भक्ति दरबार
English

திருப்பல்லாண்டு

Thiruppallandu

स्तोत्र · तमिल · विष्णु · पेरियाऴ्वार्

  1. குருமுகம் அநதீத்ய ப்ராஹ வேதாந் அசேஷாந், நரபதி பரிக்லுப்தம் சுல்கம் ஆதாதுகாம:, ச்வசுரம் அமரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத், த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.

    Gurumukham anadheethya praaha vedhaan aseshaan, narapathi pariklupthum sulkam aadhaathukaamah, svasuram amaravandhyam Ranganaathasya saakshaath, dhvijakula thilakam tham Vishnuchiththam namaami.

    मैं ब्राह्मण कुल के तिलक विष्णुचित्त को प्रणाम करता हूँ, जिन्होंने किसी गुरु से पढ़े बिना राजा का रखा इनाम जीतने के लिए सारे वेदों की व्याख्या की; देवता भी जिनका आदर करते हैं, और जो स्वयं रंगनाथ के ससुर हैं।

  2. மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால், சொன்னார் கழற்கமலம் சூடினோம் முன்னாள், கிழியறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினிற் சேரும், வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

    Minnaar thadamadhil soozh Villipuththoor endru orukaal, sonnaar kazharkamalam soodinom munnaal, kizhiyaruththaan endru uraiththom keezhmaiyinir serum, vazhiyaruththom nenjame vandhu.

    जो एक बार भी कहे, 'चौड़ी चमकती दीवारों से घिरा विल्लिपुत्तूर', हम उसके कमल-चरण सिर पर धरते हैं। हे मन, जब हमने कहा, 'उन्होंने इनाम की थैली जीती', तभी हमने नीचता की ओर जाने वाला हर रास्ता काट दिया।

  3. பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான் என்று, ஈண்டிய சங்கம் எடுத்தூத வேண்டிய, வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான், பாதங்கள் யாமுடைய பற்று.

    Paandiyan kondaadap Pattarbiraan vandhaan endru, eendiya sangam eduththoodha vendiya, vedhangal odhi viraindhu kizhiyaruththaan, paadhangal yaamudaiya patru.

    जब पांड्य राजा ने उत्सव मनाया और इकट्ठी भीड़ ने 'भट्टरपिरान आ गए!' कहकर शंख बजाए, तब उन्होंने तुरंत आवश्यक वेदों की व्याख्या करके इनाम की थैली जीती — उनके चरण ही हमारा सहारा हैं।

  4. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு.

    Pallaandu pallaandu pallaayiraththaandu palakodi nooraayiram, mallaanda thinthol Manivannaa un sevvadi sevvi thirukkaappu.

    अनेक वर्ष, अनेक वर्ष, हज़ारों वर्ष, करोड़ों-करोड़ों वर्ष — हे मणि-वर्ण प्रभु, जिनकी मज़बूत भुजाओं ने पहलवानों को हराया, तुम्हारे सुंदर लाल चरण सदा सुरक्षित रहें।

  5. அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு, வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு, வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

    Adiyomodum ninnodum pirivindri aayiram pallaandu, vadivaai nin vala maarbinil vaazhgindra mangaiyum pallaandu, vadivaar sodhi valaththuraiyum sudaraazhiyum pallaandu, padaipor pukku muzhangum appaanchasanniyamum pallaande.

    हम सेवक और तुम हज़ारों वर्ष बिना बिछड़े साथ रहें; तुम्हारे वक्ष के दाहिने भाग पर सुंदरता से बसने वाली लक्ष्मी चिरंजीवी हों; तुम्हारे दाहिने हाथ का दमकता चक्र चिरंजीवी हो; युद्ध में गरजने वाला पांचजन्य शंख भी चिरंजीवी हो।

  6. வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின், கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம், ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை, பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

    Vaazhaatpattu nindreer ulleerel vandhu mannum manamum konmin, koozhaatpattu nindreergalai engal kuzhuvinil pugudhalottom, ezhaatkaalum pazhippilom naangal iraakkadhar vaazh Ilangai, paazhaalaagap padai porudhaanukkup pallaandu kooruthume.

    तुममें से जिसने सच्चे जीवन के लिए खुद को उनकी सेवा में दे दिया है, वह आकर इस पावन काम में जुड़े; जो केवल भोजन के लिए सेवा करते हैं, उन्हें हम अपने दल में नहीं आने देंगे। सात पीढ़ियों से हम निर्दोष हैं, और हम उन प्रभु के लिए 'चिरंजीवी हों!' गाते हैं जिन्होंने युद्ध करके राक्षसों की लंका को खंडहर बना दिया।

  7. ஏடு நிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து, கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ, நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று, பாடு மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.

    Edu nilaththil iduvadhan munnam vandhu engal kuzhaam pugundhu, koodu manamudaiyeergal varamboli vandhu ollaik koodumino, naadum nagaramum nangariya namo Naaraayanaaya endru, paadu manamudaip paththarulleer vandhu pallaandu koorumine.

    हे परम लक्ष्य की चाह रखने वालो, समय बीतने से पहले आकर हमारे दल में जुड़ जाओ; जल्दी आओ, कुछ भी रोके बिना। हे भक्तो, जिनका मन 'नमो नारायणाय' गाने को तरसता है ताकि गाँव-शहर सब जानें — आओ और 'चिरंजीवी हों!' गाओ।

  8. அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை, இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு, தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லி, பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே.

    Andak kulaththukku adhipadhiyaagi asurar iraakkadharai, indaik kulaththai eduththuk kalaindha Irudigesan thanakku, thondak kulaththil ulleer vandhu adithozhudhu aayira naamam solli, pandaik kulaththaith thavirndhu pallaandu pallaayiraththaandu enmine.

    हे सेवकों के कुल वालो, आओ और सारे लोकों के स्वामी हृषीकेश के चरणों की पूजा करो, जिन्होंने असुरों और राक्षसों के पूरे उलझे कुल को उखाड़ फेंका; उनके हज़ार नाम जपो, अपनी पुरानी राह छोड़ो, और कहो, 'अनेक वर्ष, हज़ारों वर्ष!'

  9. எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி, வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில், அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்தவனை, பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே.

    Endhai thandhai thandhai thandhai tham mooththappan ezhpadikaal thodangi, vandhu vazhivazhi aatcheigindrom thiruvonath thiruvizhavil, andhiyam podhil ariyuruvaagi ariyai azhiththavanai, pandhanai theerap pallaandu pallaayiraththaandu endru paadudhume.

    मेरे पिता, उनके पिता, उनके पिता और उनके दादा से लेकर सात पीढ़ियों से हम पीढ़ी-दर-पीढ़ी तुम्हारी सेवा करते आए हैं। पावन तिरुवोणम उत्सव में हम उन प्रभु के लिए 'अनेक वर्ष, हज़ारों वर्ष!' गाते हैं, जिन्होंने संध्या के समय सिंह का रूप लेकर शत्रु का नाश किया, ताकि उनकी थकान मिट जाए।

  10. தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின், கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம், மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழி குருதி, பாயச் சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

    Theeyir poligindra senjudaraazhi thigazh thiruchchakkaraththin, koyir poriyaale otrundu nindru kudikudi aatcheigindrom, maayap porupadai Vaananai aayiran tholum pozhi kurudhi, paayach chuzhatriya aazhi vallaanukkup pallaandu kooruthume.

    आग से भी तेज़ लाल चमकते पावन चक्र की मंदिर-मुहर से अंकित होकर हम पीढ़ियों से तुम्हारी सेवा कर रहे हैं। हम उस चक्रधारी के लिए 'चिरंजीवी हों!' गाते हैं, जिन्होंने चक्र ऐसे घुमाया कि छली योद्धा बाणासुर की हज़ारों भुजाओं से खून बह निकला।

  11. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும், கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும், மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல, பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

    Neyyidai nalladhor sorum niyadhamum aththaanich chevagamum, kaiyadaikkaayum kazhuththukkup poonodu kaadhukkuk kundalamum, meiyida nalladhor saandhamum thandhu ennai velluyiraakka valla, paiyudai naagap pagaik kodiyaanukkup pallaandu kooruvane.

    उन्होंने मुझे घी वाला बढ़िया भात, अपने दरबार में रोज़ की सेवा, हाथ में पान, गले के गहने और कानों के कुंडल, और शरीर पर लगाने को अच्छा चंदन दिया, और वे मेरी आत्मा को निर्मल कर सकते हैं — फन वाले नाग के शत्रु गरुड़ के ध्वज वाले उन प्रभु के लिए मैं कहता हूँ, 'चिरंजीवी हों!'

  12. உடுத்துக் களைந்த நின் பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு, தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம், விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில், படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

    Uduththuk kalaindha nin peedhagavaadai uduththuk kalaththadhundu, thoduththa thuzhaai malar soodik kalaindhana soodum iththondargalom, viduththa thisaik karumam thiruththith thiruvonath thiruvizhavil, paduththa painnaaganaip palli kondaanukkup pallaandu kooruthume.

    हम ऐसे सेवक हैं जो तुम्हारा पहनकर उतारा पीला रेशम पहनते हैं, तुम्हारी थाली का प्रसाद खाते हैं, और तुम्हारी पहनकर उतारी तुलसी-माला पहनते हैं। तुम्हारे भेजे हर दिशा के काम पूरे करके, पावन तिरुवोणम उत्सव में हम फन वाले नाग पर लेटे प्रभु के लिए 'चिरंजीवी हों!' गाते हैं।

  13. எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்று எழுத்துப்பட்ட, அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண், செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய, பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.

    Ennaal emperumaan undhanakku adiyom endru ezhuththuppatta, annaale adiyongal adikkudil veedupetru uyndhadhu kaan, sennaal thotrith thirumadhuraiyul silaikuniththu aindhalaiya, painnaagath thalaip paayndhavane unnaip pallaandu kooruthume.

    हे मेरे प्रभु, जिस दिन लिखा गया कि हम तुम्हारे सेवक हैं, उसी दिन हमारी सेवकों की पूरी वंश-परंपरा का उद्धार हो गया और उसे मुक्ति मिल गई। हे शुभ दिन जन्मे, पावन मथुरा में धनुष झुकाने वाले, और पाँच फन वाले नाग के सिरों पर कूदने वाले — हम तुम्हारे लिए 'चिरंजीवी हों!' गाते हैं।

  14. அல்வழக்கு ஒன்றும் இல்லா அணி கோட்டியர் கோன் அபிமானதுங்கன், செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன், நல்வகையால் நமோ நாராயணா என்று நாமம் பல பரவி, பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே.

    Alvazhakku ondrum illaa ani Kottiyar kon abimaana thungan, selvanaip polath Thirumaale naanum unakkup pazhavadiyen, nalvagaiyaal namo Naaraayanaa endru naamam pala paravi, palvagaiyaalum paviththirane unnaip pallaandu kooruvane.

    हे तिरुमाल, सुंदर तिरुक्कोट्टियूर के श्रेष्ठ मुखिया सेल्वनंबि की तरह, जहाँ कोई अन्याय नहीं होता, मैं भी तुम्हारा पुराना सेवक हूँ। 'नमो नारायण' कहकर तुम्हारे अनेक नामों का सही ढंग से गुणगान करते हुए, हे पवित्र प्रभु, मैं हर तरह से तुम्हारे दीर्घ जीवन की कामना करता हूँ।

  15. பல்லாண்டு என்று பவித்திரனைப் பரமேட்டியைச் சார்ங்கம் என்னும், வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல், நல்லாண்டு என்று நவின்று உரைப்பார் நமோ நாராயணாய என்று, பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே.

    Pallaandu endru paviththiranaip paramettiyaich chaarngam ennum, villaandaan thannai Villipuththoor Vittuchiththan virumbiya sol, nallaandu endru navindru uraippaar namo Naaraayanaaya endru, pallaandum paramaathmanaich choozhndhirundhu eththuvar pallaande.

    जो विल्लिपुत्तूर के विष्णुचित्त के प्रिय इन शब्दों को खुशी से पढ़ते हैं, जिनमें शार्ङ्ग धनुष धारण करने वाले पवित्र परमेश्वर के दीर्घ जीवन की कामना है, वे 'नमो नारायणाय' कहते हुए अनंत वर्षों तक परमात्मा के पास रहकर उनकी स्तुति करेंगे।