भक्ति दरबार
English

வாடினேன் வாடி

Vaadinen Vaadi

स्तोत्र · तमिल · विष्णु · तिरुमंगै आलवार

  1. வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால், பெருந் துயர் இடும்பையில் பிறந்து, கூடினேன் கூடி இளையவர் தம்மோடு, அவர் தரும் கலவியே கருதி, ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால், உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து, நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Vaadinen vaadi varundhinen manaththaal, perundhuyar idumbaiyil pirandhu, koodinen koodi ilaiyavar thammodu, avar tharum kalaviye karudhi, odinen odi uyvadhor porulaal, unarvu ennum perumpadham thirindhu, naadinen naadi naan kandukonden, naaraayanaa ennum naamam.

    मैं मुरझाया, और मुरझाकर मन में दुःख झेला, बड़े दुःख और कष्ट में जन्म लेकर; मैं युवतियों के साथ घुला-मिला, केवल उनके दिए सुख के बारे में सोचता रहा; मैं दौड़ता ही रहा। फिर उद्धार करने वाली एक चीज़ के सहारे मैं चेतना नाम की महान अवस्था की ओर मुड़ा, और खोजते-खोजते मैंने ‘नारायण’ नाम पा लिया।

  2. ஆவியே அமுதே என நினைந்து உருகி, அவர் அவர் பணை முலை துணையாப், பாவியேன் உணராது எத்தனை பகலும், பழுதுபோய் ஒழிந்தன நாள்கள், தூவி சேர் அன்னம் துணையொடும் புணரும், சூழ் புனல் குடந்தையே தொழுது என், நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Aaviye amudhe ena ninaindhu urugi, avar avar panai mulai thunaiyaap, paaviyen unaraadhu eththanai pagalum, pazhudhupoi ozhindhana naalgal, thoovi ser annam thunaiyodum punarum, soozh punal kudandhaiye thozhudhu en, naavinaal uyya naan kandukonden, naaraayanaa ennum naamam.

    स्त्रियों को ‘मेरे प्राण, मेरा अमृत’ समझकर, पिघलकर, उन्हें ही अपना सहारा मानकर, मुझ पापी ने कभी नहीं समझा, और कितने ही दिन व्यर्थ बीत गए। अब जल से घिरे कुडंदै में, जहाँ पंखों वाले हंस अपने साथियों से मिलते हैं, पूजा करके मैंने, ताकि मेरी जीभ मुझे बचा ले, ‘नारायण’ नाम पा लिया।

  3. சேமமே வேண்டி தீவினை பெருக்கி, தெரிவைமார் உருவமே மருவி, ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய், ஒழிந்தன கழிந்த அந் நாள்கள், காமனார் தாதை நம்முடை அடிகள், தம் அடைந்தார் மனத்து இருப்பார், நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Semame vendith theevinai perukkith, therivaimaar uruvame maruvi, oomanaar kanda kanavilum pazhudhaai, ozhindhana kazhindha an naalgal, kaamanaar thaadhai nammudai adigal, tham adaindhaar manaththu iruppaar, naamam naan uyya naan kandukonden, naaraayanaa ennum naamam.

    केवल अपना सुख चाहकर मैंने बुरे कर्म बढ़ाए और स्त्रियों के रूप से चिपका रहा; वे बीते दिन किसी गूँगे के देखे सपने से भी ज़्यादा व्यर्थ गए। उद्धार के लिए मैंने कामदेव के पिता, हमारे प्रभु का नाम पा लिया, जो शरण आने वालों के मन में बसते हैं: ‘नारायण’ नाम।

  4. வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி, வேல்கணார் கலவியே கருதி, நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன், என் செய்கேன் நெடு விசும்பு அணவும், பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட, பாழியான் ஆழியான் அருளே, நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Vendriye vendi veezhporutku irangi, velkanaar kalaviye karudhi, nindravaa nillaa nenjinai udaiyen, en seygen nedu visumbu anavum, pandriyaai andru paaragam keenda, paazhiyaan aazhiyaan arule, nandru naan uyya naan kandukonden, naaraayanaa ennum naamam.

    केवल जीत चाहकर, हाथ से निकलते धन पर दुखी होकर, भाले-सी आँखों वाली स्त्रियों से मिलन के बारे में ही सोचकर, मेरा मन वहाँ नहीं टिकता जहाँ उसे टिकना चाहिए। मैं क्या करूँ? उन पराक्रमी चक्रधारी प्रभु की कृपा से, जिन्होंने उस दिन ऊँचे आकाश तक पहुँचने वाले वराह बनकर धरती को खोद निकाला, मैंने सच्चे उद्धार के लिए ‘नारायण’ नाम पा लिया।

  5. கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன், கண்டவா திரிதந்தேனேலும், தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன், சிக்கெனத் திருவருள் பெற்றேன், உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன், உடம்பு எலாம் கண்ண நீர் சோர, நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன், நாராயணா என்னும் நாமம்.

    Kalvanen aanen padiru seydhiruppen, kandavaa thiridhandhenelum, thelliyen aanen sel kadhikku amaindhen, sikkenath thiruvarul petren, ul elaam urugik kural thazhuththu ozhindhen, udambu elaam kanna neer sora, nal irul alavum pagalum naan azhaippan, naaraayanaa ennum naamam.

    मैं चोर बना, छल से जिया और जहाँ मन किया घूमता रहा; फिर भी अब मैं निर्मल हो गया हूँ, आगे की राह के लिए तैयार हूँ, और मुझे दृढ़ता से पावन कृपा मिल गई है। भीतर सब पिघल जाता है, आवाज़ भर्रा जाती है, पूरे शरीर पर आँसू बहते हैं; गहरी रात और दिन भर मैं ‘नारायण’ नाम पुकारता हूँ।

  6. எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம், எனக்கு அரசு என்னுடை வாழ்நாள், அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி, அவர் உயிர் செகுத்த எம் அண்ணல், வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை, மா மணிக் கோயிலே வணங்கி, நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Embiraan endhai ennudaich chutram, enakku arasu ennudai vaazhnaal, ambinaal arakkar verukkola nerukki, avar uyir seguththa em annal, vambulaam solai maamadhil thanjai, maamanik koyile vanangi, nambigaal uyya naan kandukonden, naaraayanaa ennum naamam.

    वे मेरे प्रभु हैं, मेरे पिता, मेरे परिजन, मेरे राजा, मेरा पूरा जीवन; हमारे महान प्रभु, जिन्होंने अपने बाणों से राक्षसों को इतना दबाया कि वे डर गए, और उनके प्राण ले लिए। सुगंधित उपवनों और विशाल परकोटे वाले तंजै के महान मणि-मंदिर में झुककर, हे भले लोगो, मैंने उद्धार का मार्ग पा लिया: ‘नारायण’ नाम।

  7. இல் பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர், இன்னது ஓர் தன்மை என்று உணரீர், கற்பகம் புலவர் களைகண் என்று உலகில், கண்டவா தொண்டரைப் பாடும், சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின், சூழ் புனல் குடந்தையே தொழுமின், நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின், நாராயணா என்னும் நாமம்.

    Il pirappu ariyeer ivar avar enneer, innadhor thanmai endru unareer, karpagam pulavar kalaigan endru ulagil, kandavaa thondaraip paadum, sol porul aaleer sollugen vammin, soozh punal kudandhaiye thozhumin, nal porul kaanmin paadi neer uymin, naaraayanaa ennum naamam.

    तुम अपना मूल नहीं जानते, कौन कौन है यह नहीं पहचानते, चीज़ों का सच्चा स्वभाव नहीं समझते; हे कवियो, जो शब्द और अर्थ खर्च करके साधारण लोगों को कल्पवृक्ष और कवियों का सहारा कहकर गाते हो: आओ, मैं बताता हूँ। जल से घिरे कुडंदै में पूजा करो; सच्चा ख़ज़ाना देखो; उसे गाकर उद्धार पाओ: ‘नारायण’ नाम।

  8. கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும், கருத்துளே திருத்தினேன் மனத்தை, பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை, பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம், செற்றமே வேண்டித் திரிதருவேன் தவிர்ந்தேன், செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி, நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன், நாராயணா என்னும் நாமம்.

    Katrilen kalaigal aimpulan karudhum, karuththule thiruththinen manaththai, petrilen adhanaal pedhaiyen nanmai, peru nilaththu aar uyirkku ellaam, setrame vendith thiridharuven thavirndhen, sel kadhikku uyyum aaru enni, nal thunaiyaagap patrinen adiyen, naaraayanaa ennum naamam.

    मैंने कलाएँ नहीं सीखीं; अपने मन को केवल पाँच इंद्रियों की चाहत में साधा, इसलिए मूर्ख मुझे कोई भलाई नहीं मिली। मैं विशाल धरती के हर प्राणी का बुरा चाहकर घूमता था; अब वह छोड़ दिया। आगे की राह में उद्धार का सोचकर, मुझ दास ने अपने अच्छे साथी के रूप में ‘नारायण’ नाम को कसकर पकड़ लिया है।

  9. குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார், படு துயர் ஆயின எல்லாம், நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும், அருளொடு பெரு நிலம் அளிக்கும், வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற, தாயினும் ஆயின செய்யும், நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.

    Kulam tharum selvam thandhidum adiyaar, padu thuyar aayina ellaam, nilam tharam seyyum neel visumbu arulum, arulodu peru nilam alikkum, valam tharum matrum thandhidum petra, thaayinum aayina seyyum, nalam tharum sollai naan kandukonden, naaraayanaa ennum naamam.

    यह अच्छा कुल और धन देता है; भक्तों के सारे दुःखों को मिट्टी में मिला देता है; ऊँचा स्वर्ग देता है, और कृपा से विशाल धरती भी; बल और बाकी सब देता है; जन्म देने वाली माँ से भी ज़्यादा भला करता है। मैंने सब भलाई देने वाला शब्द पा लिया: ‘नारायण’ नाम।

  10. மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர், மங்கையார் வாள் கலிகன்றி, செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை, இவை கொண்டு சிக்கென தொண்டீர், துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின், துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம், நஞ்சு தான் கண்டீர் நம்முடை வினைக்கு, நாராயணா என்னும் நாமம்.

    Manju ulaam solai vandu arai maaneer, mangaiyaar vaal kalikandri, senjolaal eduththa deiva nal maalai, ivai kondu sikkena thondeer, thunjumpodhu azhaimin thuyar varil ninaimin, thuyar ileer sollilum nandraam, nanju thaan kandeer nammudai vinaikku, naaraayanaa ennum naamam.

    हे भक्तो, बादल छूते उपवनों, गुनगुनाते भौंरों और विशाल जल वाले मंगै के तलवारधारी राजा कलिकंद्रि द्वारा शुद्ध शब्दों में बनाई इस सुंदर दिव्य माला को कसकर थामो। मरते समय इसे पुकारो; संकट आए तो इसे याद करो; संकट न हो तब भी इसे कहना अच्छा है। देखो: ‘नारायण’ नाम हमारे कर्मों के लिए विष है।