, Arangaththammaa palli ezhundharulaaye.
हर दिशा में तेज़ रोशनी फैल गई है; घने तारों की चमक फीकी पड़ गई और ठंडा चाँद पीला पड़ गया; फैला अंधेरा चला गया, और हरे उपवनों में सुपारी के पेड़ों से फूटती कलियों की सुगंध लिए भोर की हवा बह रही है। हे श्रीरंगम के प्रभु, जिनके विशाल हाथ में शक्तिशाली चमकता चक्र है, कृपा करके नींद से उठो।
மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள், வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும், ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள், இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை, வாட்டிய வரிசிலை வானவர் ஏறே, மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம், ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Mettu ila medhigal thalai vidum aayargal, veinguzhal osaiyum vidai manik kuralum, eettiya isai thisai parandhana vayalul, irindhana surumbinam Ilangaiyar kulaththai, vaattiya varisilai vaanavar ere, maa muni velviyaik kaaththu avabiradham, aattiya adu thiral Ayodhdhi em arase, Arangaththammaa palli ezhundharulaaye.
ऊँची ज़मीन पर भैंसों के बछड़े खोलते ग्वालों की बाँसुरी और बैलों की घंटियों की आवाज़ मिलकर हर दिशा में फैल गई है; खेतों में भौंरे बिखर गए हैं। हे देवताओं में श्रेष्ठ, जिनके धनुष ने लंका के कुल को मुरझा दिया, महान मुनि के यज्ञ की अंतिम विधि तक रक्षा करने वाले अयोध्या के पराक्रमी राजा — हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய், போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி, கலந்தது குணதிசைக் கனைகடல் அரவம், களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த, அலங்கல் அம் தொடையல் கொண்டு அடியிணை பணிவான், அமரர்கள் புகுந்தனர் ஆதலில் அம்மா, இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில், எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
Pulambina putkalum poom pozhilgalin vaai, poyitruk kangul pugundhadhu pulari, kalandhadhu gunadhisaik kanaikadal aravam, kali vandu mizhatriya kalambagam punaindha, alangal am thodaiyal kondu adiyinai panivaan, amarargal pugundhanar aadhalil ammaa, Ilangaiyarkon vazhipaadu sei koyil, emperumaan palli ezhundharulaaye.
फूलों भरे उपवनों में पक्षी पुकार रहे हैं; रात चली गई और भोर आ गई; पूर्वी समुद्र की गर्जना हवा में भर गई है। देवता मस्त भौंरों के गुंजन वाली मिले-जुले फूलों की मालाएँ लेकर तुम्हारे चरणों में झुकने आए हैं। इसलिए, हे उस मंदिर के मेरे प्रभु जहाँ लंका के राजा पूजा करते हैं, कृपा करके नींद से उठो।
இரவியர் மணி நெடுந்தேரொடும் இவரோ, இறையவர் பதினொரு விடையரும் இவரோ, மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ, மருதரும் வசுக்களும் வந்து வந்து ஈண்டி, புரவியொடு ஆடலும் பாடலும் தேரும், குமர தண்டம் புகுந்து ஈண்டிய வெள்ளம், அருவரை அனைய நின் கோயில் முன் இவரோ, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Iraviyar mani nedundherodum ivaro, iraiyavar padhinoru vidaiyarum ivaro, maruviya mayilinan Arumugan ivano, marudharum vasukkalum vandhu vandhu eendi, puraviyodu aadalum paadalum therum, kumara thandam pugundhu eendiya vellam, aruvarai anaiya nin koyil mun ivaro, Arangaththammaa palli ezhundharulaaye.
क्या ये अपने ऊँचे रत्नजड़ित रथों के साथ सूर्य हैं? क्या ये बैलों पर सवार ग्यारह रुद्र हैं? क्या यह मोर वाले छह मुखों के मुरुगन हैं? मरुत और वसु भी भीड़ बनाकर आ गए हैं; घोड़ों, नर्तकों, गायकों, रथों और कुमार की सेना की बाढ़ तुम्हारे पर्वत जैसे मंदिर के सामने भर गई है। हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ, அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ, இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ, எம்பெருமான் உன கோயிலின் வாசல், சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க, இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான், அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Andharaththu amarargal koottangal ivaiyo, arundhava munivarum marudharum ivaro, Indhiran aanaiyum thaanum vandhu ivano, emperumaan una koyilin vaasal, sundharar nerukka vichchaadharar nookka, iyakkarum mayanginar thiruvadi thozhuvaan, andharam paar idam illai matru idhuvo, Arangaththammaa palli ezhundharulaaye.
क्या ये आकाश के देवताओं की भीड़ है? क्या ये महान तपस्वी मुनि और मरुत हैं? क्या यह अपने हाथी के साथ आए इंद्र हैं? हे मेरे प्रभु, तुम्हारे मंदिर के द्वार पर गंधर्व धक्का-मुक्की कर रहे हैं, विद्याधर ठेल रहे हैं, और यक्ष तुम्हारे पावन चरणों की पूजा की चाह में बेसुध हैं; आकाश और धरती में कहीं जगह नहीं बची। हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க, மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா, எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு, ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர், தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ, தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி, அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய், அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Vambavizh vaanavar vaayurai vazhanga, maanidhi kabilai on kannaadi mudhalaa, emperumaan padimakkalam kaandarku, erpana aayina kondu nan munivar, Thumburu Naaradhar pugundhanar ivaro, thondrinan iraviyum thulangu oli parappi, ambara thalaththinindru agalgindradhu irul poi, Arangaththammaa palli ezhundharulaaye.
सुगंधित देवता स्तुति के वचन अर्पित कर रहे हैं; भले मुनि वह सब लाए हैं जो जागते ही तुम्हारे देखने योग्य है: बड़ा धन, कपिला गाय, चमकता दर्पण और भी बहुत कुछ। क्या वे तुंबुरु और नारद आ रहे हैं? सूरज उग आया है, उजली रोशनी फैला रहा है, और अंधेरा आकाश से जा रहा है। हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
ஏதம் இல் தண்ணுமை எக்கம் மத்தளி, யாழ் குழல் முழவமோடு இசை திசை கெழுமி, கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள், கெந்தருவர் அவர் கங்குலுள் எல்லாம், மாதவர் வானவர் சாரணர் இயக்கர், சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான், ஆதலில் அவர்க்கு நாள் ஓலக்கம் அருள, அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
Edham il thannumai ekkam maththali, yaazh kuzhal muzhavamodu isai thisai kezhumi, geedhangal paadinar kinnarar kerudargal, kendharuvar avar kangulul ellaam, maadhavar vaanavar saaranar iyakkar, siththarum mayanginar thiruvadi thozhuvaan, aadhalil avarkku naal olakkam arula, Arangaththammaa palli ezhundharulaaye.
अनेक प्रकार के निर्दोष ढोल, वीणा, बाँसुरी और मृदंग हर दिशा को संगीत से भर रहे हैं; किन्नर, गरुड़ और गंधर्व सारी रात गीत गाते रहे; महान तपस्वी, देवता, चारण, यक्ष और सिद्ध तुम्हारे पावन चरणों की पूजा की चाह में बेसुध हैं। इसलिए उन्हें सुबह के दर्शन देने के लिए, हे श्रीरंगम के प्रभु, कृपा करके नींद से उठो।
கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ, கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ, துடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறித், துகில் உடுத்து ஏறினர் சூழ் புனல் அரங்கா, தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து, தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும், அடியனை அளியன் என்று அருளி உன் அடியார்க்கு, ஆட்படுத்தாய் பள்ளி எழுந்தருளாயே.
Kadimalark kamalangal malarndhana ivaiyo, kadhiravan kanaikadal mulaiththanan ivano, thudiyidaiyaar suri kuzhal pizhindhu udharith, thugil uduththu erinar soozh punal Arangaa, thodai oththa thulavamum koodaiyum polindhu, thondriya thol Thondaradippodi ennum, adiyanai aliyan endru aruli un adiyaarkku, aatpaduththaai palli ezhundharulaaye.
सुगंधित कमल खिल गए हैं; गरजते समुद्र से सूरज उग आया है; पतली कमर वाली स्त्रियाँ अपने घुंघराले बाल निचोड़कर, कपड़े पहनकर नहाकर निकल आई हैं। हे जल से घिरे रंगनाथ: फूलों की टोकरी और उचित तुलसी-माला कंधे पर धरे तोंडरडिप्पोडि नाम के इस सेवक को कृपा करके योग्य मानो, उसे अपने भक्तों का सेवक बनाओ, और कृपा करके नींद से उठो।